728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

90 வயதில் தினமும் 4 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி
13

90 வயதில் தினமும் 4 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி

பெங்களூரைச் சேர்ந்த 90 வயதான மேரி பிலிப் தனது நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறார். பிலிப்பின் ஆரோக்கியமான முதுமைக்கு அது ஒரு காரணம்.

Philip begins her exercises at home, which includes 50 times touching her feet without bending the knees.

பெங்களூரைச் சேர்ந்த 90 வயதான மேரி பிலிப்புக்கு, நாள் அதிகாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. அவர் எழுந்ததும் அதிகாலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்கிறார். கோரமங்களா, ஓசூர் சாலையில் உள்ள 4 கி.மீ., தூரத்தை ஒரு மணி நேரம் நடந்து, காலை 6 மணிக்குத் திரும்புகிறார். அவர் வேகமாக நடந்தால் 50 நிமிடங்களில் இந்த தூரத்தைக் கடக்கிறார். வயதான பின்பும் பிலிப் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணம் தினசரி நடைபயிற்சி.

ஹேப்பியஸ்ட் ஹெல்த் உடன் பேசுகையில் 90 வயதைக் கடந்த மேரி, தனது தினசரி காலை நடைப்பயணத்தை நினைவு கூர்ந்தார். “நான் என் நாளை வெந்நீர் மற்றும் ஃபில்டர் காபியுடன் தொடங்குகிறேன். நான் ஒரு மணி நேரம் நடக்கிறேன். நான் தனியாக நடக்கிறேன். நான் நடக்கும்போது சாலையோரத்தில் உள்ள வெள்ளைக் கோடுகளின் மீதுதான் கவனம் செலுத்துகிறேன்,” என்கிறார் பிலிப், 2008-ஆம் ஆண்டு காலையில் நடக்கத் தொடங்கினார். மேலும் அவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கோரமங்களா பூங்காவில் பொருத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களைக் கொண்டு உடற்பயிற்சி செய்தார். தொற்றுநோய்களின் போது நிறுத்த வேண்டியிருந்தது. அவர் தனது நண்பர்களுடன் 1992 முதல் 2008 வரை சுறுசுறுப்பாக பேட்மிண்டன் விளையாடினார். “பல ஆண்டுகளாக, அவர்களில் சிலர் இறந்துவிட்டனர், மேலும் சிலர் முன்பு போல் விளையாட முடியவில்லை. அப்போதுதான் நான் காலையில் நடக்க ஆரம்பித்தேன்’’ என்கிறார் பிலிப்.

நடக்கும்போது, அவர் விழாமல் பார்த்துக் கொள்கிறார். “நான் என் இரு கால்களிலும் உறுதியாக இருக்கிறேன். நான் ஜாகிங் செய்வதில்லை. நான் வேகமாக நடக்கிறேன். வலுவாக இருக்கிறேன், ஆரோக்கியமாக இருக்கிறேன், ”என்கிறார் பிலிப். “எனக்கு நீரிழிவு நோய் இல்லை, என் இரத்த அழுத்தம் எல்லைக் கோட்டில் உள்ளது” என்று அவர் கூறும்போது அவர் புன்னகைக்கிறார். அவர் தனது காலுறைகள், காலணிகள் அப்படியே இருப்பதை உறுதிசெய்கிறார் மேலும் தனது நடைக்கு தளர்வான பருத்தி சுடிதார்களை அணிவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக தினமும் காலையில் 4 கிமீ வேகமாக நடைபயிற்சி

அவரது கடந்த 15 வருட நடைப்பயணத்தில், அவர் பல ஜாகிங், நடைப்பயிற்சி ஆர்வலர்களை சந்தித்துள்ளார். அவர்கள் தினமும் காலையில் உற்சாகத்துடன் வந்து அவருடன் பேச முயற்சித்துள்ளனர். ஆனால் ஃபிலிப் எப்போதுமே நடைப்பயிற்சியில் இருக்கும்போது யாருடனும் உரையாடலில் ஈடுபடாமல் இருக்க விரும்பிகிறார். பிறரிடம் பேசும்போது கவனச் சிதறல் ஏற்படும் என்று அவர் எண்ணுகிறார். நடைப்பயிற்சியின்போது அவருடன் யாராவது பேச வந்தால் பிலிப் அவரது புன்னகையுடன் பதிலளித்துவிட்டு நகர்கிறார்.

“நடைப்பயணத்தில் இருக்கும் போது யாருடனும் பேசுவதை நான் விரும்புவதில்லை, அது என்னை திசை திருப்பலாம் மற்றும் என் வேகத்தை குறைக்கலாம். பேசி நடக்க கூடாது. இது ஆற்றலை வீணடிக்கும்” என்கிறார் பிலிப். பல பார்வையாளர்கள் அவரது வயதைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் அவரது வேகம் ஒரு டீனேஜ் பெண்களுக்கே சவால் தருவதாக இருக்கும். தினமும் அவர் விறுவிறுப்பாக நடப்பதை பார்க்கும் பலர் அவரிடம் வயது குறித்து கேட்கிறார்கள். அதற்கு அவருடைய நிலையான பதில் புன்னகையாக இருக்கும். அதைத் தொடர்ந்து “என் வயதை யூகியுங்கள்” என்பாராம்.

