728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்லது
17

சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்லது

வெல்லத்தில் மைக்ரோ-மினரல்கள் இருப்பதால் அது உடலுக்குப் பல நன்மைகளைச் செய்கிறது. இருந்தாலும் அதை எடுத்துக்கொள்வதில் சற்று கவனம் தேவை.

jaggery

வெல்லத்தில் ஆரோக்கியம் தொடர்பான நன்மை இருப்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது என்று இல்லை. பனிக் காலங்களில் பெரியவர்கள் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு அதிகக் குளிரோ சூடோ இருந்தால் அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வெல்லம் தருவது என்பது இயல்பாகவே உள்ள ஒரு நடைமுறையாகும். ஆயுர்வேத மருத்துவர்களும் ஒருவரின் உடலை உள்ளிருந்து சூடாக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் வெல்லத்தைப் பரிந்துரைக்கின்றனர்.

அத்துடன், வெல்லம் ஒருவரின் நுரையீரலைச் சுத்திகரித்து சுவாச அமைப்பைப் பாதுகாக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெல்லம் நுரையீரலில் படியும் துகளை வெளியேற்ற எப்படி உதவும் என்பதை அறிய  22 ஆரோக்கியமான ஆல்பினோ எலிகளை வைத்து 1994-இல் ஒரு ஆய்வை நடத்தியது.

அந்த ஆராய்ச்சியில் நுரையீரலுக்குச் செல்லும் துகள்களுக்கு எதிராக நுரையீரலின் தற்காப்புச் செயல்முறையை வெல்லம் இரட்டிப்பாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனால், கரிச் சுரங்கத்தில் பணி செய்பவர்கள் முகக் கவசம் வருவதற்கு முன்பெல்லாம் வெல்லம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டனர். இருந்தாலும் வெல்லம் நுரையீரலுக்குச் செய்யும் நன்மைகளை ஆராய மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

வெல்லத்தால் என்ன நன்மை?

சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக வெல்லம் இருக்கிறது. பதப்படுத்திய சர்க்கரையில் எவ்வளவு கலோரி உள்ளதோ அதே அளவிலான கலோரிதான் வெல்லத்திலும் உள்ளது, ஆனால், அதோடு அதில் சோடியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, ஆண்ட்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பலவும் அடங்கியுள்ளன.

பூனேவில் உணவுத் தொழில்நுட்பவியலாளராகவும் ஆயுர்வேத ஊட்டச்சத்து நிபுணராகவும் உள்ள சுதிர் சூர்யவன்ஷி வெல்லத்தில் மாங்கனீஸ், செலினியம், பாஸ்ஃபரஸ் போன்ற பல மைக்ரோ-மினரல்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறார். “இது இரும்பிச் சத்துக்கான சிறந்த மூலமாகவும் இருக்கிறது. வெல்லம் தயாரிக்கும்போது கரும்புச் சாற்றை இரும்புப் பாத்திரங்களில் கொதிக்க வைப்பதால் அதில் இரும்புச் சத்து கலக்கிறது” என்கிறார் அவர்.

சிவப்பு இரத்த செல்களை உடல் உருவாக்க இரும்புச் சத்து மிக அவசியம். இரத்த சோகைக்கு சிகிச்சை அளிப்பதற்கு வெல்லம் எந்தளவிற்கு  உதவும் என்பதன் மதிப்பீட்டை நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபிஸியாலஜி, ஃபார்மஸி மற்றும் ஃபார்மகாலாஜி 2018-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆராய்ச்சியாளர்கள் 50 பெண்களுக்கு 8 வாரங்களுக்கு 5 கிராம் வெல்லமும் 5 கிராம் உலர் திராட்சையும் கொடுத்தனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்களின் ஹீமோகுலோபின் அளவில் பெருமளவு அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டிருந்தது. 

அத்துடன் வெல்லத்தில் இரும்புச் சத்துடன் சிவப்பு இரத்த செல்களை உருவாக்க உதவும் இன்னொரு முக்கிய கூறான ஃபோலேட்டும் உள்ளது. இரும்புச் சத்தும் ஃபோலேட்டும் இருப்பதால் இரத்த சோகையைச் சமாளிப்பதற்கு ஒரு சிறந்த விஷயமாக அது உள்ளது.

