728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

African swine fever: மனிதர்களுக்குப் பரவாது
3

African swine fever: மனிதர்களுக்குப் பரவாது

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு மிகப் பெரிய தொற்றுநோயாக இருப்பதால், அவை பரவுவதைக் கட்டுப்படுத்த பன்றிகள் கொல்லப்படுகின்றன, அதைத் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பன்றிக் காய்ச்சல் போலல்லாமல் இது மனிதர்களுக்குப் பரவாது

African swine flu affects pigs and wild boars

கேரள மாநிலம் கண்ணூர் கனிச்சரில் உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் கடந்த வெள்ளியன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, பண்ணையில் உள்ள பன்றிகளைக் கொல்ல உத்தரவிட்ட உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பண்ணையைச் சுற்றியிருக்கும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர். மேலும், பண்ணையில் இருந்து, 10 கி.மீ., துாரம் வரை உள்ள பகுதி, நோய்க் கண்காணிப்பு மண்டலமாகக் கண்காணிக்கப்படுகிறது.

ஒரு பண்ணையில் மட்டுமே நோய்த்தொற்று பதிவாகியுள்ளதாக மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஹேப்பியஸ்ட் ஹெல்த்திடம் தெரிவித்தனர். “ஆகஸ்ட் 18-ம் தேதி பரிசோதனை முடிவுகள் வந்ததாகவும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மறுநாளே கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள்,  “ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால், பன்றிகளைக் கொல்வது மட்டுமே பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி” என்று தெரிவித்தனர்.

கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (KVASU) கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் C .லதா, “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலைக் கையாள்வதற்கான நிலையான இயக்க நடைமுறையின்படி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பன்றி இறைச்சியை விற்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது மிகப் பெரிய தொற்று நோய் என்பதால், பாதிக்கப்பட்ட பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல வேண்டும், அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பன்றியின் சடலத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார். 

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் என்பது பன்றிகளை பாதிக்கும் ஓர் ஆபத்தான வைரஸ் நோயாகும், இது “உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரங்கள், தேசிய மற்றும் சர்வதேசச் சந்தைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது”. பன்றிகளின் மருத்துவ அறிகுறிகளில் பசியின்மை, பலவீனம் மற்றும் திடீர் மரணம் ஆகியவை அடங்கும்.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் உள்ள வித்தியாசம்

கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் (தொற்று நோய்கள் பிரிவு) டாக்டர் நெட்டோ ஜார்ஜ் கூறுகையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது, ஏனெனில் இந்த நோய் பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகளை மட்டுமே பாதிக்கிறது. மேலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு மிகப் பெரிய தொற்றுநோயாகவும் ஆபத்தான நோயாகவும் இருந்தாலும் கூட, அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவாது என்றும், பொதுவாகப் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1 இன்ஃப்ளூயன்ஸாவுடன் தொடர்பில்லாதது என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர். “ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஒரு வித்தியாசமான நோய்” என்கிறார் டாக்டர் ஜார்ஜ். ” பன்றிக்காய்ச்சல் அல்லது H1N1 வைரஸ் ஒரு டிஎன்ஏ வைரஸ், இது பன்றிகளிடமிருந்து எளிதில் உருமாறி மனிதர்களுக்குப் பரவாது. வைரஸ் வகைமாற்றம் தொடர்ந்து நிகழ்வதால், பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு அரிதாகவே பரவுகிறது. பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும்.”

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகளைக் கொன்று, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றாலும், பன்றிக் காய்ச்சலின் போது, பன்றி இறைச்சியை முறையாகக் கையாண்டு சமைத்தால் பாதுகாப்பாக உட்கொள்ளலாம் என்கிறார் டாக்டர் லதா.  “கேரளாவில், பொதுவாகப் பன்றி இறைச்சி அதிகமாகச் சமைக்கப்படுகிறது, கடந்த முறை அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பன்றிக்காய்ச்சல் பரவல் ஒரு நன்மையாக இருந்தது,” என்று அவர் சிறப்பித்துக் கூறுகிறார்.

