728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Breathing difficulty in child: மூச்சுக்குழாய் அழற்சி இருக்கலாம்
327

Breathing difficulty in child: மூச்சுக்குழாய் அழற்சி இருக்கலாம்

குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

While bronchiolitis may begin as a mild cold, it can quickly progress to breathing difficulties in 2-3 days.

சமீபத்தில், குறை பிரசவத்தில் பிறந்து மூன்று வாரங்களே ஆன ஒரு குழந்தை பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. அந்தக் குழந்தை தாய்ப்பாலை சரியாகக் குடிப்பதில்லை என்றும் சில நேரங்களில் அந்தக் குழந்தையால் சரியாக மூச்சு விட முடியவில்லை என்றும்,கை கால்கள் வெளிர் நீலத்தில் இருந்ததாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். குழந்தையின் மூக்கில் இருந்து சேகரித்த மாதிரியைப் பரிசோதித்துப் பார்த்ததில் அக்குழந்தைக்கு மூச்சுக்குழல் அழற்சி (Bronchiolitis) இருப்பது கண்டறியப்பட்டது. மூச்சுக்குழல் அழற்சி என்பது சுவாசக் குழாயில் ஏற்படும் ஒரு பொதுவான நோய்த் தொற்று ஆகும். இந்தக் குழந்தைக்கு ரெஸ்பிரேட்டரி சிங்ஸைட்டல் வைரஸ்’ (RSV – Respiratory syncytial virus) என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் தொற்றால் இது ஏற்பட்டுள்ளது.

மூச்சுக்குழாய் அழற்சி என்பது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மிகவும் அதிகமாகக் காணப்படும் சுவாச நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும் என்று இந்தக் குழந்தைக்கு சிகிச்சையளித்த, குழந்தை நல மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் (மதர்ஹுட் மருத்துவமனைகள், பனசங்கரி, பெங்களூரு) டாக்டர் சமீரா எஸ் ராவ் கூறுகிறார். “கிட்டத்தட்ட 90% குழந்தைகள் தங்கள் இரண்டாவது பிறந்த நாளுக்கு முன்பு ஒரு கட்டத்தில் மூச்சுக்குழாய் அழற்சியை அனுபவிக்கிறார்கள். 70%க்கும் அதிகமான குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றுடன் உள்ளனர், இது ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கலாம் என்பதுடன் இது எளிதில் குணமாகிவிடும்,” என்கிறார் டாக்டர் ராவ்.

 

மூச்சுக்குழாய் அழற்சி என்றால் என்ன?

இந்தியாவில் குளிர்காலம் தொடங்கும் முன் அல்லது மழைக்காலத்தின் போது மூச்சுக்குழாய் அழற்சி நோய்த் தொற்றுகள் ஏற்படுவது மிகவும் பொதுவான விஷயம் என்று டாக்டர் ஹிமான்ஷு பாத்ரா (HCMCT மணிப்பால் மருத்துவமனை, துவாரகா, புது டெல்லி) கூறுகிறார்.

 

“நமது சுவாசக் குழாய்கள் மூக்கிலிருந்து தொடங்குகின்றன, அதன் பிறகு ட்ரக்கியா (Trachea) மற்றும் பிரான்கஸ் (Bronchus) இருக்கும், பின்னர் பிராங்கியோல்கள் (Bronchioles) என்று அழைக்கப்படும் சிறிய சுவாசக் குழாய்கள் இருக்கும். அவை உங்கள் நுரையீரலுக்குள் செல்லும் சுவாசக் குழாய்களின் ஒரு பகுதியாகும். மூச்சுக்குழாய் அழற்சி என்பது இந்தச் சிறிய சுவாசக்குழாய்கள் அல்லது பிராங்கியோல்களில் ஏற்படும் வீக்கம் ஆகும்,” என்கிறார் டாக்டர் பாத்ரா.

 

மூச்சுக்குழாய் அழற்சி எதனால் ஏற்படுகிறது?

டாக்டர் பாத்ரா கூறுகையில், கீழ் சுவாசக்குழாய் தொற்றான இந்த மூச்சுக்குழாய் அழற்சியானது RSV, பேரா இன்ஃப்ளூயன்சா வைரஸ் (Parainfluenza virus) போன்ற பல வைரஸ்களால் ஏற்படலாம் என்கிறார்.

