உலகளவில் பார்த்தால் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ்-ஃபேட்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது இதயத்தின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகும். குறிப்பாக அல்ட்ரா-பிராசஸ் செய்யப்படும் நொறுக்குத் தீனிகளைச் சொல்லலாம். இதயத்திற்கு நன்மை செய்யும் உணவை எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் எடுத்துக்கொள்ளும் சிறிய விஷயங்கள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி பழக்கமும் இருப்பது முக்கியம் என்று பெங்களூரைச் சேர்ந்த உணவியல் நிபுணரான பாலக் T புனாமியா கூறுகிறார்.
சாச்சுரேட் ஆன மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற உட்பொருட்கள் அதிகளவில் உள்ள உணவையோ அதிகம் உப்பு உள்ள உணவையோ எடுத்துக்கொள்வதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல் பருமனும் நீரிழிவு நோயும் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதுவும் இதய நோய் உண்டாவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.
“நல்ல உணவுமுறை என்பது பச்சைக் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றையும் அவ்வப்போது சிக்கன், மீன், முட்டை போன்ற அசைவ உணவையும் உள்ளடக்கியதாகும்,” என்று மும்பையில் உள்ள SRV மருத்துவமனையில் இதயவியல் ஆலோசகராக உள்ள மருத்துவர் ஜெய்தீப் ராஜேபகதூர் சொல்கிறார்.
ஆரோக்கியமான இதயத்திற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- சிவப்பு இறைச்சி (ரெட் மீட்)
சிவப்பு இறைச்சியில் அதிகளவில் LDS (லோ-டென்சிட்டி லிப்போபுரோட்டின்கள் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால்) மற்றும் டிரைகிளிஸரைடு (ஒரு வகையான கொழுப்பு) அதிகம் இருப்பதால் அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சென்னையில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் கார்டியோதொராசிக் வாஸ்குலார் அறுவை சிகிச்சை நிபுணரான, டாக்டர் தேஜஸ்வி N மார்லா தெரிவிக்கிறார்.
அத்துடன் அசைவ உணவைச் சாப்பிடும்போது மாமிசத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுமாறும் தோல் மற்றும் பிற உறுப்புகளைத் தவிர்க்குமாறும், மருத்துவர் மார்லா பரிதுரைக்கிறார். ஏனெனில் அவற்றில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருக்கும்.
- பிரெட் மற்றும் பேக்கரி பொருட்கள்
வீட்டில் பேக்கிங் செய்யப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது தவறில்லை. ஆனால் வெளியில் வாங்கும் பேக்கிங் உணவு வகைகள் பதப்படுத்தப்பட்டவை என்பதாலும் அவை கார்போஹைட்ரேட்கள் அதிகமுள்ள உணவு வகைகள் என்பதாலும் அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று புனாமியா கூறுகிறார். “அதற்குப் பதிலாக, சிறுதானிய பிரெட், பிரவுன் பிரெட், ஆட்டா கலக்காத பிரெட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்” என்று, மருத்துவர் ராஜேபகதூர் தெரிவிக்கிறார்.
பிரெட் மற்றும் பேக்கரி பொருட்களைத் தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “பிரெட்டின் எக்ஸ்பைரி தேதியை நீட்டிக்கவும், அதை ஃப்லஃபியாக மாற்றவும் உப்பு மற்றும் பிற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன” என்கிறார், மருத்துவர் மார்லா. இது உங்களின் தொடர்ச்சியான வளர்சிதை சுழற்சிகளில் தலையிட்டு, நீண்டகால அடிப்படையில் உங்கள் உடல் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- ஐஸ் கிரீம் மற்றும் சாக்லேட்கள்
ஐஸ் கிரீம் மற்றும் சாக்லேட்களில் அதிக அளவிலான சர்க்கரை, கார்போஹைட்ரேட், கெட்ட கொழுப்பு ஆகியவை இருக்கும். “பெரும்பாலான இவை எம்ப்ட்டி கலோரிகளை (குறைந்த அளவிலான அல்லது முற்றிலும் ஊட்டச்சத்து என்பதே இருக்காது) கொண்டிருக்கும். இவற்றை ஜீரணிப்பது கடினம் என்பதுடன் காலப்போக்கில் இது உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று, மருத்துவர் ராஜே பகதூர் தெரிவிக்கிறார். அதோடு அவர் ஐஸ் கிரீம் மற்றும் சாக்லேட்களை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவை உங்கள் உணவு முறையில் ஒரு பகுதியாக மாறிவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஒரு மாதத்தில் ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீம் எடுத்துக்கொள்ளலாம் என்று, மருத்துவர் மார்லா பரிந்துரை செய்கிறார். “எப்போதாவது மிதமான அளவில் சாப்பிடலாம் என்றாலும் அவை பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்படுபவை என்பதால் முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது “, என்று, மருத்துவர் பூனமியா தெரிவிக்கிறார்.
