தனிப்பட்ட ஹெல்த்கேரில் உணவுமுறை என்பது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பு என்று கூறலாம். வதந்திகள் நிரம்பிய உலகில் உணவுமுறை குறித்தும் பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை உடைப்பது மிகவும் அவசியம். செயின்ட் ஜான்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில், உணவுயியல் பிரிவின் விரிவுரையாளர் மற்றும் தலைவரான, மருத்துவர் ரெபக்கா குரியன் ராஜ், ஜூலை 12-இல் ஹேப்பியஸ்ட் ஹெல்த் நடத்திய ‘The Edge of Nutrition Summit’-இல் உணவுமுறையைப் பொறுத்த வரை அடிப்படைக்குச் செல்ல வேண்டும் அவர் தெரிவிக்கிறார்.
உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து குறித்த சில பொதுவான மூட நம்பிக்கைகளை அவர் உடைக்கிறார். நமக்குள்ள தவறான புரிதலை அகற்றுகிறார்:
முதல் மூட நம்பிக்கை 1: முட்டைக் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
உண்மை: முட்டைக் கருவில் அதிகக் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மைதான். ஆனால் அதைச் சாப்பிடுவதால் மட்டும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று கூற முடியாது.
மூட நம்பிக்கை 2: கர்ப்பவதி இரண்டு முட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
உண்மை: இல்லை. கர்ப்பவதிகள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல. அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியம்.
மூட நம்பிக்கை 3: தடகள வீரர்கள் அதிகப் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்
உண்மை: தடகள வீரர்களுக்கு அதிகமான புரதச் சத்து தேவைப்படும்தான். ஆனால் போதுமான உடற்பயிற்சி மேற்கொள்ளாவிட்டால் அதனால் பயன் இருக்காது.
மூட நம்பிக்கை 4: தீவிரமான உடற்பயிற்சி மட்டுமே உடல் எடையைக் குறைக்க உதவும்
உண்மை: இல்லை. எவ்வளவு சாப்பிடுகிறோம், அதற்கேற்றவாறு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோம் என்பதைப் பொறுத்து நிச்சயமாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
மூட நம்பிக்கை 5: நீங்கள் உடற்பயிற்சி செய்யும் முன்பும் பின்பும் ஏதாவது சாப்பிட வேண்டும்
உண்மை: ஆம், ஒருவர் உடற்பயிற்சி மூலம் உடற்கட்டைப் பெற விரும்பினால் உடலைக் கட்டமைப்பதற்கும் தசைகளைப் பாதுகாப்பதற்கும் சில ஸ்னாக்குகள் உள்ளன.
மூட நம்பிக்கை 6: சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வாழைப் பழங்களைச் சாப்பிடக்கூடாது
உண்மை: சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வாழைப் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால் அவர்கள் வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் அளவை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஒட்டுமொத்த உணவு முறையிலும் உள்ள பொட்டாசியத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.