728X90

728X90

தலைமை

தலைமைக் குழுவைப் பாருங்கள்

Ashok Soota

தலைவர்

அசோக் சூட்டா

மைன்ட்ஸின் நிர்வாகத் தலைவர் அசோக் சூட்டா. ஒரு தொழிலதிபராக அவருக்கு பழுத்த அனுபவம் உண்டு. அவர் விப்ரோ நிறுவனத்தை ITயில் ஒரு பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தவர். Mindtree நிறுவனத்தை நிறுவி அதை வழிநடத்தி வெற்றிகரமாக அதை ஒரு IPO நிறுவனமாகத் தரம் உயர்த்தினார். அதன் பிறகு அதே மைல் கல்லை ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸையும் எட்டச் செய்தார். இப்போது அதே உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் ஹேப்பியஸ்ட் ஹெல்த்தின் வெற்றிக்கு உழைத்து வருகிறார்.

இது 3,750 மில்லியன் பட்ஜெட்டில் (தோராயமாக) வயதாகுதல், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் கட் மைக்ரோபயோம்-பிரெயின் ஆக்சிஸ் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியை அர்ப்பணிப்போடு மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாகும். அவர் 2011ல் ஆஷிர்வாதம் என்ற ட்ரஸ்ட்டைத் தோற்றுவித்தார். இந்த ட்ரஸ்ட் சுற்றுச்சூழல் தொடர்பான திட்டப்பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையானவர்களுக்கு உதவவும் உருவாக்கப்பட்டது.

அசோக், ரூர்கீ பல்கலைக்கழகத்தில் (இப்போது இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ரூர்கி என்று அழைக்கப்படுகிறது) கஎலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டமும், ஃபிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில், பிசினெஸ் மேனேஜ்மெண்ட்டில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில் சிறப்பாக விற்பனையான – “Entrepreneurship Simplified: From Idea to IPO” என்ற புத்தகத்தின் இணை ஆசிரியராக இருந்தார் அசோக். அவர் சமீபத்தில் ‘Busted’ என்ற புத்தகத்தின் இணை ஆசிரியராக இருந்து இயற்றியுள்ளார். அந்தக் புத்தகம் நிர்வாகம் தொடர்பான நம்பிக்கைகளையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது எனலாம்.மலையேற்றம், வெளியூர் பயணம், யோகா, டாய்ச்சி, தியானம், நீச்சல் ஆகியவை அவரது பொழுதுபோக்குகள் ஆகும்.

CEO

தலைவர் & CEO

அனிந்தியா சௌத்ரி

அனிந்தியா, IIM பெங்களூரில் PGDM பட்டம் பெற்ற ஒரு இன்ஜினியர். FMCG, மருந்தியல், OTC, கன்ஸ்யூமர் ஹெல்த்கேர், நோய்கண்டறிதல் துறை ஆகிய துறைகளில் செயலாக்கம் மற்றும் P&L தலைமைப் பொறுப்புகளில் 28 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர். அவர் HUL நிறுவனத்தில் தன் பணியைத் தொடங்கினார். பின்னர் டாக்டர் ரெட்டிஸ், சனோஃபி, சன் ஃபார்மா, SRL ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். கடைசியாக ஆஸ்டர் லேப்ஸ் (இந்தியா & GCC) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருந்தார். ஹேப்பியஸ்ட் ஹெல்த்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அவர் எங்கள் சேவை வழங்குதல்களை விரிபுப்படுத்த திட்டம் தீட்டி வருகிறார். அத்துடன் ஹேப்பியஸ்ட் ஹெல்த்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான லட்சியத்தை நோக்கி செயல்பட்டு வருகிறார். அதில், பணிசெய்வதற்கு சிறந்த சூழலை உருவாக்குவதும் கார்பரேட் நிர்வாகத்தில் உயர்ந்த தரநிலைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்த்தெடுப்பதும் இதில் அடங்கும்.

அவர் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர், குறிப்பாக கால்பந்து மற்றும் கிரிக்கெட். அத்துடன் காலையில் பிரிஸ்கான நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தன் ஆரோக்கியத்தைப் பேனுகிறார். புதிய சவால்களை எடுத்துப் பணியாற்றுவது, குடும்பத்துடம் நேரத்தை செலவிடுவது, புதிய இடங்களுக்குச் செல்வது ஆகியவை அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் விஷயங்கள் ஆகும்.

