728X90

728X90

எடிட்டோரியல் கொள்கை

1. அறிமுகம்

1.1 ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான தகவல்களைப் பெற பல்வேறு சாதனங்களில் எங்கள் பிளாட்ஃபார்மை அணுகுபவர்களுக்கு அதற்கான தகவல்களையும் சேவைகளையும் வழங்குவதற்கான B2C பிளாட்ஃபார்ம் ஆகும். இந்தப் பிளாட்ஃபார்ம் ஹேப்பியஸ்ட் ஹெல்த் சிஸ்டம் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திற்குச் சொந்தமாகும். அதை இயக்குவதும் அந்நிறுவனமே. நாங்கள் அரசியல் சார்பற்ற, எந்தப் பிரிவையும் சாராத மற்றும் லாபத்தையும் எதிர்நோக்குகின்ற ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான செக்டார் ஆகும்.

2. எங்கள் பணி

2.1 நாங்கள் செய்வதில் பொறுப்பான எடிட்டர்ஷிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நம்பகத்தன்மை, துல்லியத்தன்மை, பொறுப்பேற்புத்தன்மை ஆகியவற்றை மதிக்கின்ற நடத்தை விதிகளைக் கடைபிடிப்பதில் எங்கள் எடிட்டோரியல் குழு உறுதியாகவுள்ளது. உள்ளடக்கத் திருட்டை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நாங்கள் பதிவிடும் கதைகள் ஒவ்வொன்றும் உண்மைச் சரிபார்ப்பிற்கு உட்படுத்தப்பட்டதுடம் நம்பகமான ஆதாரங்கள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. நாங்கள் பலதரப்பட்ட தலைப்புகளைப் பற்றிய உள்ளடக்கத்தை வழங்க முயற்சி மேற்கொள்வதுடன் நிஜ வாழ்வின் அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது அந்த அனுபவங்களைப் பெற்றவரின் கூற்றின் அடிப்படையிலேயே அவற்றை வழங்குவோம்.

2.2 ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வைப் பொறுத்தவரை நாங்கள் முழுமையான அணுகுமுறையை வழங்குவதையே விரும்புகிறோம். அதாவாது யாரை எடுத்தாலும் அவரது உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் கலவையாகவே பார்க்கின்றோம். இதன் காரணமாக நாங்கள் வெளியிடும் உள்ளடக்கத்தில் இது வெளிப்பட்டு அவை உங்கள் உடலை வலுப்படுத்த உதவுவதாகவும், மனதிற்கு இதமளிப்பதாகவும், ஆன்மாவின் நிலையை உயர்த்துவதாகவும் இருக்கும். ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்து நேர்மறையாகச் சிந்திக்கச் செய்வோம். அத்துடன் நல்லமுறையில், எந்தவிதச் சிக்கலும் இல்லாமல், மெதுவாக முதுமை அடைய உங்களுக்கு உதவியாக இருப்போம்.

இந்தத் தளத்தில் நீங்கள் பகிரும் அல்லது பெறும் தகவல்கள் நிபுணரிடம் இருந்து பெறும் ஆலோசனைக்கு மாற்றாக அமையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு தனிப்பட்ட நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளையோ சிகிச்சையையோ நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். மருத்துவ அறிவுரையைப் பெறுவதில் தாமதிக்கக் கூடாது. எங்கள் பிளாட்ஃபார்மில் விளம்பரப்படுத்தப்படும் எந்தத் தயாரிப்பிற்கோ சேவைக்கோ நாங்கள் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. ஸ்பான்சர் செய்யப்படும் உள்ளடக்கம் (அட்வட்டோரியல்கள்) ஏதேனும் இருந்தால் அவற்றைத் தெளிவாகத் தனிப்படுத்திக் காட்டுவோம். முடிகின்ற இடங்களில் ஃபாண்ட் ஸ்டைல் மற்றும் அளவால் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவோம்.

3. கவரேஜ் கொள்கை

3.1 உலகளாவிய அடிப்படையில் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான செய்திகள் மற்றும் முக்கியமான முன்னேற்றங்களை எங்களின் எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள்,ஆராய்ச்சியாளர்கள், சித்தரிப்பாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகிய குழுவினர்கள் கவர் செய்வார்கள். எழுதப்படும் உள்ளடக்கங்கள் வெளியிடப்படுவதற்கு முன் சீனியர் எடிட்டர்களால் மதிப்பாய்வு செய்யப்படும். மாற்றுக் கருத்துகளுக்கும் தெளிவுபடுத்தக்கூடிய விவாதங்களுக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவோம். தனிப்பட்ட நபர்களின் பார்வையில் இருந்தும் பொதுக் கொள்கை அடிப்படையிலும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான விஷயங்களைக் கையாள்வோம்.

4. எங்களைத் தொடர்புகொள்க

4.1 பிளாட்ஃபார்ம் தொடர்பாக சிக்கல்களை எதிர்கொண்டால் அதுகுறித்த உங்கள் கருத்தை editor@happiesthealth.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
அத்துடன் உங்கள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது பிறருக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கலாம்.

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.