பெங்களூருவைச் சேர்ந்த தேஜஸ்வினி லக்ஷ்மேஷ்வரின் சர்க்கரை அளவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 280 ஆக உயர்ந்தபோது, அவரது நீரிழிவு மருத்துவர் அவருக்கு மருந்து கொடுத்தார், மேலும் அவர் தனது உணவைக் குறைக்க வேண்டும் என்று கண்டிப்பாக பரிந்துரைத்தார். மேலும், அவரது உணவில் இருந்து உருளைக்கிழங்கை விலக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்- ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே.
அந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, லக்ஷ்மேஷ்வர் தனது உணவில் உருளைக்கிழங்கை மீண்டும் அறிமுகப்படுத்தினார், மேலும் அவர் உட்கொள்ளும் உணவின் பகுதியைக் கட்டுப்படுத்தினார். அவர் தினமும் காலையில் ஒரு மணிநேரம் நடப்பதை உறுதிசெய்து, தன் உணவில் இருந்து சர்க்கரையை விலக்கினார். மெதுவாக, அவரது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது மற்றும் சாதாரண வரம்பில் இருந்தது. ஒன்பது மாதக் காலத்தில், அவர் 13 கிலோ எடையைக் குறைத்து, மருந்துகளை எடுத்துக் கொண்டார். இப்போதும் அவர் தனது மசாலா தோசையில் உருளைக்கிழங்கைச் சேர்த்து, அதை வேறு பல காய்கறி தயாரிப்புகளுடன் சேர்த்துக் கொள்கிறார், ஆனால் அதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்கிறார். “அடிப்படையில், நீங்கள் உருளைக்கிழங்கு எடுத்துக்கொள்ளும் அளவைச் சரியாகக் கட்டுப்படுத்தி, சீரான உணவை உட்கொண்டால், சர்க்கரை அதிகரிப்பு இருக்காது” என்று 46 வயதான லக்ஷ்மேஷ்வர் விளக்குகிறார்.
உருளைக்கிழங்கு பலவாறாக உணவில் பயன்படுத்தக்கூடிய உயர் கார்போஹைட்ரேட் உள்ள காய்கறி ஆகும், இது பொதுவாக நம் உணவில் தவிர்க்க முடியாத ஃபிரஞ்சு ஃபிரைஸ், மொறுமொறு பக்கோராக்கள் (பஜ்ஜி) அல்லது கறிகள் மற்றும் காய்கறி தயாரிப்புகள் போன்ற வடிவில் நம் உணவில் வந்துவிடும். ஆனால் அவற்றின் உயர் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவுடன் உகந்த சர்க்கரை அளவையும் எடையையும் பராமரிக்கும் போது, நீரிழிவு நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கு பரிந்துரைக்கப்படுவதில்லை,.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகளின் உணவில் உருளைக்கிழங்கை மிதமான அளவு சேர்ப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நாம் நினைப்பதுபோல் அது ஒன்றும் அவ்வளவு பாதிப்பைத் தருவதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை எப்படிச் சாப்பிடலாம்?
பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உட்சுரப்பியல் நிபுணரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் பெலிண்டா ஜார்ஜ், “உருளைக்கிழங்கு சப்ஜியை ரொட்டி, சப்பாத்தி அல்லது சாதத்துடன் இணைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. மாறாக, உருளைக்கிழங்கு சாப்பிடும்போது, மீன் மற்றும் இறைச்சி போன்ற புரதச்சத்து நிறைந்த பொருட்களுடன் அவற்றை இணைப்பது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்.
டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் கூறுகையில், உருளைக்கிழங்கின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கலாம். இருப்பினும், அதன் பாகத்தின் அளவு, சமையல் முறை மற்றும் உருளைக்கிழங்கு அடங்கிய உணவுக்கு ஒருவருடைய உடலின் ஏற்புநிலை போன்ற காரணிகளின் அடிப்படையில் சர்க்கரை அளவின் ஸ்பைக் மாறுபடும்.
“நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடலாம், ஆனால் அதன் அளவைக் கட்டுப்படுத்துவது மற்றும் தயாரிப்பு முறைகள் முக்கியம்,” என்கிறார் கவுல்.
நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக எத்தனை உருளைக்கிழங்குகளை உட்கொள்ளலாம்?
ஒரு நபர் எவ்வளவு சாப்பிடலாம் என்பது அந்தத் தனிப்பட்ட நபரின் உடல் ஏற்புக்கு தகுந்தவாறு மாறுபடும் என்று கவுல் கூறுகிறார், ஆனால் ஒரு நீரிழிவு நோயாளி பொதுவாக சமைத்த, மாவுச்சத்து இல்லாத உருளைக்கிழங்கை அரை முதல் ஒரு கப் வரை சாப்பிடலாம். “நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால், உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு முன், உங்கள் ரத்த சர்க்கரை அளவை எப்போதும் சரிபார்த்து, தனிப்பட்ட வழிகாட்டுதலுக்காக ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்,” என்று அவர் எச்சரிக்கிறார்.
உருளைக்கிழங்கின் கிளைசெமிக் குறியீட்டை எவ்வாறு குறைப்பது?
பெங்களூரில் உள்ள ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் சௌமிதா பிஸ்வாஸின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் உருளைக்கிழங்கை ஓர் அங்கமாக மாற்றுவதைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும், அவற்றின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க வழிகள் உள்ளன.
உருளைக்கிழங்கை தோலுடன் உண்பது நார்ச்சத்தை சேர்க்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது,” என்று பிஸ்வாஸ் விளக்குகிறார். உருளைக்கிழங்கை வேகவைப்பது கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்கிறது என்றும் அவர் கூறுகிறார். மேலும், அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, உணவில் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க விரும்பும் நபர்கள் உருளைக்கிழங்கை முன்கூட்டியே சமைத்து குளிர்ச்சியாகவோ அல்லது மீண்டும் சூடாக்கியோ உட்கொள்ளலாம். உயர் கிளைசெமிக் குறியீட்டால் பாதிக்கப்படாமல் இருக்க மற்றொரு உதவிக்குறிப்பு, உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் புரதங்களுடன் உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்வது.
தயாரிப்பில் எச்சரிக்கை: “இந்தியர்கள் தங்கள் காய்கறி தயாரிப்புகளில் உருளைக்கிழங்கை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள் மற்றும் அதை ஓர் அரிசி உணவுடன் சேர்த்துக்கொள்வார்கள் – இந்தப் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடாது” என்று பிஸ்வாஸ் கூறுகிறார்.,
உணவுத் திட்டமிடல்: உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்ப்பதற்கான சிறந்த வழியாக உருளைக்கிழங்கின் சிறிய பகுதிகளைத் தேர்வுசெய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், கவுல், “உருளைக்கிழங்கை வறுப்பதற்குப் பதிலாக, அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பைப் பராமரிக்கவும், கிளைசெமிக் தாக்கத்தைக் குறைக்கவும், சுடுவது, வேகவைப்பது ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்” என்று குறிப்பிடுகிறார். மேலும், ஒருவர் உருளைக்கிழங்கை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைத் திறம்பட நிர்வகிப்பதற்குக் குறைந்த கிளைசெமிக் உணவை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
நிபுணர்களின் கருத்து: சர்க்கரை நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடும் முன் சர்க்கரை அளவை எப்போதும் சரிபார்த்து, சான்றளிக்கப்பட்ட உணவியல் நிபுணரை அணுகவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உருளைக்கிழங்கு தயாரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
குறைந்த ஜிஐ உருளைக்கிழங்கு வகைகளைத் தேர்ந்தெடுங்கள்: சில உருளைக்கிழங்கு வகைகள் மற்றவற்றை விடக் குறைவான ஜிஐ கொண்டவை. “உதாரணமாக, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் புதிய உருளைக்கிழங்கு பொதுவாக மாவுச்சத்துள்ள வெள்ளை உருளைக்கிழங்குடன் ஒப்பிடும்போது குறைந்த ஜிஐ கொண்டவை” என்று கவுல் விளக்குகிறார்.
