728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

புற்றுநோய்: பஞ்சு மிட்டாய்க்குத் தமிழக அரசு தடை
428

புற்றுநோய்: பஞ்சு மிட்டாய்க்குத் தமிழக அரசு தடை

புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரோடோமைன்-B என்பது குழந்தைகளை வண்ணத்தின் மூலம் கவர்வதற்காகவும் சுவைக்கு அடிமைப்படுத்துவதற்காகவும் உணவுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனப் பொருளாகும்

Any food that has florescent colors such as green, pink, orange, red, yellow, blue, are to be avoided.

நம்மில் பலரும் சிறு வயதில் பஞ்சு மிட்டாய் சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் சிறுவயது நினைவாய் இருந்த பஞ்சு மிட்டாய் இனி புற்றுநோயை நினைவுபடுத்தும் பொருளாக இனி அறியப்படப் போகிறது. தமிழ்நாடு அரசின் ‘உணவுப் பகுப்பாய்வு ஆய்வகம்’ பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கக்கூடிய பொருள் இருப்பதை உறுதிசெய்ததை அடுத்து பிப்ரவரி 17ல் இருந்து தமிழக அரசு பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு புதுச்சேரி அரசும் பிப்ரவரி 9-ஆம் தேதியில் இருந்து பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. 

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மாநில அரசு, தொடர் ரெய்டுகள் நடத்தி சந்தையில் விற்கப்பட்ட ஸாஃப்ட் கேண்டி (soft candy)/கேண்டி ஃபிளாஸின் (Candy floss) மாதிரிகளைக் கைப்பற்றி அவற்றின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வுக் கூடத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் அவற்றில் துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாயமான ரோடோமைன்-B இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வக அறிக்கையைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-இன் விதிகளின் கீழ் பஞ்சு மிட்டாயின் தரநிலை சரியில்லை என்றும் அதை சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்றும் அதன் அடிப்படையில் அதற்குத் தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியம் இதைப்பற்றி கூறும்போது இந்தச் சட்டத்தின்படி ரோடோமைன் -B அடங்கிய உணவைத் தயாரிப்பது, பேக் செய்வது, இறக்குமதி செய்வது, விற்பது, பிறருக்கு வழங்குவது ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்திருந்தார்.

ரோடோமைன்-B என்பது என்ன?

ரோடோமைன்-B என்பது பஞ்சு மிட்டாய் பிங்க், நீலம், பச்சை ஆகிய வண்ணங்களில் தெரிவதற்காக அதில் சேர்க்கப்படும் ஒரு செயற்கை நிறமி ஆகும். “ரோடோமைன்-B என்ற இந்த ரசாயனம் பவுடராக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருக்கும். தண்ணீரில் கலந்தவுடன் அது பிங்க் நிறமாக மாறும். உணவுப் பொருட்களை கவர்ச்சியான வண்ணத்தில் வழங்குவதற்கும், சாப்பிடுபவர்களை அதன் சுவைக்கு அடிமைப்படுத்தும் நோக்கத்துடனும் இவை உணவுத் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று சென்னையில் உள்ள அப்போல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையில் புற்றுநோயியல் ஆலோசனை நிபுணரான டாக்டர் அனிதா ரமேஷ் கூறுகிறார்.

ரசாயனங்கள் வயிற்று வழியாக உடம்பில் நுழையும்போது புற்றுநோயை உண்டாக்குவதுடன் கல்லீரல் செயலிழப்பிற்கும் வழிவகுக்கும் என்று டாக்டர் ரமேஷ் கூறினார். “புற்று நோயை உண்டாக்கக்கூடிய பொருள் என்பது உடலில் தூண்டுதலுக்கு உள்ளாகி சில மாற்றங்களுக்கும் பிறழ்வுகளுக்கும் உள்ளாகி நீண்ட நாட்கள் அடிப்படையில் உடலை பாதிக்கக்கூடிய பொருளாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ரசாயனம் பஞ்சு மிட்டாயில் மட்டுமில்லாமல் பல வண்ணங்களில் வரும் மிட்டாய்கள், சிவப்பு மிளகாய்கள், மிளகாய் தூள், டொமேடோ கெட்ச்-அப்/சாஸ், ஸ்வீட்னர்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்களில் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ரோடோமைன்-Bயின் பிற பாதிப்புகள்

மூளை மற்றும் முதுகுத் தண்டுடன் இணைந்துள்ள புற தசையையும் இந்த ரசாயனம் பாதிப்பதாகவும், இதன் விளைவாக மூளை மற்றும் முதுகுத் தண்டின் செயல்பாட்டில் இது பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் டாக்டர் ரமேஷ் தெரிவிக்கிறார். புற்றுநோய் மட்டுமில்லாமல் கல்லீரல் பாதிப்பு, பெருமூளை பாதிப்பு போன்ற பிற பாதிப்புகளையும் இந்த ரசாயனம் உண்டாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவிக்கிறார். தொடர்ச்சியாக இதை உட்கொள்வதால் இது கண்ணையும் பாதிக்கும் என்றும் கூறுகிறார். 