முழு நேர இயக்குனர் மற்றும் வெளியீட்டாளர்

சந்திரசேகர் S

தேர்ந்த சார்டட் அக்கவுண்ட்டண்ட்டான இவர் IT மற்றும் வெளியீட்டு செக்டார்களில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர் இவர். புதிய வணிகங்களைத் தொடங்குவதில் அதிக அனுபவம் கொண்டவர். இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கோ.செக். ஆஃப் இந்தியா (ICMA) என்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கூடுதல் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் கடைசியாக மேக்மில்லன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர்/நிறுவனச் செயலாளராக இருந்தார். ஆரோக்கியமாக இருக்கவும் மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் அவரது தாரக மந்திரமாக இருப்பது அவரது செல்லப்பிராணிகளான இரண்டு நாய்களுடன் (கோகோ, இது ஷி ஸு வகை நாய் மற்றும் பாஸ்கி, இது கோல்டன் ரிட்ரீவர் வகை நாய்) விளையாடுவது, அவரது இரண்டு இண்டிகளைச் சென்று பார்ப்பது, வரலாறு & அறிவியல் புனைவுப் புத்தகங்களைப் படிப்பது ஆகிய இவைதான்.

Chandrasekhar S
Mask_Group_297@2x[1]

தலைமை எடிட்டர் (டிஜிட்டல்)

ரவி ஜோஷி

RJ என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் ரவி ஜோஷி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், DNA போன்ற பல பத்திரிகைகளின் நியூஸ்ரூம்களில் 23 வருடங்கள் பணியாற்றிய பிறகு பத்திரிகையாளர் பணியை நிறைவுசெய்தவர். அவர் கடைசியாக சண்டேவில் பெங்களூர் மிரர் மற்றும் மும்பை மிரர் பத்திரிகைகளில் ஆசிரியராக (எடிட்டர்) இருந்தார். தலைப்புச் செய்தியையோ கதையையோ சிந்திக்காத நேரங்களில் தன் குடும்பத்துடன் ஆரோக்கியமான உணவை உண்டு களிப்பதிலும், அவரது தினசரி இலக்கான 15,000 அடிகளை நிறைவுசெய்வதிலும், இல்லையென்றால் எந்த சூப்பர்பைக்கை வாங்கலாம் என்று சிந்திப்பதிலும் செலவிடுவார்.

தலைமை எடிட்டர் (பிரிண்ட் மற்றும் வெளியீடு)

ரகு கிருஷ்ணன்

ரகு கிருஷ்ணன் 25 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளை அவர் கவனித்து வந்தார். அவருக்கு ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடுகளை ஆராய்ந்து அவை சமூகம் மற்றும் வணிக ரீதியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதில் அதீத ஆர்வம் உண்டு. கடைசியாக அவர் எக்கானிக் டைம்ஸ் பத்திரிகையில் தொழில்நுட்ப ஆசிரியராக (எடிட்டர்) இருந்தார். அத்துடன் பிசினஸ் ஸ்டாண்டட், மின்ட், பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, இரவில் நன்கு தூங்குவது, டிஜிட்டல் கேட்ஜெட்களின் உபயோகத்தைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் ஆரோக்கியத்தைப் பேணுகிறார்.

Raghu Krishnan
Ashish Pratap Singh

தலைமை மார்க்கெட்டிங் ஆஃபிஸர்

ஆஷிஷ் பிரதாப் சிங்

நிதி, எடிட்டோரியல், மார்கெட்டிங் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆஷிஷ் பிரதாப் சிங் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். அவர் அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் நிறுவனத்தில் அதன் தலையகமான நியூயார்க் நகரில் குளோபல் ரீஇன்ஜினியரிங் & சிக்ஸ் சிக்மா குழுவில் முதலில் தன் பணியை ஆரம்பித்தார். அங்கிருந்து எழுத்தின் மீது இருந்து ஆர்வத்தின் காரணமாக பிரிண்ட் மீடியாவிற்கு மாறினார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் உலகளாவிய வெளியீடுகளான மென்’ஸ் ஹெல்த் & FHM ஆகிய நிறுவனங்களில் ஆசிரியராக (எடிட்டர்) இருந்தார்

பிராண்டு அடையாளங்களை உருவாக்குவதிலும் கவனத்தை ஈர்ப்பதிலும் ஆஷிஷ்ஷிற்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அவரது பலம், ஒட்டுமொத்த மார்க்கெட்டிங், தொடர்புத்தகவல் உத்திகள், லீட் ஜெனரேட் செய்வது, பகுப்பாய்வு ஆகியவற்றை தொடக்கம் முதல் உருவாக்கிச் செயலாக்குவதாகும்.

