728X90

728X90

விளம்பரக் கொள்கை

1. பொது

1.1 ஹேப்பியஸ்ட் ஹெல்த் பிளாட்ஃபார்மில் செய்யப்படும் விளம்பரங்கள் இந்தக் கொள்கைக்கு உட்பட்டதாகும். “பிளாட்ஃபார்ம்” என்பது “www.happiesthealth.com” இணையதளம், அனைத்து மைக்ரோ தளங்கள், பிரிண்ட் மீடியா, ஆடியோ அல்லது வீடியோ அல்லது Facebook, YouTube, WhatsApp சமூக வலைதளங்களில் ஹேப்பியஸ்ட் ஹெல்த் தற்போது ஹோஸ்ட் செய்யும் (ஹோஸ்ட் செய்யப்படவுள்ள) பிற மீடியாக்கள் இதில் அடங்கும். அவற்றை தற்போதைய அல்லது எதிர்காலத்தில் வரவுள்ள சாதனங்களில் பார்க்கலாம். மொபைல் ஃபோன், லேப்டாப், ஹெட்செட், தொலைகாட்சி போன்றவை இதில் அடங்கும்.

1.2 விளம்பரப்படுத்துதல் அல்லது விளம்பரங்களில் பேனர்கள், மாடியூல்கள், இணைப்புகள், மைக்ரோ-தளங்கள் மற்றும் அந்த விளம்பரதாரர் அல்லது ஏஜென்ட் வழங்கும் பிற உள்ளடக்கங்கள் அடங்கும்.

2. விளம்பரதாரரின் பொறுப்புகள்

2.1 விளம்பரங்களில் வழங்கப்படும் உள்ளடக்கங்கள் மற்றும் இணைப்புகளின் (வழங்கியிருந்தால்) துல்லியத் தன்மை, புறநிலை, சட்டநிலை ஆகியவற்றுக்கு விளம்பரதாரர்களும் ஏஜென்ட்டுகளுமே பொறுப்பாவார்கள். விளம்பரதாரர்களிடம் அவர்கள் வழங்கும் கூற்றுகளுக்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

2.2 எந்தெந்த நாடுகள்/அதிகார வரம்பில் விளம்பரங்கள் காட்டப்படுகிறதோ அந்தப் பகுதிக்கான தொடர்புடைய சட்டங்கள், விதிமுறைகள், விளம்பரங்கள் தொடர்பான கொள்கைகள் ஆகியவற்றுடன் சட்டப்பூர்வ இணக்கத்தைப் பேண வேண்டிய முழு பொறுப்பும் விளம்பரதாரரையும் அவர்களின் எஜென்ட்டுகளையும் சார்ந்ததாகும்.

2.3 வெளியீடானது அவதூறான கூற்று, தனியுரிமை மீறல், காப்புரிமை மீறல், உள்ளடக்கத் திருட்டு மற்றும் தொடர்புடைய விளம்பரச் சட்டங்களுக்கு இணங்காமை போன்ற இன்னும் பல காரணங்களுக்காக இழப்பீடு வழங்க வேண்டியிருந்தால் அதற்கு விளம்பரதாரரும் எஜென்ட்டுகளுமே முழு பொறுப்பாவார்கள்.

3. எங்கள் உரிமைகள்

3.1 எந்த வகையான விளம்பரங்களை ஏற்று காட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஹேப்பியஸ்ட் ஹெல்த்தையே சாரும். பிளாட்ஃபார்மின் குறிக்கோள் கூற்றுடன் ஒத்துப்போகாத மற்றும் இந்தக் கொள்கையுடன் இணங்காத விளம்பரங்களை நிராகரிக்கும் உரிமை பிளாட்ஃபார்மிற்கு உள்ளது.

3.2 பிளாட்ஃபார்ம் ஒரு விளம்பரத்தை தவறானதாகவோ, உண்மைக்குப் புறம்பானதாகவோ, தவறாக வழிநடத்துவதாகவோ, தவறாகச் சித்தரிப்பதாகவோ கருதினால் அந்த விளம்பரத்தை அது ஏற்காது.

3.3 மனதைப் புண்படுத்தும் விதமான, ஆபத்தான, பார்த்தால் மனதைப் பதைபதைக்கூடிய, இனம், பாலினம், மதம், திருமண நிலை, உடல் ஊனம், உடல்வாகு, நிறம் அல்லது பொருத்தமற்றது என்று பிளாட்ஃபார்ம் கருதுகின்ற காரணிகள் அடிப்படையில் ஒரு தனி நபரை தரக்குறைவாகச் சித்தரிக்கின்ற, தாக்குகின்ற, அசிங்கப்படுத்டுகின்ற உள்ளடக்கம் அடங்கிய விளம்பரங்களை பிளாட்ஃபார்ம் ஏற்காது.

3.4 உங்கள் “ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கான சேவகர்களான” நாங்கள் எங்கள் குறிக்கோலுக்கு எதிரான விளம்பரங்களை வெளியிட மாட்டோம். ஆரோக்கியமான வாழ்வுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய, உடல் எடையை அதிகரிக்கக்கூடிய, மது, சிகரெட், புகையிலை, பான் மசாலா, ஃபாஸ்ட் ஃபூட், பாதி பதப்படுத்திய/ பதப்படுத்தப்பட்ட, பொறித்த அல்லது கமர்ஷியலாக பேக் செய்த உணவுகள் “HFSS” (அதிகக் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை), செயற்கையாக இனிப்பூட்டப்பட்ட கார்போனேடட் பானங்கள், ஹைட்ரோஜனேடட் கொழுப்புகள் போன்ற புற்றுநோய் உண்டாக்கக்கூடிய மற்றும்/அல்லது எங்கள் பார்வையில் சரியில்லை என்று தோன்றக்கூடிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவோ வெளியிடவோ மாட்டோம்.