வறுப்பதைத் தவிர்க்கவும்: உருளைக்கிழங்கை வறுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது கொழுப்பு மற்றும் அதிக சமையல் வெப்பநிலை காரணமாக அவற்றின் ஜிஐ அதிகரிக்கிறது.
சரியான சமையல் முறைகளைப் பின்பற்றவும்: உருளைக்கிழங்கை எப்படிச் சமைக்கிறீர்கள் என்பது அவற்றின் ஜிஐயைக் கணிசமாகப் பாதிக்கும். “உருளைக்கிழங்கின் இயற்கையான நார்ச் சத்தைப் பாதுகாக்கும் மற்றும் செரிமானத்தை மெதுவாக்கும் சமையல் முறைகளைத் தேர்ந்தெடுக்கவும்” என்று கவுல் பரிந்துரைக்கிறார்.
நீங்கள் என்ன செய்யலாம்:
வேகவைத்தல்: வேகவைத்த உருளைக்கிழங்கு மற்ற சமையல் முறைகளுக்கு மாறாக குறைந்த ஜி.ஐ கொண்டிருக்கும். “அவற்றின் நார்ச்சத்தைப் பராமரிக்க அவற்றை அதிகமாகச் சமைக்க வேண்டாம்” என்று கவுல் எச்சரிக்கிறார்.
பேக்கிங்: உருளைக்கிழங்கைத் தோலில் சுடுவது நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவுகிறது. நார்ச்சத்து இருப்பது சர்க்கரையை மெதுவாக வெளியிட உதவும்.
ஸ்டீமிங்: உருளைக்கிழங்கின் நார்ச்சத்தை பராமரிக்கவும் அதன் ஜிஐ அளவைக் குறைக்கவும் உதவும் மற்றொரு மென்மையான சமையல் முறை ஸ்டீமிங்.
புரதம் மற்றும் நார்ச்சத்துடன் இணை: புரதம் அல்லது நார்ச்சத்து கொண்ட உருளைக்கிழங்கை உட்கொள்வது கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் தாக்கத்தை குறைக்கவும் உதவும்.
எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்தல்: குறைந்த ஜிஐ தயாரிப்பு முறைகளுடன் கூட அதை அளவாகச் சாப்பிடுவது முக்கியம். உருளைக்கிழங்கை அளவாகச் சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
மற்ற குறைந்த-ஜிஐ உணவுகளைச் சேர்க்கவும்: உங்கள் உணவை மற்ற குறைந்த-ஜிஐ உணவுகளுடன் இணைத்தால், அது ஒட்டுமொத்த கிளைசெமிக் தாக்கத்தையும் சமநிலைப்படுத்தும்.
இரத்த சர்க்கரையைக் கண்காணிக்கவும்: நீரிழிவு நோயாளிகள் வெவ்வேறு உணவுகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கண்காணிக்க வேண்டும். நீரிழிவு மேலாண்மைக்கு அவர்கள் ஒரு மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரையும் அணுகலாம்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- உருளைக்கிழங்கின் உயர் கிளைசெமிக் குறியீட்டை வேகவைக்கும் போது அல்லது சுடும்போது குறைக்கலாம். நார்ச்சத்துள்ள காய்கறிகளுடன் உருளைக்கிழங்கைத் தயாரிப்பது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக அமைகிறது.
- நீரிழிவு நோயாளிகள் மற்ற வகை கார்போஹைட்ரேட்டுகளுடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- அவர்கள் தங்களின் உணவில் உருளைக்கிழங்கின் அளவு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.