வயதாவதைத் தவிர்க்க முடியாது. வயதாகுதல் என்பது உள்ளுருப்புகளுக்கும் நடக்கும் வெளி உறுப்புகளுக்கும் நடக்கும். உள் தசைகளின் பலம், இறுக்கமான மாலிகுளார் வடிவமைப்பு, அனைத்து உடல் உறுப்புகளும் நன்றாக இயங்குதல், வெளியே பொலிவான தோல் ஆகியவை இளமையாக இருப்பதைக் குறிக்கும். வயதாகும்போது இந்தக் கூறுகளில் சுணக்கம் ஏற்படும்.
உடலில் பெரிய பகுதியான தோல்தான் வயதாவது தொடர்பாக வெளிப்படையாகக் குறிப்பதாகும். “வயதாவதால் தோல் செல்கள் பாதிப்படையும். இதற்கு உட்புற காரணிகளோ (மரபணு) வெளிப்புறக் காரணிகளோ (UV கதிர்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், காற்று மாசு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை) காரணமாக அமையலாம்” என்று புது டில்லியில் உள்ள ‘நியூட்ரிஷன் டிஃபைன்ட்’ என்ற நிறுவனத்தை நிறுவியவரும் கிளினிக்கல் உணவியலாளருமான ரிதிமா பாத்ரா கூறுகிறார்.
“மரபணு தொடர்பான காரணிகளைவிடப் பெரும்பாலும் வெளிப்புறக் காரணிகளே தோல் வயதாவதற்கு முக்கியக் காரணமாக அமையும்” என்று பெங்களூரைச் சேர்ந்த இன்ஸ்ட்டாகிராமரும் யோகா ஆசிரியர் மற்றும் உணவியலாளரான ஷாலினி அபிலாஷ் தெரிவிக்கிறார்.
கொலேஜன் குறைதல்: தோல் வயதடைவதற்கான மூலக் காரணம்
“வயதாவது என்பது கொலேஜன் என்ற அமினோ அமிலத்தின் அடிப்படையில் அமையும். புரதம் அடிப்படையிலான இந்தத் தசையானது ஜாயின்ட்டுகள், தசைகள் ஆகியவற்றை இணைக்கிறது. இது தோலின் மாலிகுலார் வடிவத்தை வலுவாக இணைப்பதாகும்” என்கிறார் ஷாலினி.
25 வயது வரை இது உடலில் அபரிமிதமாக இருக்கும் என்கிறார் ஷாலினி. “25 வயதிற்குப் பிறகு இந்தக் கொலேஜன் உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் 10-15 சதவீதம் அளவு குறையும்.”
வயதாகும்போது தோலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்தக் கொலேஜன் குறைவதுதான் காரணமாக அமையும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், அதிகம் சர்க்கரை எடுத்துக்கொள்வது, சரியான தூக்கமின்மை போன்றவை கொலேஜன் குறைவதற்கான சில காரணிகள் ஆகும்.
தூக்கமின்மை அல்லது சரியான தூக்கம் இல்லாமல் போவது போன்றவை சீக்கிரமே வயதாவதற்கு வழிவகுக்கும் என்று ஷாலினி எச்சரிக்கிறார்.
தோல் வயதடைவதைக் குறிக்கும் முன்கூட்டிய அறிகுறிகள்
பின்வரும் காரணிகள் அடிப்படையில் முன்கூட்டியே வயதாகுதலை அறியலாம் என்று ரிதிமா கூறுகிறார்
- ஹைபர்பிக்மென்டேஷன்
- லூசான தோல் அல்லது தோலின் எலாஸ்ட்டிசிட்டி போகுதல்
- முடி நரைத்தல் அல்லது முடி கொட்டுதல்
அதிகக் கொலேஜன் சுரப்பதால் வயதாகும் வேகம் குறையும்
கொலேஜன் உற்பத்தி, வயதாவதைத் தாமதப்படுத்தும். சரியான உணவுமுறை மற்றும் பேலன்சான உணவை எடுத்துக்கொண்டால் இது சாத்தியமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாமிசத்தில் மட்டுமே கொலேஜன் அதிகம் இருப்பதால் வயதாவதைத் தாமதப்படுத்த அதை மட்டுமே சார்ந்து இருப்பது நல்லதல்ல என்று ஷாலினி தெளிவுபடுத்துகிறார். நார்ச் சத்து அதிகமுள்ள கீரைகள் சார்ந்த உணவை எடுத்துக்கொள்வதால் கொலேஜன் சுரப்பை அதிகரிக்கலாம் என்கிறார் ஷாலினி.
“100 கிராம் மாமிசத்தில் வெறும் 0.3% கொலேஜன்” மட்டுமே இருக்கும்.
வீக்கத்திற்கு எதிரான பொருள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் C, ஜிங்க், காப்பர், சிலிகான், கிலைஸின், லைசின் போன்றவை அதிகம் உள்ள உணவுகள் கொலேஜனைச் சுரக்கச் செய்ய உதவும் என்கிறார் ரிதிமா.
வயதாவதைத் தடுக்கும் உணவுகள்: மேஜிக் போர்ஷன் உள்ளதா?
“செடி அடிப்படையிலான பெரும்பாலான உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கும்” என்கிறார் ஷாலினி. “ஆனால் சில உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்/அல்லது நார்ச் சத்துகள் சில மில்லி கிராம் அளவு அதிகம் இருக்கும்” என்றும் இளமைக் காலத்தில் இருந்தே ஆரோக்கியமான வாழ்வு முறையை மேற்கொள்வதால் வயதாவது தாமதமாகும் என்பதை ஷாலினி அழுத்தமாகக் கூறுகிறார்.