3.5 அத்துடன் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள், சூதாட்டம், ஆபாசம் போன்ற சட்டப்படி தடைசெய்யப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான விளம்பரங்களைக் காட்ட மாட்டோம். அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகாத அல்லது தனிப்பட்ட முறையில் மதிப்பிடப்படாத அல்லது தகுந்த ஒழ்ங்குமுறை அமைப்பின் ஒப்புதல் பெறாத தீர்வு/சிகிச்சை/திட்டம்/உணவுமுறையை பிளாட்ஃபார்ம் விளம்பரப்படுத்தாது.

3.6 குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்குத் தீங்குவிளைவிக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விளம்பரங்களை பிளாட்ஃபார்ம் காட்டாது. இல்லையென்றால் குழந்தைகளுக்கு ஏற்பற்ற அல்லது மூன்றாம் தரப்பு டிராக்கர்களுக்கான இணைப்புகள் கொண்ட அல்லது பதினெட்டு வயதிற்குட்பட்டவர் வழங்கும் தகவல் அடங்கிய உள்ளடக்கத்தை பிளாட்ஃபார்ம் வெளியிடாது.

3.7 பிளாட்ஃபார்ம் கொள்கை மற்றும்/அல்லது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முரணான தயாரிப்புகளுக்கான பினாமி விளம்பரங்கள் அல்லது போலி தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை பிளாட்ஃபார்ம் ஏற்காது.

3.8 தற்போதுள்ள அனைத்து சட்டங்கள் மற்றும் இந்த விளம்பரக் கொள்கையுடன் விளம்பரத்தின் இணக்கத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்கான உரிமையை பிளாட்ஃபார்ம் கொண்டுள்ளது. மீறல் அல்லது சாத்தியமான மீறல் ஏற்பட்டால், தளம் விளம்பரத்தை அகற்றலாம் மற்றும் கூடுதலாக பொருத்தமானதாகக் கருதப்படும் பிற செயல்களைத் தொடங்கலாம்.

4. தலையங்கச் சுதந்திரம்

4.1 பிளாட்ஃபார்மானது விளம்பரம் மற்றும் தலையங்க உள்ளடக்கத்திற்கு இடையே உள்ள வேறுபாட்டை அங்கீகரித்து பராமரிக்கிறது. விளம்பரப்படுத்தப்பட்ட அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம், எழுத்துரு நடை மற்றும் அளவு மூலம் முடிந்தவரை அடையாளம் காணக்கூடியதாக லேபிளிடப்படும்.

5. விளம்பரங்களைத் தேடுங்கள்

5.1 தேடல் விளம்பரங்களைக் காண்பிப்பதற்காக தனித்தனி பகுதிகளுடன், அனைத்து தேடல் முடிவுகளும் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பதை தளம் தீர்மானிக்கலாம். சில முக்கிய வார்த்தைகளின் தேடல் முடிவுகளுடன் தோன்றும் வகையில் விளம்பரங்கள் நிறுவனங்களால் வாங்கப்படலாம்

6. திரும்பப் பெறுவதற்கான உரிமை

6.1 எந்தவொரு விளம்பரத்தையும் ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது, ரத்து செய்வது அல்லது அகற்றுவது என்பதை எந்த நேரத்திலும் தனது சொந்த விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமையை பிளாட்ஃபார்ம் கொண்டுள்ளது.

7. செயல்திறன்

7.1 அனைத்து விளம்பரங்களும் பிளாட்ஃபார்மில் பிழையின்றி செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் பிளாட்ஃபார்ம் வழங்கவில்லை.

8. பிளாட்ஃபார்மில் பார்வையாளர்களைக் கண்காணித்தல்

8.1 HappiestHealth.com எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்து அனுமதிக்காத வரை பிளாட்ஃபார்மில் காட்டப்படும் விளம்பரங்களில் பிக்சல், குறியிடல்கள் அல்லது வேறுவிதமான தகவல் சேகரிப்பு மென்பொருள் குறியீடு அல்லது வேறெந்த குக்கீகள் அல்லது பீக்கான்களைச் சேர்க்கக்கூடாது. ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த ஏற்பில் பின்வரும் விதிவிலக்கு வெளிப்பாடுகள் இருக்க வேட்ன்டும்: i) விளம்பரதாரர் அத்தகைய பிக்சலை தனிப்பட்ட நபரை அடையாளம் காணக்கூடிய தகவலைக் கொண்டிருக்கக் கூடாது(PII),ii) உலாவி அமைப்பு பிக்சலை தடுக்கலாம் மற்றும் இடம்பெற்றுள்ள குக்கீயை நீக்கலாம் iii)வேறு ஆதாரம் மூலம் PII-ஐ எந்தவொரு PII-அல்லாதவற்றுடன் விளம்பரதாரர் தொடர்புபடுத்தக்கூடாது iv) ஒருவர் HappiestHealth.com பார்வையாளர் அல்லது குறிப்பிடும் URL இல் உள்ள தகவலிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் உட்பட, HappiestHealth.com இலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், அதன் தரவுத்தளத்தில் இருக்கும் எந்த சுயவிவரத்தையும் விளம்பரதாரர் புதுப்பிக்கமாட்டார்.

9. பொறுப்புதுறப்பு

9.1 பிளாட்ஃபார்ம் மூலம் விளம்பரங்களை ஏற்றுக்கொள்வதும் காட்சிப்படுத்துவதும் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒப்புதலுக்குச் சமமாகாது. உங்கள் நம்பகத்தன்மை மற்றும் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்களால் எழக்கூடிய எந்தவொரு உரிமைகோரல்/சேதங்களுக்கும் தளம் பொறுப்பேற்காது.

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.