“இந்த வைரஸ்கள் பொதுவாக சுவாசப் குழாய்களில் வீக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இந்த சுவாசக் குழாய்கள் ஏற்கனவே குறுகலாக இருக்கும், அதில் அது வீக்கம் அடைந்தால் இன்னும் குறுகலாகும். இதனால் குழந்தைக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்,” என்கிறார் டாக்டர் பத்ரா.

 

குழந்தைகளில் மூச்சுக்குழாய் அழற்சி

 அனைத்து வயதினரிடையேயும் மூச்சுக்குழாய் அழற்சி ஒரு பொதுவான நோய்த் தொற்றாக இருந்தாலும், இது பெரியவர்களை விட குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று டாக்டர் பாத்ரா கூறுகிறார்.

“முதல் விஷயம், பெரியவர்களில் சிலருக்கு ஏற்கனவே இந்த வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கலாம், இரண்டாவதாக, அவர்களின் சுவாசக் குழாய்கள் விட்டத்தில் மிகவும் பெரியவை. எனவே, அந்தக் குழாய்களின் பாதை சற்று சிறிதாவதால்,  பெரிய பாதிப்பு இருக்காதுஎன்கிறார் டாக்டர் பாத்ரா.

RSV/ மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகள்

டாக்டர் பாத்ரா கூறுகையில், மூச்சுக்குழாய் அழற்சி லேசான சளியாகத் தொடங்கினாலும், அது 2-3 நாட்களில் சுவாசிப்பதில் சிரமத்தைக் கொடுக்கக்கூடியதாக மாறலாம்.

“வைரஸ் மூக்கு வழியாகக் குழந்தையின் உடலில் நுழையும்போது, தொற்று தொடங்குகிறது. ஆனால் லேசான சளியாக மட்டுமே அது இருக்கும். நோய்த்தொற்று படிப்படியாக மார்பை அடைவதால், ஓரிரு நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் கொடுப்பதாக அது மாறலாம்,” என்கிறார் டாக்டர் பாத்ரா.

“குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவிக்கும் போது, ​​அவர்களால் சரியாகச் சாப்பிடவும் முடியாது. இதனால் அவர்கள் மிகவும் மந்தமாக இருப்பார்கள்.  பெரும்பாலான பெற்றோர்கள் இந்தக் கட்டத்தில்தான் மிகவும் கவலைப்படுகிறார்கள், ”என்று டாக்டர் குருதத் A V (பீடியாட்ரிக் இன்டென்சிவ் பிரிவு, மணிபால் மருத்துவமனை, வர்தூர் சாலை மற்றும் ரங்கதூர் நினைவு மருத்துவமனை) கூறுகிறார்.

குழந்தைகள் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வதை வெளிப்படுத்த முடியாது என்பதால், பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன என்று டாக்டர் பாத்ரா கூறுகிறார்.

“லேசான ஜலதோஷம் மட்டுமே இருந்த குழந்தை, வேகமாக சுவாசிக்கத் தொடங்கினால், அது மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.” என்று டாக்டர் பாத்ரா கூறுகிறார்.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள், பிறக்கும்போதே இதய நோய் உள்ள குழந்தைகள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தைகளுக்கு மூச்சுக்குழாய் அழற்சி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று டாக்டர் குருதத் கூறுகிறார்.

 

மூச்சுக்குழாய் அழற்சி v/s பொதுவான ஜலதோஷம்

பிராங்கியோலைட்டிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் மூச்சுக்குழாய் அழற்சி, அதன் பெயர் குறிப்பிடுவது போலவே, நுரையீரல்களின் உள்ளே, கீழ்ப் பகுதியில் உள்ள பிராங்கியோல்கள் அல்லது சுவாசப் பாதைகளில் ஏற்படும் ஒரு நோய்த் தொற்று ஆகும் என டாக்டர் குருதத் கூறுகிறார், “பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், மூக்கில் மட்டுமே தொற்றை ஏற்படுத்தும். எனவே அதன் அறிகுறிகளும் மூக்கில் மட்டுமே இருக்கும், நுரையீரலை அது பாதிக்காது. இதனால்தான் பொதுவான ஜலதோஷம் உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் மூக்கில் அடைப்பு இருக்கும். ஆனால் மூச்சுக்குழாய் அழற்சி என்பது நுரையீரல் வரை பாதிக்கும் என்பதால் இந்தத் தொற்று குழந்தைகளுக்கு மூக்கு அடைப்பு மட்டும் இல்லாமல் சுவாசிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