பெங்களூரைச் சேர்ந்த IT ஊழியரான 42 வயதுடைய R ஆஷா, ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் இருப்பதால் ஒரு ஆண்டாக நெல்லிக்காயைச் சாப்பிட்டதாகக் ஹேப்பியஸ்ட் ஹெல்த்திடம் கூறினார். “வெறும் வயிற்றில் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்வேன். இப்போது எனது ஆற்றல் அதிகரித்துள்ளது. எனது தோலும் ஆரோக்கியமாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இப்போது என் தோல் அதிகப் பொலிவுடன் உள்ளது” என்கிறார்.
வயதாவதைத் தாமதமாக்க பல உணவுகள் உள்ளன:
· கற்றாழை
கற்றாழையில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கற்றாழை ஜூஸை காலையில் எடுத்துக்கொள்வது நல்லது என்று அவர் கூறுகிறார். மோரிங்கா இலைகள், கோதுமைப் புல், பெர்முடா புல் ஆகியவற்றின் ஜூஸிலும் ஒட்டுமொத்த ஊட்டச்சத்துகள் உள்ளன.
· க்ரூசிஃபெரஸ் வகை காய்கறிகள்
ப்ரோக்கோலி, பிரஸ்ஸல் முளைகள், முட்டைக்கோஸ் மற்றும் பிற இலைக் காய்கறிகள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்மேட்டரி தன்மைகள் அதிகம் இருப்பதாக ரிதிமா கூறுகிறார். க்ரூசிஃபெரஸ் வகைக் காய்கறிகளில் உள்ள ஸல்ஃபோரன்ஸ் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற ஆர்கானிக் அமிலங்கள்தான் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரெஸ்பான்ஸை ஆக்டிவேட் செய்வதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
· காளான்
காளானில் அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இருந்தாலும் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்க அதைச் சமைத்துதான் சாப்பிட வேண்டும் என்று ஷாலினி கூறுகிறார். “வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் எடுத்துக்கொள்ளவும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
· நெல்லிக்காய்
ஆம்லா என்றும் அழைக்கப்படும் இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் C நிரம்பியுள்ளது என்றும் அதில் வயதாவதைத் தாமதபடுத்தும் ஒரு தனித்துவமான தன்மையுள்ளது. அது கொலேஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. அவர் இதை அதிகாலையில் எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்.
· டார்க் சாக்லேட்
கோகுவா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் டார்க் சாக்லேட்டில் வயதாவதைத் தாமதப்படுத்தும் தன்மை அடங்கியுள்ளது. கோகுவா பீன்ஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பதப்படுத்துவதால் அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை அகற்றப்படுவதாக அவர் எச்சரிக்கிறார். “டார்க் சாக்லேட்கள் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்தான். ஆனால் அதிலுள்ள கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றையும் மறக்காதீர்கள்” என்று ஷாலினி எச்சரிக்கிறார்,
“நீரிழுவு நோய் இல்லாதவர்கள் ஒரு நாளுக்கு ஆறு முதல் எட்டு கிராம் டார்க் சாக்லேட் சாப்பிடலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
எல்லா உடல் வகைக்கும் அனைத்து ஆன்டி-ஏஜிங் உணவும் பொருந்தாது என்று சென்னையில் இருக்கும்அதுல்யா சீனியர் கேரில், கிளினிக்கல் உணவியலாளராக உள்ள, மருத்துவர் சுகன்யா தெரிவிக்கிறார். உதாரணமாக, ஹைபோதைராய்டிசம் உள்ளவர்களுக்கு க்ரூசிஃபெரஸ் வகை காய்கறிகளை ஜீரணிப்பது கடினமானதாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். மிகவும் தொலைவில் உள்ள இடங்களில் பயிரடப்பட்டு உங்கள் இடத்திற்கு அனுப்பப்படும் வரை தாக்குபிடிப்பதர்காக ப்ரிசர்வேட்டிவே சேர்க்கப்பட்ட பொருட்களை எடுத்துக்கொள்வதைவிட உள்ளூரில் கிடைக்கும் பண்ணைத் தயாரிப்புகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பேலன்ஸ் செய்வது
வயதைத் தாமதப்படுத்தும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வதால் உடலின் சமநிலை பாதிக்கப்படும். ஒருநாளுக்குக் குறைந்தது நான்கு முதல் ஐந்து சர்விங்கிளான பழங்கள், காய்கறிகள், புரதங்கள் ஆகியவை உள்ளடக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் ரிதிமா.
ஒரே சாப்பாட்டில் தேவையான அனைத்தையும் எடுத்துக்கொள்ள முடியாது. பகுதியளவாக மூன்று முதல் ஆறு வேளைகள் எடுத்துக்கொள்ளலாம். “நார் சத்து அதிகமுள்ள சமைத்த காய்கறியை ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் 100 கிராம்கள் எடுத்துக்கொண்டால் வயதாவது தாமதமாகும்” என்று அவர் விளக்குகிறார்.
இலவசமாக கிடைக்கக்கூடிய அதிகம் பயன்படுத்தப்படாத மருந்து ‘தூக்கம்’ என்று ஷாலினி சொல்கிறார்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- கொலேஜன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் வயதாவதைத் தாமதப்படுத்தும்
- காளான், டார்க் சாக்லேட், நெல்லிக்காய் போன்ற க்ரூசிஃபெரஸ் வகை காய்கறிகள் கொலேஜனை உற்பத்தி செய்யும்.
- இளமையாக இருக்கும்போதே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வது, வயதாவதைத் தாமதப்படுத்த முக்கியமான காரணி.
- உறக்கமே இல்லாமல் வெறும் உணவை மட்டும் சாப்பிடுவதாலும் தோல் வயதாகலாம்.