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

பெங்களூரு பழைய விமான நிலையச் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் தொற்று நோய்களின் ஆலோசகர் டாக்டர் நேஹா மிஸ்ரா கூறுகையில், பன்றிக் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா A  என்ற வைரஸின் ஒரு துணை வகையாகும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில் A,B,C மற்றும் D என நான்கு வகைகள் உள்ளன என்று அவர் விளக்குகிறார்.

“இவற்றில், இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B ஆகியவை பெரும்பாலான பருவகாலக் காய்ச்சல் தொற்றுநோய்களுக்குக் காரணமாகின்றன. இன்ஃப்ளூயன்ஸா A H1N1 மற்றும் H3N2 ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. இவை இரண்டில் முதலாவதாகச் சொல்லப்பட்டது  பொதுவாக பன்றிக் காய்ச்சல் என்று குறிப்பிடப்படுகிறது” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) கூற்றுப்படி, பன்றிகளில் பொதுவாக காணப்படும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் H1N1V மற்றும் H3N2V போன்றவை மனிதர்களிடம் கண்டறியப்பட்டால், அவை ‘மாற்றமடைந்த’ காய்ச்சல் வைரஸ்கள் (‘variant’ flu viruses) என்று அழைக்கப்படுகின்றன.

 பன்றிக் காய்ச்சல் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?

பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாகக் காய்ச்சலின் லேசான அறிகுறிகளைக் கொண்டு இருந்தாலும், ஒரு சிலர் நோய்த்தொற்று அதிகரித்து ஆபத்தான நிலைக்குச் செல்லக்கூடும் என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார். இளம் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீண்டநாள் நீரிழிவு நோய், நாள்பட்ட கல்லீரல் நோய், நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள் போன்ற நோயெதிர்ப்புக் குறைபாடு உள்ளவர்கள் இதில் அடங்குவர்.

காய்ச்சல், இருமல் மற்றும் சளி, தொண்டை வலி, சோர்வு, தலைவலி மற்றும் உடல் வலி ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.”இல்லையெனில், பன்றிக் காய்ச்சல் பொதுவாகத் தானாகவே சரியாகும் நோயாகும்” என்று டாக்டர் மிஸ்ரா கூறுகிறார். “பெரும்பாலும், இது மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. அரிதான சந்தர்ப்பங்களில், இது அடிப்படையாக இணைநோய்களைக் (comorbid) கொண்டவர்களுக்குக் கீழ் சுவாசப் பாதை நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

பொதுவாகப் பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும் என்று சொல்லும் டாக்டர் ஜார்ஜ் “சிலருக்குச் சளி மற்றும் தொண்டைப் புண் இருக்கலாம்” என்றும் சொல்கிறார். இது மிகவும் கடுமையான நிலைக்கு முன்னேறக்கூடும் என்றாலும், அது அரிதாகவே நிகழும் என்று அவர் கூறுகிறார்.

பன்றிகளால் மனிதர்களுக்குக் காய்ச்சல் பரவுமா?

பன்றிக் காய்ச்சலைப் பொறுத்தவரை, பருவகாலக் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறதோ அதே போல, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், சுவாசச் சுரப்புகளின் மூலமாக நோய்த்தொற்றுப் பரவுகிறது என்று டாக்டர் மிஸ்ரா விளக்குகிறார். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), பாதிக்கப்பட்ட பன்றிகளின் உமிழ்நீர் சிந்திய மேற்பரப்புகளைத் தொட்டுவிட்டு, உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலம் தொற்று பரவக்கூடும் என்று கூறுகிறது.

H1N1 வைரஸ் நபருக்கு நபர் பரவுவதைப் பற்றி கூறும் போது, “பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருந்தால், கிருமிகள் நேரடியாக உங்கள் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் நுழையும்” என்கிறார் டாக்டர் ஜார்ஜ்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

கேரள மாநிலம் கண்ணூரில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இருப்பினும், இதனால் பொது சுகாதாரத்திற்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனென்றால், இந்த நோய் பன்றிகளுக்கு அதிகம் பரவக்கூடியதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தாலும் அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவாது.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 + three =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.