முடி உதிர்தல் (அலோபீசியா) பகுதியளவோ முழுமையானதாகவோ இருக்கலாம், நிரந்தரமானதாகவோ தற்காலிகமானதாகவோ இருக்கலாம், மேலும் தலையிலோ உடல் முழுவதுமோ இருக்கலாம். இந்த நிலை பொதுவாகப் படிப்படியாக அதிகரிக்கும். அத்துடன் பெரும்பாலும் பரம்பரை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது அடிப்படை மருத்துவ நிலைமைகள் மற்றும்/அல்லது அவற்றின் சிகிச்சை காரணமாக இது ஏற்படுகிறது.
எப்படிக் கண்டறிவது?
ஆண்கள், பெண்கள் ஆகிய இருவருக்குமே உச்சந்தலையில் முடியின் அடர்த்தி குறைந்தோ குறையாமலோ கொத்துக் கொத்தாக முடி உதிர்வதன் மூலமாகவோ அங்கும் இங்கும் சொட்டை உருவாகுவதன் மூலமோ இதை நீங்கள் அறியலாம். பெரும்பாலும் ஆண்களுக்கு இது அதிகம் நடக்கும். வழக்கமாக 50 முதல் 100 முடிகள் விழும். ஆனால் பல காரணிகள் அடிப்படையில் இது அதிகரிக்கலாம்.
காரணங்கள்
முடி உதிர்வுக்கான காரணங்கள் நபருக்கு நபர் பரவலாக மாறுபடும் மற்றும் அதன் வெளிப்பாட்டிற்கு காரணமான பல அடிப்படை சிக்கல்கள் உள்ளன. இந்தக் காரணிகளில் சில:
- தந்தை அல்லது தாயின் குடும்பத்திலிருந்து மரபணு மூலம் வருவது
- உண்ணி அல்லது பேன் தொல்லையால் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல்
- இரும்புச்சத்து குறைவாக உட்கொள்வதால் அல்லது தைராய்டு செயலிழப்பு காரணமாக இரத்த சோகை போன்ற நோய்கள்
- பொடுகு அல்லது உச்சந்தலையில் மற்ற தொற்று (பூஞ்சை)
- அனோரெக்ஸியா, புலிமியா அல்லது உணவில் புரதச்சத்து குறைபாடு போன்ற உணவுக் கோளாறுகள் காரணமாக
- இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள், கருத்தடை மாத்திரைகள், வைட்டமின் A சப்ளிமெண்ட்ஸ் போன்ற மருந்துகளின் பயன்பாடு
- மன அழுத்தம், முடிக்குப் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள், அதீதமான குரூமிங் போன்ற வாழ்க்கை முறை பிரச்சனைகள் காரணமாக
நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு
ஒரு தோல் மருத்துவர் அல்லது பொது மருத்துவர் பொதுவாக உங்கள் மருத்துவ வரலாறு, குடும்ப வரலாறு அல்லது உங்கள் உச்சந்தலையின் நிலையைப் பார்த்து உங்கள் முடி உதிர்வைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். பெரும்பாலும், தற்போதைய மருத்துவ நிலை காரணமாக முடி உதிர்தல் தற்காலிகமானது மற்றும் மீட்பு தொடங்கியவுடன் முடி தானாகவே வளரும், ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில் மருத்துவ தலையீடுகள் தேவைப்படலாம்.
சிகிச்சை
வழுக்கை அல்லது முடி உதிர்தலின் பெரும்பாலான நிகழ்வுகள் மரபியல் சார்ந்தவை, எனவே அவை குணப்படுத்த முடியாதவை. ஆனால் முடி உதிர்வதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- ஃபினஸ்டிரைடு என்பது ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. இதை பெண்களோ குழந்தைகளோ பயன்படுத்த முடியாது.
- மினாக்ஸிடில் என்பது முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஓவர்-தி-கவுன்டர் மருந்து. இதை ஆண், பெண் ஆகிய இருபாலரும் பயன்படுத்தலாம்.
- முடி மாற்று சிகிச்சை, உச்சந்தலையைக் குறைத்தல் மற்றும் விரிவுபடுத்துதல், விக் போன்ற நடைமுறைகள் முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம்.
மேற்கூறிய வைத்தியங்களைத் தவிர, முடி உதிர்தல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களின் நம்பிக்கையை அதிகரிக்க மருத்துவச் சுகாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் மகிழ்ச்சியாக உணர உதவும் ஒரு வலுவான கருவியாக இது இருக்கும்.