“எனக்கு வயது 70, 75 இருக்குமா என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அதைவிட அதிக வயது. அவர்களின் தாயை விட வயதானவராக இருக்கலாம் என்று அவர்களிடம் சொல்கிறேன்.  பின்னர் நான் தொடர்ந்து நடக்கிறேன்”என்று அவர் கூறுகிறார். அவர் தன்னை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சிகள் அவசியம் என்று உறுதியாக நம்புகிறார்.

ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கை

காலை 6 மணிக்கு நடைப்பயிற்சியிலிருந்து திரும்பிய பிலிப், வீட்டிலேயே தனது உடற்பயிற்சிகளைத் தொடங்குகிறார். இதில் முழங்கால்களை வளைக்காமல் 50 முறை கால்களைத் தொடுவது அடங்கும். அவர் தன் காலை 90 டிகிரி வரை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். “சிறுவயதில் இருந்தே நான் ஒரு தடகள வீரர், பள்ளிப் படிப்பின் போது ஆர்வத்துடன் பேட்மிண்டன் விளையாடினேன். விளையாட்டில் எனது ஆர்வம் எப்போதும் என்னை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்கிறது, ”என்று பிலிப் கூறுகிறார். அதிகாலையில் எழுந்திருத்தல், தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள், குறைவாக உண்பது, குறைந்த அளவு அரிசி உட்கொள்வது, ஆனால் காய்கறிகள், பருப்பு வகைகளைச் சாப்பிடுவது, சீக்கிரம் சாப்பிடுவது இவையே அவரது ஆரோக்கியமான முதுமையின் வெளிப்படையான ரகசியங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

“எனது உடற்பயிற்சிகள், வழக்கமான நடை எனது இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் எனது ஞாபகத்தை அப்படியே வைத்திருக்கிறது” என்று பிலிப் கூறுகிறார். அவருக்கு கேட்பதிலோ பார்வையிலோ எந்தப் பிரச்சினைகளும் இல்லை.

பிலிப்புக்கும் அவருக்கே உரிய துயரங்கள் உள்ளன. ஆனால் சோகம் அவருடைய அன்றாட வாழ்க்கையை பாதிக்க அவர் விடுவதில்லை. “சிறு வயதிலேயே என் மகனையும் மகளையும் இழந்தேன். சமீபத்தில் என் கணவரும் இறந்து விட்டார். நானும் மனஅழுத்தத்தில் இருந்தேன். முன்பு மன அழுத்த மருந்துகளை உட்கொண்டேன். நான் இறுதியில் துக்கத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தேன். அதைச் சமாளிப்பதற்கான எனது சொந்த வழிகளைக் கற்றுக்கொண்டேன், ”என்று பிலிப் கூறுகிறார், அவர் தனது சமையல் திறமைக்காக அவரது குடும்பம் மற்றும் நண்பர் வட்டாரங்களில் அறியப்படுகிறார்.

“எனக்கு சமையல் பிடிக்கும். நான் புட்டிங்ஸ் மற்றும் என் கிறிஸ்துமஸ் கேக் செய்கிறேன்,” என்று பிலிப் கூறுகிறார், அவருக்கு சமையலறையில் நேரத்தை செலவிடுவது மற்றும் ஆரோக்கியமான, சத்தான உணவைத் தயாரிப்பது பிடித்த விஷயங்கள் ஆகும். வினாடி வினாக்கள் மற்றும் புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வமாக அறியப்பட்ட பிலிப் கூறுகையில், “எனது துக்கத்தைத் தவிர்க்க நான் நேர்மறையாக இருக்கிறேன்” என்கிறார்.

விரைவாகக் கற்பவர்

வெளிநாட்டில் வசிக்கும் தனது பேரக்குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள, பிலிப் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தத் தொடங்கினார், இப்போது அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்.

“நான் புதிர்களை விளையாடுகிறேன் மற்றும் வினாடி வினாக்களை தொடர்ந்து பார்க்கிறேன். நான் கேள்விகள் மற்றும் பதில்களை மனப்பாடம் செய்கிறேன், அதே கேள்விகளை எனக்கு தெரிந்தவர்களிடம் கேட்கிறேன், ”என்று தன்னை எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருக்கும் பிலிப் கூறுகிறார்.

அவரைச் சந்திக்கும் அவரது குடும்பத் தோழியான டாக்டர் மேரி வர்கீஸ், பிலிப் மிகவும் நேர்மறை சிந்தனையுள்ள நபர் என்று அடிக்கடி கூறுகிறார். “அவர் அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார், ஒருபோதும் குறை கூறுவதில்லை. வேகமாகவும் ஒழுக்கமாகவும் நடப்பவர், தன் உடல்நிலையை நன்றாக கவனித்துக் கொள்பவர். அவர் உண்மையிலேயே எனக்கும் அவரைச் சுற்றியுள்ள பலருக்கும் ஒரு உத்வேகம்” என்கிறார் டாக்டர் வர்கீஸ்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.