- எண்ணெய்
சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ள எண்ணெய்களைத் தவிர்ப்பது நல்லது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ள தேங்காய் எண்ணெய் உங்கள் LDL கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கக்கூடும். “இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் செக்கு எண்ணெய்களை ( HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்) பயன்படுத்தலாம்,” என்று பூனமியா கூறுகிறார்.
ஆனால், மருத்துவர் மார்லாவின் கூற்றுப்படி எந்த எண்ணெயாக இருந்தாலும் ஓரளவுக்கு மேல் எடுத்துக் கொண்டால் ஆபத்துதான் என்கிறார். எண்ணெயில் நல்ல எண்ணெய் என்று எதுவும் இல்லை என்கிறார். எனவே, எந்த எண்ணெயை எடுத்துக்கொண்டாலும் அதை அளவாக எடுத்துக்கொள்ளுமாறு அவர் பரிந்துரைக்கிறார்.
- உப்பு
முடிந்தளவு உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் அதிக உப்பைத் தவிர்க்க வேண்டும். “உப்பில் இருக்கும் சோடியம் குளோரைடு ரத்த நாளங்களில் சரிசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார், மருத்துவர் மார்லா.
இதய நோய்கள் உள்ளவர்கள் சோடியத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதால் உணவு அல்லது பழங்களின் சுவையைக் கூட்ட உப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஓரிகானோ, லெமன் ஜூஸ், கறுப்பு மிளகு வினிகர் போன்ற மூலிகை வகைகளைப் பயன்படுத்தவும்.
- ஃப்ரோஸ் செய்தவை, பேக் செய்தவை மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்.
“நாம் வாங்குகின்ற ஃபாஸ்ட் ஃபுட், பேக் செய்த, ஃப்ரோஸ் செய்த உணவில் MSG (மோனோசோடியம் கேனில் பேக் செய்த உணவுகளில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சோடியம் அதிகம் இருக்கும்.
உடனடியாகச் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு, பேக் செய்த ஜூஸ்கள், கேனில் அடைத்த உணவு, உப்பு சேர்த்த வெண்ணெய், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்திய சீஸ், ப்ரிசெர்வ் செய்த மாமிசம் ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். சாஸ் மற்றும் ஊறுகாய்களைத் தவிர்ப்பதும் நல்லது. “அவற்றில் அதிக அளவில், உப்பு அல்லது பிற பதப்படுத்தும் பொருட்கள் போன்ற தேவையற்ற பொருட்கள் இருப்பதால் அவற்றை எடுத்துக்கொள்வது நல்ல விஷயமாக இருக்காது” என்கிறார், டாக்டர் ராஜேபகதூர். சில நேரங்களில் இந்த உணவுகள் வறுக்கப்படுகின்றன. எனவே அவை ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்றும் அவர் சொல்கிறார்.
- வேர் காய்கறிகள்
மரவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற பெரும்பாலான வேர் காய்கறிகளில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையும் அதிகம் இருக்கும். எனவே பொதுவாகவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. “முழுவதுமாகத் தவிர்க்க முடியாவிட்டால் அவற்றை வறுப்பதற்குப் பதிலாக பேக் செய்வது நல்லது” என்கிறார், மருத்துவர் மார்லா. அவை சிலரின் உணவுமுறையின் ஒரு பகுதியாக இருக்கலாம். அந்த நிலையில் அதை வறுப்பதைவிட வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது என்று அவர் பரிந்துரைக்கிறார்.
- சர்க்கரை
சர்க்கரை அளவு அதிகம் உள்ள எந்த உணவாக இருந்தாலும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நீண்டகால அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்று, மருத்துவர் ராஜேபஹதூர் கூறுகிறார். சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், உணவுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
“சிம்பிள் சர்க்கரைகளான (சிம்பிள் கார்போஹைட்ரேட்கள்) வெல்லம், ஃப்ரக்டோஸ், கார்ன் சிரப், சர்க்கரை போன்றவற்றைத் தவிர்க்கவும்” என்கிறார் புனாயமா. அவற்றுக்குப் பதிலாக உணவுமுறையில் முழு சிறுதானியங்கள், காய்கறிகள் போன்ற காம்ப்லக்ஸ் கார்போஹைட்ரேட்களை எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் அவர்.