கோடையில் முட்டை சாப்பிட 5 காரணங்கள்

 – அபிஷேக் மோகன்

முட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவே அவற்றை அன்றாட கோடைகால உணவில் மிதமான அளவு சேர்க்கலாம். சில முக்கிய நன்மைகள் இதோ.

எலக்ட்ரோலைட் நிறைந்தவை

முட்டையில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற எலக்ட்ரோலைட் சிறிய அளவில் உள்ளன. இவை உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும்.

கண்ணிற்கு நல்லது

மஞ்சள் கருவில் லுடீன், ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் (இயற்கையான கொழுப்பில் கரையக்கூடிய நிறமிகள்) உள்ளன. இவை கண் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் சூரிய பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.

ஊட்டச்சத்துகள்

புரதத்தோடு முட்டைகள் நல்ல கொழுப்பு, வைட்டமின் B 12, வைட்டமின் D, தாதுக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சி, தோல் ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

புரதம் நிறைந்தத

முட்டையில் தரமான புரதம் இருப்பதோடு தசைப் பழுது, ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன. ஒரு முட்டையில் சுமார் 6.3 கிராம் புரதம் உள்ளது.

எடை குறைக்க உதவும்

அதில் உள்ள புரதம் நிறைவான உணர்வைத் தரும். இது கலோரி அளவைக் குறைக்கிறது,அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.

கோடை உணவில்  சேருங்கள்

முட்டையை கோடைகால உணவில் எளிதாக சேர்க்கலாம். சாலட், சாண்ட்விச் போன்ற லேசான மற்றும் சத்தான காலை உணவின் ஒரு பகுதியாக அவற்றை உருவாக்கலாம்.

கோடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள்

Next>>