இந்திய உணவுகளில் தக்காளி ஓர் அத்தியாவசியமான உணவுப் பொருளாகும். சுவையைக் கூட்டுவதுடன் இந்தப் பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் இதய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் ஊட்டச் சத்துகளும் ஏராளம் உள்ளன என்கின்றனர் வல்லுனர்கள். இதன் காரணமாக தக்காளியை இதயத்திற்கான ‘சூப்பர் உணவு’ என்று இதைக் குறிக்கின்றனர்.
தக்காளியை சூப்பர் உணவாக்குவது எது?
தக்காளியில் வைட்டமின் C அதிகம் இருப்பதுடன் அதை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் பவர் ஹவுஸ் என்று சொல்லலாம். அத்துடன், அவற்றில் பொட்டாசியம் கேல்சியம் போன்ற மினரல்களும், B3, B6, B9 போன்ற வைட்டமின்களும் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
லைக்கோபீன் போன்ற ஆற்றல் மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (சிவப்பு நிறத்திற்கான காரணி), வைட்டமின் C, பீட்டா-கரோட்டின் தக்காளியில் இருப்பதாக ஹைதராபாத்தில் உள்ள காமினேனி மருத்துவமனையில் சீனியர் இருதய நோய் நிபுணராக உள்ள, டாக்டர் G ரவிகாந்த் குறிப்பிடுகிறார். இவை கரோனரி இதய நோய் போன்ற கார்டியோவாஸ்குலார் நிலைகளுக்கு வழிவகுக்கின்ற, செல்களை பாதிக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பெங்களூரில் உள்ள ஆர்வி மருத்துவமனையில் தலைமை உணவியலாளராக உள்ள சௌமிதா பிஸ்வாஸ், தக்காளியில் வைட்டமின் C, B9 போன்ற வைட்டமின்களும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளன என்றும் அவை ரத்தக் கொதிப்பை நிர்வகிக்கவும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து கார்டியோவாஸ்குலார் பிரச்சினைகள் உண்டாவதற்கான ரிஸ்க்கைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கிறார்.
தக்காளியில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள்
வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த பிரைட்டான வண்ணப் பழங்களில் உள்ள சில ஊட்டச்சத்துகள்:
♦ பொட்டாசியம்
இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் அவசியம் என்று, மருத்துவர் ரவிகாந்த் சொல்கிறார்.
சரியான அளவில் பொட்டாசியம் எடுத்துக்கொண்டால் அது கரோனரி இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்படுவதற்கான ரிஸ்க் குறையும்.
♦ வைட்டமின் B6 மற்றும் ஃபோலேட் (வைட்டமின் B9)
வைட்டமின் B6 மற்றும் ஃபோலேட் (ஃபோலிக் ஆசிட்) ரத்தத்தில், ஹோமோசிஸ்டைன் (அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் ரத்த நாளங்களின் சுவர்களை பாதிக்கின்ற, ஓர் அமினோ ஆசிட்) அளவை வெகுவாகக் குறைக்கும்.
ஹோமோசிஸ்டைன் அளவு அதிகமாக இருந்தால் அது மட்டுமே கூட இதயத்தைப் பாதிக்கக்கூடிய தனி காரணியாக அமையலாம். அத்துடன் வயதானவர்களில் இது அதிரோஸ்க்லிரோஸிஸ் மற்றும் ஸ்ட்ரோக்கை வரவழைக்கலாம்.
♦ நியாசின் (வைட்டமின் B3)
நியாசினும் வைட்டமின் B3-யும் இரத்தக் கொதிப்பைக் குறைப்பதற்கும் டிரைகிலிஸரைடு அளவைக் குறைப்பதற்கும் பெயர் போனதாகும். டிரைகிலிஸரைடு என்பது உங்கள் உடலுக்குத் தேவைப்படாத கூடுதல் கலோரிகளில் இருந்து உடனடியாக உருவாக்கப்படுவதாகும். வழக்கமாக 100 கிராமில் 0.50 மில்லிகிராம் அளவிலான நியாசின் கிடைக்கும். இருந்தாலும் தக்காளியின் வகையைப் பொறுத்து இது மாறுபடும். அந்த வகையில் 100 கிராமில் 0.50 முதல் 9.05 மில்லிகிராம் அளவிலான நியாசின் இருக்கும்.