உடல் உழைப்பின்போதோ உடல்நிலை சரியில்லாதபோதோ உடலுக்குத் தேவைப்படும் சக்தியை இது வழங்குகிறது. இருந்தாலும் அதிகக் கலோரிகள் இருப்பதால் அவற்றைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் ஊட்டச் சத்து நிபுணரான ஸ்வஸ்தி உபாத்யாயா தெரிவிக்கிறார்.

100 கிராம் வெல்லத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு

 

ஊட்டச்சத்து அளவு
கலோரி 354 Kcal
புரதம் 1.85g
இரும்புச் சத்து 4.63mg
ஃபோலேட் 14.4µg
கரோட்டினாய்டுகள் (வைட்டமின்  A-ஐத் தூண்டுவது) 18.49µg
பொட்டாசியம் 488mg
மெக்னீசியம்

115mg

ஆயுர்வேதத்தின் பார்வையில்

அகா குடா என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் வெல்லம் ஆயுர்வேத சிகிச்சையில் பல உடல்நிலைகளைச் சமாளிக்க உதவுகிறது. ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்தின்படி அது இதயத்திற்கும் செரிமானத்திற்கும் நல்லது.

மலச் சிக்கலைப் போக்க சாப்பிட்டவுடன் ஒரு சிறிய கட்டி வெல்லத்தை எடுத்துக் கொள்வது நல்லது என்று சூர்யவன்ஷி பரிந்துரைக்கிறார். “அதில் இருக்கும் நார்ச் சத்து (இனுலின்) செரிமானத்தையும் குடல் இயக்கத்தையும் மேம்படுத்தும்” என்கிறார் அவர்.

நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் மூலிகை ஜாமான சவன்ப்பிராஷ், நினைவாற்றலுக்கு உதவும் ப்ரஹ்மிக்ரிதா ஆகியவற்றில் இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்க்கப்படுகிறது. அது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.

எந்த வண்ணத்தில் இருக்கும் வெல்லம் சிறந்தது?

வெல்லம் டார்க் பிரவுன் வண்ணத்தில் இருப்பதற்குக் காரணம் மொலஸ் (டார்க் பிரவுன் கோந்து)  எனலாம். இதைப் பதப்படுத்திதான் வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. மொலஸ்களில் மைக்ரோ நியூட்ரியன்ட்கள் இருப்பதால் வெல்லம் சர்க்கரைக்குச் சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.

வெல்லமானது திடம், பாதி திடம் மற்றும் திரவம் ஆகிய மூன்று வடிவங்களில் தயார் செய்யப்படுகிறது. வணிக நோக்கங்களுக்காக வெல்லத்தை பொன்னிறமாக மாற்ற அதில் சல்ஃபர் தெளிக்கப்படுகிறது. “டார்க் பிரவுன் நிறத்தில் வெல்லத்தைத் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் அது எந்த ரசாயனமும் தெளிக்கப்படாத வெல்லம் ஆகும்.” என்கிறார் சூர்யவன்ஷி.

நன்மைகள் இருந்தாலும், வெல்லம் எடுத்துக் கொள்வதில் கவனம் வேண்டும் என்று உபாத்யாயா எச்சரிக்கிறார். “என்ன இருந்தாலும் வெல்லத்தில் பிரதானமாக இருப்பது சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் என்று சொல்லக்கூடிய எளிய கார்போஹைட்ரேட்டுகள்தான். எனவே உடல் பருமன், CVD (கார்டியோவாஸ்குலார் நோய்), நீரிழிவு போன்ற வாழ்வியல் சார்ந்த உடல் உபாதைகள் வராமல் இருப்பதற்கு குறைந்தளவு வெல்லத்தை எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார் அவர்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
பெருந்தமனி தடிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால்தான் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுரை
முடி உதிர்தல் பொதுவாக மரபியல் சார்ந்தது, ஆனால் அது ஏற்படுவதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன
கட்டுரை
புதியவர்கள் முதல் தொழில்முறை மராத்தான் வீரர்கள் வரை, தசைப்பிடிப்பு யாரை வேண்டுமானாலும் எதிர்பாராத விதமாகத் தாக்கும். போதுமான நீரேற்றம் மற்றும் சரியான ஓய்வு போன்ற நடவடிக்கைகள் இதில் உதவும்
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.
கட்டுரை
நாள்பட்ட மூட்டு வலியானது வயது, தேய்மானம், காயங்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உட்பட பல அடிப்படைக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். மோசமான உணவு, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அதை இன்னும் மோசமாக்கும்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.