728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

யோகாசனம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்!
9

யோகாசனம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள்!

யோகா பயிற்சி உடலுக்கு பல நன்மைகளைச் செய்தாலும், சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

நமது பாரம்பரிய யோகா பயிற்சி உடலை மட்டுமின்றி மனதையும் வலுவாக்கி, மக்களின் நல்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கிறது. இதனாலேயே இன்று யோகா கலையை, இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் பலரும் கற்று வருகின்றனர்.

யோகாவின் தத்துவம் உடலையும், மனதையும் இணைப்பது என்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்ஃபினிட்டி யோகா பயிற்சி மைய நிறுவனர் ஷர்மிளா. கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் இவரிடம் யோகாவின் நன்மைகள் மற்றும் எந்த உடல் பிரச்னை இருப்பவர்கள், எந்த மாதிரியான யோகா பயிற்சிகள் செய்ய கூடாது ஆகியவை பற்றி கேட்டறிந்தோம்.

இது பற்றி அவர் கூறியதாவது: தற்போது நவீன யோகா வகுப்புகள் மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, உடல் வலிமை, சுறுசுறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும். யோகாவின் பலன்களை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளை பதஞ்சலி ஆராய்ச்சி மையம் செய்து வருகிறது.

அவர்கள் ஆய்வுகளின் படி, யோகாவை சரியான முறையில் பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும், உடல் இறுக்கம் போகும், நெகிழ்வுத்தன்மை ஏற்படும், சீரான எடை அளவு தொடரும், ஃபிட்னெஸ் மேம்படும்.

சரியான பயிற்சி தேவை

யோகாவை சரியாகப் பயிற்சி செய்யாவிட்டால், பாதகமான விளைவுகள் ஏற்படலாம்; இது பழங்கால நூல்களிலும் எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலான யோகாசன பயிற்சிகள் எளிமையானது தான். நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளரின் வழிநடத்தலில் நீங்கள் இவற்றை செய்யலாம். யோகா செய்யும் போது கடுமையான காயம் ஏற்படுவது அரிது. ஆரம்பத்திலேயே அதிக பயிற்சி எடுத்தால் தசை வலிகள் ஏற்படும்.

யோகாவை கவனமுடன் அணுகவேண்டியவர்கள்

இதயநோய், கர்ப்பிணி பெண்கள், எலும்பு மற்றும் மூட்டு பிரச்னைகள் உள்ளவர்கள், கடுமையான இடுப்பு, முதுகு வலி இருப்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா உள்ளிட்ட கண் நோய் இருப்பவர்கள் அதிக அழுத்தம் தரும் யோகா பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு யோகா பயிற்சியாளர் ஷர்மிளா கூறினார்.

எந்தெந்த வகை யோகாவை தவிர்க்க வேண்டும்?

மேலும் அவரிடம், குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னை இருப்பவர்கள் எந்த மாதிரியான யோகாசனங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டதற்கு, அவர் கூறிய பதில்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கும் யோகா போஸ்கள், கடுமையான உடல் செயல்பாடுகளை கோரும் யோகா போஸ்களை பரிந்துரைக்க கூடாது. அதே சமயம், பிபி இருப்பவர்கள் தகுந்த வழிகாட்டுதலின் கீழ் யோகா பயிற்சி செய்யும் போது, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தலை கீழ் யோகசனங்களான, சிரசாசனா, பத ஹஸ்த சிரசாசனா, டால்பின் போஸ், சர்வாங்காசனா, அர்த்த சர்வாங்காசனா, அதோ முக விர்க்சாசனா போன்ற அதிக வலு தேவைப்படும் போஸ்கள் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய யோகாசனங்கள்

கர்ப்பிணி பெண்கள் தங்களது நான்காவது மாதத்தில் இருந்து மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தாங்களாகவே யோகா பயிற்சி மேற்கொள்வதை தவிருங்கள். தகுதிவாய்ந்த யோகா பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று, அவரது மேற்பார்வையில் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள் குப்புற படுத்து செய்யும் யோகாசனங்கள், தலைகீழாக செய்யும் யோகாசனங்கள், இடுப்பை வளைத்து செய்யும் யோகாசனங்களை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, மரிச்யாசனம், வில் போன்ற நிலையை உடைய தனுராசனம், அர்த்த மத்ஸ்யேந்திராசனம், பரிவர்த திரிகோணாசனம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவை கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும்.

அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்க வேண்டிய யோகாசனங்கள்

சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, உடல் குணமடைய நேரம் தேவைப்படும். இவர்கள் கடுமையான யோகாசனங்களை செய்யக்கூடாது. அவை அறுவைசிகிச்சை செய்யபட்ட பகுதிக்கு அழுத்தம் தரலாம்.

குறிப்பாக பாலாசனம், பரத்வாஜாசனம், மத்ஸ்யாசனம் போன்ற பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். இவை வயிறு, மார்பு அல்லது முதுகு தண்டுவடத்தின் மீது அழுத்தம் கொடுக்கும். இதனால் உடல் குணமடைய நேரம் எடுக்கும். இவ்வாறு யோகா பயிற்சியாளர் ஷர்மிளா விரிவாக விளக்கினார்.

கண் நோய் இருப்பவர்கள் செய்யக்கூடாத யோகாசனங்கள்!

இது குறித்து, புதுச்சேரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின், கண் மருத்துவத் துறை இணை பேராசிரியர், டாக்டர் ஸ்ரீபால் விளக்கினார்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் நிலைமைகள், வாழ்க்கை முறை, மரபியல் மற்றும் சுகாதார காரணிகளால் கண்புரை, குளுக்கோமா, நீரிழிவு ரெட்டினோபதி, மேக்குலார் டீஜெனரேஷன் ஆகிய கண் நோய்கள் பொதுவானதாக இருக்கின்றன.

இத்தகைய கண் நோய் இருப்பவர்கள் மற்றும் இதற்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், யோகாசனப் பயிற்சி மேற்கொள்ளும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.

இவர்கள் தலைகீழாக செய்யக் கூடிய யோகா பயிற்சிகள், குனிந்து செய்யக் கூடிய பயிற்சிகள், ஆழ்ந்த பிரணாயாமம் ஆகியவற்றை செய்யக்கூடாது.

இது போன்ற பயிற்சிகளால், உள்விழி அழுத்தம் அதிகமாகி, கண் நரம்புகளை அவை பாதிக்கும். சில சமயங்களில் பார்வை இழப்புக் கூட வழிவகுக்கலாம் இவ்வாறு கண் மருத்துவர் ஸ்ரீபால் கூறினார்.

 

உடல் வலி இருப்பவர்கள் யோகா செய்யலாமா?

இது குறித்து விழுப்புரத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டர் இந்திரா காந்தி, கூறியதாவது: நீண்ட நாள் முதுகுவலி, மூட்டு வலி இருப்பவர்கள் சிக்கலான யோகசனங்களை தவிர்க்க வேண்டும். யோகாவின் போது முன்னோக்கி, பின்னோக்கி வளைவது போன்ற பயிற்சியால் முதுகுவலி அதிகமாகும். எனவே அத்தகைய அழுத்தத்திற்கு உரிய பயிற்சிகளை செய்யக்கூடாது.

அதே போன்று மூட்டுக்கு அழுத்தம் தரும் யோகா பயிற்சிகளால் இணை தசைநார்கள் பாதித்து முழங்கால் வலியை அதிகரிக்கும். எனவே முறையான யோகா நுட்பத்தை கடைபிடித்து போஸ்களை மாற்ற வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
பெருந்தமனி தடிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால்தான் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுரை
முடி உதிர்தல் பொதுவாக மரபியல் சார்ந்தது, ஆனால் அது ஏற்படுவதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன
கட்டுரை
புதியவர்கள் முதல் தொழில்முறை மராத்தான் வீரர்கள் வரை, தசைப்பிடிப்பு யாரை வேண்டுமானாலும் எதிர்பாராத விதமாகத் தாக்கும். போதுமான நீரேற்றம் மற்றும் சரியான ஓய்வு போன்ற நடவடிக்கைகள் இதில் உதவும்
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.
கட்டுரை
நாள்பட்ட மூட்டு வலியானது வயது, தேய்மானம், காயங்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உட்பட பல அடிப்படைக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். மோசமான உணவு, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அதை இன்னும் மோசமாக்கும்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.