மைக்ரோ பிளாஸ்டிக்கால் ஏற்படும் 5 தீமைகள்

- அபிஷேக் மோகன்

பிளாஸ்டிக் கழிவுகளை பொதுவெளியில் எரிப்பது, அசுத்தமான கடல் உணவுகளை உட்கொள்வது போன்றவற்றின் மூலம் மைக்ரோ பிளாஸ்டிக் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். சர்க்கரை, உப்பு, குடிநீர், மீன், தேன், பீர், பேக் செய்த உணவுகள் போன்றவற்றில் மைக்ரோ பிளாஸ்டிக் இருக்க வாய்ப்புள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக் என்றால் என்ன?

தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது சிதைந்த பிளாஸ்டி பொருளில் இருந்து உருவாகும் சிறிய துகள்கள் (0.5mmக்கும் குறைவான அளவு) ஆகும். உணவு, தண்ணீர் உட்பட பலவற்றில் இவை இருக்கக்கூடும்.

உணவில் எப்படிக் கலக்கிறது?

உரங்கள் பூச்சிக் சிக்கொல்லிகள், நீர்நிலைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் யூனிட்கள் போன்ற பல வழிகளில் இது உணவுச் சங்கிலியில் நுழைகிறது. இவற்றை உட்கொள்வது உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.

மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

ஆம். மைக்ரோபிளாஸ்டிக்குகளை உட்கொள்வது மனிதர்களுக்கு உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும்.

குடல் எரிச்சல்

மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சியின் மூலம் குடல் நுண்ணுயிரியை சீர்குலைத்து, செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும்.

கல்லீரல் & நாளமில்லா சீர்குலைவு

இவற்றை உட்கொள்வது நாளமில்லா ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்கும். மேலும், அவை அதிகம் உடலில் சென்றால் கல்லீரலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும். இதன் விளைவாக வீக்கம் மற்றும் திசு சேதம் ஏற்படலாம்.

இரைப்பை குடல் அழற்சி

இவற்றை உட்கொள்வதால் இரைப்பைக் குழாயில் வீக்கம் ஏற்படும். இது 'எரிச்சல் கொண்ட குடல் நோய்' போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.

இனப்பெருக்க பிரச்சினைகள்

நீண்டகாலமாக இவை உடலுள் செல்வதால் கருவுறாமை பிரச்சினைகள், கரு வளர்ச்சி பிரச்சினைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியில் செரியவருகிறது.

நுகர்வதால் வரும் அபாயம்

மைக்ரோபிளாஸ்டிக்கை நுகர்வதால் நுரையீரல் திசுக்கள் சேதமடையும். இது புற்றுநோய், ஆஸ்துமா தாக்குதல்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவில் ஒவ்வாமை பருவம்: மகரந்த ஒவ்வாமைகளை எப்படி நிர்வகிப்பது?

Next>>