728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

இதய ஆரோக்கியத்திற்கான பழங்கள் & நட்ஸ்
20

இதய ஆரோக்கியத்திற்கான பழங்கள் & நட்ஸ்

இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை போதுமான அளவு உட்கொள்ளாமல் போவதால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். வல்லுநர்கள் பயனுள்ள உணவுத் தேர்வுகளைப் பற்றி இதில் தெரிவிக்கிக்கின்றனர்.

Five fruits and nuts for a healthy heart

“தீங்கு விளைவிக்கும்” உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் இதய நோய்கள் தூண்டப்படுகின்றன என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால், உண்மையில் பார்த்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை தேவைக்குக் குறைவாகச் சாப்பிடுவதுதான் இதற்கு முக்கியக் காரணி என்று ஐரோப்பிய இதய இதழின் ஜூலை 2023 இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள், முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் மீன் போன்ற குறிப்பிட்ட வகையான பாதுகாப்பு உணவுகளை குறைவாக உட்கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் இருதயவியல் ஆலோசகர் டாக்டர் சுனில் திவேதி கூறும்போது, “இன்றைய உணவு முறை சமநிலையற்றதாகவும், கலோரிகள் அதிகமாகவும் உள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட நுண்ணூட்டச்சத்துக்கள் குறைவாக உள்ள பதப்படுத்தப்பட்ட உணவைக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஒரு சீரான உணவு தேவைப்படுகிறது. இதில் புரதம் மற்றும் கொழுப்புடன் மட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் சரியான விகிதத்தில் உள்ளன, ”என்று அவர் மேலும் கூறுகிறார். கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கவும் இது அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார். இது நீரிழிவு, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. டாக்டர் ஹர்ப்ரீத் சிங் கில்ஹோத்ரா, (இயக்குனர் மற்றும் தலைவர், கார்டியாலஜி துறை, SGHS மருத்துவமனை, சோஹானா, மொஹாலி)  கலோரி உட்கொள்ளல் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க நார்ச்சத்து தேவை என்று கருதுகிறார்.

இதய ஆரோக்கியத்திற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் மூலமாக உள்ள பழங்கள் உதவும் என்று துவிவேதி பகிர்ந்து கொள்கிறார். இவை கடுமையான மாரடைப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. டாக்டர் கில்ஹோத்ரா மேலும் கூறுகிறார், “கொட்டைகள் கொலஸ்ட்ரால் இல்லாதவை, யானது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இது உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்கும் ஒரு வகை நிறைவுறா கொழுப்பு அமிலம்,” என்று அவர் கூறுகிறார். “இவற்றை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், வீக்கம் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் இதய நிலைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.”

ஆரோக்கியமான இதயத்திற்கு என்ன பழங்கள் மற்றும் கொட்டைகளைச் சாப்பிட வேண்டும்?

  • ஆப்பிள்: ஆப்பிள் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. பவித்ரா என் ராஜ் (யஷ்வந்த்பூர், மணிபால் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் ), ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன, அவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார். மேலும் அவர் ஆப்பிளில் பாலிபினால்கள் உள்ளன, அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்கிறார். இந்தப் பழத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • மாதுளை: மாதுளையில் வைட்டமின் c உள்ளது, மேலும் இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகக் கருதப்படுகிறது என்கிறார் ராஜ். இது, நீரிழிவு மற்றும் இதய சிக்கல்கள் உட்பட பல நாள்பட்ட நிலைகளுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • பாதாம்: கொலஸ்ட்ரால் செறிவைக் குறைக்கவும், பிளேட்லெட் செயல்பாட்டை மேம்படுத்தவும் பாதாம் போன்ற பருப்புகளை ஒருவர் தவறாமல் உட்கொள்ள வேண்டும் என்று பாரதி குமார், (ஃபோர்டிஸ் மருத்துவமனை, நாகர்பாவி, பெங்களூரு உணவியல் நிபுணர்) பகிர்ந்து கொள்கிறார். உணவுகளில் இருந்து வைட்டமின் E உட்கொள்வது ஒருவரை ஆபத்தான கரோனரி இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று அவர் கூறுகிறார்.
  • பப்பாளி: பப்பாளி ஒரு இதய ஆரோக்கியமான பழம் என்று ராஜ் சுட்டிக்காட்டுகிறார், இது ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இது இதயத்திற்கு நன்மை பயக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது, இதனால் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதுமட்டுமின்றி பப்பாளியில் வைட்டமின் C மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இதனால் இதய சிக்கல்கள் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கப்படுகிறது.
  • அக்ரூட் பருப்புகள்: வால்நட்களில் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம்) உள்ளது, இது இருதய ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை எல்.டி.எல்-கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன, இது இருதய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முதன்மைக் காரணமாகும். மேலும், அவை இரத்தக் கட்டிகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இந்தியாவில், இதய ஆரோக்கியத்திற்கு பழங்கள், முழு தானியங்கள் மற்றும் தினை மற்றும் கொட்டைகளைச் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் துவிவேதி பரிந்துரைக்கிறார். இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க விலையுயர்ந்த உணவைத் தவிர்த்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது அவர் பரிந்துரைக்கிறார்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
பெருந்தமனி தடிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால்தான் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுரை
முடி உதிர்தல் பொதுவாக மரபியல் சார்ந்தது, ஆனால் அது ஏற்படுவதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன
கட்டுரை
புதியவர்கள் முதல் தொழில்முறை மராத்தான் வீரர்கள் வரை, தசைப்பிடிப்பு யாரை வேண்டுமானாலும் எதிர்பாராத விதமாகத் தாக்கும். போதுமான நீரேற்றம் மற்றும் சரியான ஓய்வு போன்ற நடவடிக்கைகள் இதில் உதவும்
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.
கட்டுரை
நாள்பட்ட மூட்டு வலியானது வயது, தேய்மானம், காயங்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உட்பட பல அடிப்படைக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். மோசமான உணவு, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அதை இன்னும் மோசமாக்கும்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.