728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Dengue diet: டெங்குவிற்கு ஏற்ற உணவு
0

Dengue diet: டெங்குவிற்கு ஏற்ற உணவு

டெங்கு தானாகவே சரியாகக்கூடிய நோய். இது குணமாக அதிகளவு திரவ உணவுகளையும், கொழுப்பு குறைவாக இருக்கும் உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

Fruits and leafy vegetables are an important part of the dengue fever diet

மழைக்காலத்தில் நம் அனைவருக்குமே டெங்கு பற்றிய பயம் இருக்கும், நம் உடலைச் சரிவரக் கவனித்துக் கொள்ளாவிட்டால், இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும். காய்ச்சலுக்குத் தேவையான சிகிச்சையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள பிரைம் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான டாக்டர் தனுஜா குரானா கூறுகையில், “நம் உடலுக்கு நேரம், ஆற்றல் மற்றும் பழைய நிலைக்குக் கொண்டு வரச் சரியான உணவு தேவை.” உடலில் டெங்குவின் தாக்கம் இருப்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கு உதவும் ஓர் உணவுமுறையை வடிவமைப்பது முக்கியமாகும்.

டெங்கு காய்ச்சல் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய உணவுமுறைகள்

  1. பழச்சாறு

நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம் என்று டாக்டர் குரானா குறிப்பிடுகிறார். “டெங்கு உணவுமுறையின் ஒரு பகுதியாக நீர் மற்றும் ஐசோடோனிக் திரவக் கரைசல்கள் போன்ற திரவங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை (platelet count) மற்றும் ஃபைப்ரினோஜன் அளவை அதிகரிக்க உதவுவதால் பழச்சாறுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஃபைப்ரினோஜன் அளவு அதிகரிக்கும்போது, நம் பிளேட்லெட்களின் எண்ணிக்கை தானாகவே அதிகரிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

  1. மீன், கோழி மற்றும் பன்னீர்

நம் உடல் தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும் புரதங்கள் தேவை.  டெங்குவில் இருந்து மீண்டு வருபவர் அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் அவர்கள் சிக்கன், மீன், முட்டை போன்ற புரதச்சத்து அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார். மேலும் அவர், “சைவ உணவு உண்பவர்களுக்கு டோஃபூ, பன்னீர் மற்றும் பீன்ஸ் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறுகிறார். இருப்பினும் சிவப்பு பீன்ஸுக்கு பதிலாக வெள்ளை பீன்ஸைத் தேர்வு செய்ய வேண்டும். கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவுகளே (lean proteins) நம்முடைய உடலுக்குத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறுகிறார்.

  1. பச்சைக் காய்கறிகள்

கீரை, குடைமிளகாய், பீன்ஸ் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற காய்கறிகளில் ஃபோலேட் அதிகமாக இருப்பதால் அவற்றைச் சாப்பிட வேண்டும், இது ஆரோக்கியமான உயிரணுவின் வளர்ச்சி மற்றும் பிரிவை ஊக்குவிக்கிறது. டெங்குவினால் குறைந்த இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இவற்றின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.

முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வைட்டமின் k நிறைந்த உணவுகளை டெங்கு உணவு முறையில் சேர்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். முக்கியமாக இவை இரத்தம் உறைவதைத் தடுக்கவும், இரத்தக் கசிவைத் தடுக்கவும் உதவியாக இருக்கிறது.

  1. பப்பாளி, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு

 பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் ஆப்பிள்களை உட்கொள்ள டாக்டர் குரானா பரிந்துரைக்கிறார், ஏனெனில் இந்தப் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது, இவை உடலை விரைவாகப் பழைய நிலைக்குக் கொண்டு வர உதவுகின்றன. பப்பாளி ஃபைப்ரினோஜென் அளவை அதிகரிக்கிறது, இதனால் டெங்குவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வெண்ணெய் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்ற அதிகக் கொழுப்புகளைக் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் குரானா சுட்டிக்காட்டுகிறார். “காரமான உணவு மற்றும் காஃபினேட்டட் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை டையூரிடிக் ஆக செயல்படுகின்றன, அதே நேரத்தில் டெங்குவை எதிர்த்துப் போராடும்போது, நமக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, இந்த உணவுகள் முழு செயல்முறைக்கும் முரணாக இருக்கும்.” என்று கூறுகிறார்.

மொஹாலியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஆஸ்தா குங்கர், டெங்கு உணவுமுறையின் ஒரு பகுதியாகக் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார்:

  •   “சம்பா கோதுமை (dalia) அல்லது ஓட்ஸைக் காலையில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் உடலில் நீர் சத்து குறையாமல் இருக்க எலுமிச்சைச் சாற்றை எடுத்துக் கொள்ளலாம்” என்று அவர் பரிந்துரைக்கிறார், ஆனால் பிரட் (bread) சாப்பிடக்கூடாது என்று அவர் கூறுகிறார்.
  •   மதிய உணவிற்கு, அவர் பரிந்துரைப்பது பன்னீருடன் சூப் அல்லது சிறுதானியங்களில் செய்த கிச்சடி.
  •   இரவு உணவுக்கு, “பருப்பு, சாதம் சாப்பிடலாம். நம் உடலுக்கு கலோரிகள் தேவைப்படுவதால் முட்டையும் பாலும் கலந்த கஸ்டர்ட் சாப்பிட வேண்டும், “என்று கூறுகிறார்.

பெங்களூரு மில்லர்ஸ் சாலையில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையின் உள் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பிரமோத்  V சத்யா, நோய்த்தொற்று ஏற்பட்ட 3 முதல் 5 நாட்களுக்குள், தொற்றுநோயை எதிர்த்துப் போராட நமது கல்லீரல் கடினமாக உழைக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். இதன் விளைவாக, கல்லீரல் வீங்கி, பசியைக் குறைத்து குமட்டலை ஏற்படுத்துகிறது. அந்த நேரத்தில் அதிக எண்ணெயில் வறுத்த தின்பண்டங்கள் அல்லது அதிக கொழுப்புகளைக்  கொண்ட உணவைச் சாப்பிட வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கிறார், ஏனெனில் கல்லீரல் அதை ஜீரணிக்கச் சிரமப்படும்.

டெங்கு தானாகவே சரியாகும் நோய் என்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் நிறைய திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

5 × 2 =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.