மூச்சுக்குழாய் அழற்சிக்கான சிகிச்சை

டாக்டர் குருதத் கூறுகையில், மூச்சுக்குழாய் அழற்சி சில சந்தர்ப்பங்களில் கடுமையானதாக மாறக்கூடும். அதே நேரத்தில் ஏராளமான குழந்தைகளுக்கு வார்டிலோ அல்லது அவுட் பேஷன்ட்டாகவே கூட நோயைக் கட்டுப்படுத்திச் சமாளிக்க முடிகிறது.

“மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று, குழந்தை போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதாகும். சில நேரங்களில், குழந்தைக்கு நெபுலைசேஷன் மூலம் மருந்துகள் தேவைப்படும், இது ஓரளவிற்கு உதவும். ஹை-ஃபுலோ நாசல் கேனுலா (high-flow nasal cannula) போன்ற சில எளிய சாதனங்கள் மூக்கு வழியாக சுவாசக் குழாய்களைத் திறந்து வைக்க உதவும். வீக்கத்தைக் குறைக்கவும் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படும்” என்கிறார் டாக்டர் பாத்ரா.

பாக்டீரியா மூலம் ஏற்படும் தொற்றுகளுக்கு ஆண்டிபயாட்டிக் கொடுப்பது உதவும். அதே வேளையில், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற வைரஸ் தொற்றுகள் ஏற்பட்டால், “அந்த நோய்த் தொற்று தன்னால் குணமாகும் வரை காத்திருக்க வேண்டும். துணை மருந்துகள் மட்டும் கொடுக்கலாம்” என்று டாக்டர் குருதத் கூறுகிறார்.

தடுப்பு

RSV தடுப்பூசியானது மூச்சுக்குழாய் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கும் என்று டாக்டர் பாத்ரா கூறுகிறார். “இந்தத் தடுப்பூசி துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இன்னும் கிடைக்கவில்லை. இன்ஃப்ளூயன்ஸா மற்றும் ஃப்ளூ ஷாட்கள் ஓரளவிற்கு உதவலாம், ”என்று அவர் கூறுகிறார், ஆரம்ப மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

பேசிவ்வாக புகைபிடிக்க நேர்வது (அடுத்தவர் புகைக்கும்போது அதை சுவாசிக்க நேரிடுதல்), நெரிசலான இடங்களுக்குச் செல்வது, குழந்தைக்குப் பள்ளிக்குச் சென்று வரும் மூத்த உடன்பிறப்பு இருப்பது போன்றவை மூச்சுக்குழாய் அழற்சிக்கான காரணிகள் என்று டாக்டர் ராவ் கூறுகிறார். “உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் சரியான இருமல் ஒழுக்கமுறை (இரும்பும்போது வாயைக் கையால் மறைத்துக்கொள்வது போன்ற பழக்கங்கள்) போன்ற தடுப்பு நடவடிக்கைகள் உதவக்கூடும்.”

தெரிந்துகொள்ள வேண்டியவை:

  • மூச்சுக்குழாய் அழற்சி என்பது, 0-2 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே பொதுவாகக் காணப்படுகின்ற, சுவாசக்குழாயின் கீழ்ப்பகுதியை பாதிக்கும் தொற்று ஆகும். லேசான காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடிய நிலை வரையிலான சுவாசம் தொடர்பான அறிகுறிகளை இது ஏற்படுத்தலாம்
  • குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, அழுவது மற்றும் எரிச்சலுடன் இருப்பது, வேகமாக சுவாசிப்பது போன்ற அறிகுறிகளைக் காட்டுவது ஆகியவை பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.