சமைக்கப்பட்ட தக்காளி பச்சைத் தக்காளியை விட அதிகமான ஊட்டச் சத்தைக் கொண்டிருக்கும்
தக்காளியைச் சமைப்பது அவற்றின் லைகோபீன் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் அவற்றைப் பச்சையாகச் சாப்பிடுவதை விட சிறந்த இதய நன்மைகளை வழங்குகிறது என்று டாக்டர் ரவிகாந்த் கூறுகிறார்.
செர்ரி தக்காளி, ஹாலோ தக்காளி போன்ற வகைகளைத் தேர்ந்தெடுப்பது குறிப்பாக நன்மை பயக்கும். ஏனெனில் அவற்றில் அதிக லைகோபீன் உள்ளடக்கம் உள்ளது, அவர் மேலும் கூறுகிறார்.
உங்கள் தினசரி உணவுமுறையில் தக்காளியைச் சேர்த்துக்கொள்வது எப்படி?
டெல்லியைச் சேர்ந்த உணவியலாளரான அவ்னி கவுல் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதற்கு பல வழிகளைக் கூறுகிறார்
- புளிப்பு சுவையுள்ள தக்காளி சட்னி செய்யலாம் அல்லது தக்காளி ஊறுகாய் செய்யலாம்.
- நறுமனத்திற்கும் ஊட்டச்சத்துக்கும் நறுக்கிய தக்காளிகளைக் குழம்புகளில் சேர்க்கலாம் (சைவம், அசைவம் ஆகிய இரண்டிலுமே).
- உங்கள் உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ரைத்தாவைத் தயாரிக்கலாம்.
- தக்காளி மற்றும் வெங்காயம் பயன்படுத்தி நறுமணம் மிக்க பல குழம்புகள் வைக்கலாம். அவைதான் பல இந்திய உணவுகளுக்கு அடிப்படையாக இருக்கும்.
- மசாலாக்களுடன் தக்காளிகளைச் சேர்த்து அதைச் சோற்றில் கலந்து விரைவாகத் தக்காளி சாதம் செய்யலாம்.
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுன்டேஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கிளினிக்கல் உணவியல் நிபுணரான பிரியங்கா லல்லா, தக்காளியைப் பிற பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் ஸ்மூதிகளில் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கிறார். “அத்துடன் நீங்கள் தக்காளிகளை சைட்-டிஷ் அல்லது டாப்பிங்காகவும் பயன்படுத்தலாம்” என்றும் கூறுகிறார்.
குறிப்பிட்ட அளவு எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிடலாம் என்று, மருத்துவர் ரவிகாந்த் தெரிவிக்கிறார்.
தக்காளி சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயம்
சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் தக்காளி எடுத்துக்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக கீரையுடன் சேர்த்துக்கொள்ளும்போது. ஏனெனில் அவை சிறுநீரகக் கற்களை உருவாக்க வாய்ப்புள்ளது.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்ற பல ஊட்டச் சத்துகள் நிரம்பி இருப்பதால் தக்காளி என்பது இதயத்திற்கு ஒரு ‘சூப்பர் உணவு’ ஆகும்.
- பச்சை தக்காளியை விட சமைத்த தக்காளியில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஏனெனில் சமைப்பதால் அதன் லைக்கோபீன் உள்ளடக்கம் குறையும்.
- தக்காளிகளை சட்னி அல்லது ஊறுகாயாகச் செய்யலாம். தக்காளி வெங்காயம் பயன்படுத்தி நறுமணம் மிக்க குழம்பு வைக்கலாம். அதுதான் பல இந்திய உணவுகளுக்கு அடிப்படையாக அமையும்.
- சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக தக்காளிகளைப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அது சிறுநீரகக் கற்களை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.