பெரும்பாலான குழந்தைகள் விழிப்புணர்வு இல்லாததால், புற்று நோயை உண்டாக்கும் செயற்கைப் பொருட்களுடன் கூடிய, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர் என்று டாக்டர் வினய் முனிகோடி வெங்கடேஷ் குறிப்பட்டார். “உணவு பேக்கேஜிங்கில் உள்ள பொருட்களை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பு ஒருமுறை அதில் வழங்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து அறிந்துகொள்வது எப்போதும் நல்ல நடைமுறை. ஸ்வீட்னர்கள்/வண்ணங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது”என்று அவர் மேலும் கூறினார்.

பதப்படுத்தப்பட்ட உணவில் வண்ணத்திற்காகச் சேர்க்கப்படும் இந்த ரசாயனங்கள் அதிகம் இருப்பதாக டாக்டர் வெங்கடேஷ் கூறுகிறார். “இது புற்றுநோயை உண்டாக்கும் பொருள் மட்டுமல்ல, வயிற்றைப் பாதித்து அதைச் சீர்குலைக்கும் ஒரு செயற்கை இரசாயனமும் கூட. புற்று நோய் என்று சொல்லும் போது, பொதுமக்களுக்கு இதன் தீவிரத் தன்மை புரியும் என்பதால் அவர்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வோடு இருப்பார்கள். அது நல்லதுதான்” என்றும் தெரிவித்தார்.

அறிகுறிகள்

சில பொதுவான நரம்பியல் அறிகுறிகள்:

  • ஞாபக மறதி
  • முக வீக்கம்
  • அலர்ஜி
  • குழப்பம்
  • மூச்சுத் திணறல்

காலப்போக்கில் பாதிப்பு அதிகரிக்கும்

“இதன் அறிகுறிகள் உடனடியாகத் தெரியாது. இந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் நீண்டநாட்கள் எடுத்துக் கொண்டால் இந்த அறிகுறிகள் தென்படும். கடற்கரைக்குச் செல்லும்போதெல்லாம் பஞ்சு மிட்டாய் சாப்பிடுபவராக இருந்தால் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரசாயனங்களைக் கூடுதலாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இதனால் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்” என்று டாக்டர் ரமேஷ் கூறுகிறார்.

ரசாயனம் கலக்கப்படாத இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது என்று டாக்டர் வெங்கடேஷ் கூறுகிறார். “பிள்ளைகள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். பஞ்சு மிட்டாய் சாப்பிட்டவுடன்  புற்றுநோய் வந்துவிடும் என்பதில்லை. ஆனால் அதை எடுக்க எடுக்க உடலில் இந்த ரசாயனத்தின் அளவு அதிகரித்து காலப்போக்கில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்” என்று அவர் கூறுகிறார்.

ஃபுலோரஸன்ட் வண்ணங்கள் என்று சொல்லக்கூடிய பச்சை, பிங்க், ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய வண்ணங்கள் செயற்கையாக ஊட்டப்பட்ட உணவுகளைத் தவிர்க்குமாறு டாக்டர் ரமேஷ் தெரிவிக்கிறார். இந்த வண்ணங்கள் கவர்வதற்காகச் சேர்க்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். குறிப்பாக மிட்டாய்களிலும், பிரியாணி, அரிசி ஆகியவற்றில் கலைக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். “புற்றுநோய் உண்டாகுவதைப் பொறுத்தவரை புகையிலையுடன் ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்றாலும் இதுவும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியதுதான்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

டாக்டர் வெங்கடேஷ் கூறும்போது, “சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான நிபுணர் என்ற முறையில், நாங்கள் எந்த ரசாயனத்தையும் பிள்ளைகளுக்கு ஏற்படும் புற்றுநோயுடன் தொடர்புபடுத்த மாட்டோம். இவை அனைத்தும் வாழ்வியல் மாற்றம் காரணமாக ஏற்படும் பபுற்றுநோய்கள் ஆகும். இந்த ரசாயனங்கள்தான் குழந்தைகளுக்கு புற்றுநோய்களை உண்டாக்குகின்றன என்று சொல்வதற்கு எந்த தரவும் இல்லை. ஆனால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது” என்று டாக்டர் வெங்கடேஷ் கூறுகிறார்.

அவரின் கருத்துப்படி  அரசானது உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் ஆரோக்கியமற்ற ரசாயனங்களை கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தி தடை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். “உணவுக்கான வண்ணங்களைச் சேர்த்து வண்ணமயமாகவும் கவர்ச்சிகரமாகவும் ஆக்கப்படும் எந்தவொரு உணவையும் தவிர்ப்பது நல்லது” என்று அவர் தெரிவிக்கிறார்.

உணவுத் துறையால் ஆராயப்படாத உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் எச்சரித்தார், குறிப்பாக தரமற்ற பொருட்களுடன் உள்ளூரில் தயாரிக்கப்படும் உணவுகள்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.