ஆஷிஷ் திருமணமானவர் என்பதுடன் அவருக்கு ஒரு மகன் உள்ளார். அத்துடன் ஃபிட்னஸில் 22 ஆண்டுகளுக்கும் மேல் அதிக ஆர்வம் மிக்கவர். அத்துடன் அதற்காக பல மணி நேரங்களைச் செலவிடுபவர்.

துணைத் தலைவர் & பணியாளர்களுக்கான தலைமை அதிகாரி

மீனாக்ஷி KC

பணியாளர் நடைமுறை (HR) நிபுணரான மீனாக்ஷி, மக்களுடன் பணியாற்றுவதிலும் அவர்களது தேவைகளைக் கவனிப்பதிலும் பெரும் ஆர்வம் மிக்கவர். பணியாளர்களின் செயல்திறன், நம்பகத்தன்மை, தெரிவுநிலை, செயல்நிலைத் திறன் மேம்பாடு ஆகியவற்றைக் கொண்டு வர ஆலோசனை வழங்குபவராகவும் கவுன்சிலிங் செய்பவராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.

HR மற்றும் சட்டம் தொடர்பான துறையில் பல வருடங்கள் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ள அவர், IT, IT-அல்லாத மற்றும் சட்டம் தொடர்பான நிறுவனங்களில் சவாலான சூழல்களில் பணியாற்றும் திறம் வாய்ந்தவராக இருந்தார்.
அந்த நாளில் பார்க்கும் ஒவ்வொருவரின் முகத்திலும் சிரிப்பைப் பார்ப்பது அவர்க்கு மகிழ்ச்சியை வரவழைக்கும்
அவரது தினசரி பணியைப் பொறுத்தவரை கவன உணர்வுடன் இருப்பதே அவரது பலம். தன் திறமைகளை மெருகேற்ற ஒவ்வொரு வாரமும் 5 மணிநேரம் யோகப் பயிற்சியை மேற்கொள்கிறார், தினமும் 4 கிலோமீட்டர் நடக்கிறார், ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்கிறார்.
மீனாக்ஷி KC

Meenakshi KC
Tina-Mitra-2

தலைமை வருவாய் அதிகாரி

டீனா மித்ரா

டிஜிட்டல், பிரிண்ட், ரேடியோ, நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விளம்பர விற்பனை அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

டீனா, இதற்கு முன்பு ரேடியோ சிட்டியில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அங்கே, பல பகுதிகளுக்கான விற்பனையையும் கையாண்டுள்ளார். அதற்கு முன்பு ரெட் FM மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றியுள்ளார்

அவர் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் 20 நிமிடங்களும், வாரத்தில் நான்கு நாட்களும் HIIT பின்பற்றுகிறார். தினமும் 10000 அடிகள் நடக்கிறார்.

விற்பனைப் பிரிவின் தலைவர் (தெற்கு)

டாப்ரிஸ் அஹமத்

இவர் மீடியா துறையில், அனுபவம் மிக்க விற்பனைப் பிரதிநிதியாவார். தி ஆசியன் ஏஜ், டெக்கான் கிரானிக்கல், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, FHM, டயபடிக் லிவிங், ரிலையன்ஸ் ADAG போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.

அவசரக் காலங்களில் மனிதநேய அடிப்படையில் செயல்படும் இவரது தன்மை இவரை மெர்சி மிஷனுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.குழந்தைகளுக்கான உரிமை அவரின் பிற ஆர்வங்களில் ஒன்று.

டாப்ரிஸ் தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சியும் உடல்பயிற்சியும் செய்கிறார். அவரது மன ஆரோக்கியத்திற்குதியானம் செய்கிறார்.

Tabriz Ahmed
Sam Ben Samuel

இணை துணைத் தலைவர், நிதி

ஷங்கர் S.

ஷங்கர், ஹேப்பியஸ்ட் ஹெல்த்தின் நிதித் துறையைக் கையாள்கிறார். ICAI-இல் சார்டட் அக்கவுண்ட்டன்ட்டாகவும், ICSI-இல் நிறுவனச் செயலாளராகவும் இருக்கிறார்.

ஷங்கர் நிதித் துறையில் 15 வருட அனுபவம் உள்ளவர். கடைசியாக இன்ஃபோசிஸ்ஸில் சீனியர் நிர்வாகியாக 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

புத்தகம் படிப்பது, இயற்கையை ரசிப்பது, இசை கேட்பது, குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது ஆகியற்றில் நிம்மதி காண்கிறார். அவர் தன் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்கிறார்.

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.