728X90

728X90

எங்களைப் பற்றி

நாங்கள் யார்

ஹேப்பியஸ்ட் ஹெல்த் என்பது, ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸின் நிர்வாகத் தலைவரான அசோக் சூட்டா நிறுவிய அறிவுப்பூர்வத் தகவல்களை வழங்கும் ஒரு நிறுவனம். ஹேப்பியஸ்ட் ஹெல்த், அதன் வாசகர்களுக்கு அனைத்துவிதமான வடிவங்களிலும் மிகவும் தனித்துவமான, நம்பகமான ஆரோக்கியம் & நலவாழ்வு தொடர்பான தகவல்களை வழங்குகிறது. அதன் தலைமைப் பொறுப்புகளில் நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மீடியா ஹவுஸ்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிபுணர்கள், அத்துடன் சுகாதாரம் தொடர்பான வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்று பலரும் உள்ளனர். எழுத்தாளர்கள், கைத்தேர்ந்த மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் கடினமாக மருத்துவத் தகவல்களையும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் புரிய வைக்கின்றனர். டிஜிட்டல் தளத்தில் உள்ள தகவல்களைக் கட்டணமின்றி அணுகலாம். ஏனென்றால், நாங்கள் உங்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்குத் துணை நிற்பவர்கள்.

யார் இதை விளம்பரப்படுத்துவது?

Ashok Soota

அசோக் சூட்டா, ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸின் நிர்வாகத் தலைவர். ஒரு தொழிலதிபராக அவருக்கு பழுத்த அனுபவம் உண்டு. அவர் விப்ரோ நிறுவனத்தை ITயில் ஒரு பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தவர். மைன்ட்-ட்ரீ நிறுவனத்தை நிறுவி அதை வழிநடத்தி வெற்றிகரமாக அதை ஒரு IPO நிறுவனமாகத் தரம் உயர்த்தினார். அதன் பிறகு அதே மைல் கல்லை ஹேப்பியஸ்ட் மைன்ட்ஸையும் எட்டச் செய்தார். இப்போது அதே உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் ஹேப்பியஸ்ட் ஹெல்த்தின் வெற்றிக்கு உழைத்து வருகிறார்.

இது 3,750 மில்லியன் பட்ஜெட்டில் (தோராயமாக) வயதாகுதல், நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் குடல் நுண்ணுயிரி-பிரெயின் ஆக்சிஸ் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சியை அர்ப்பணிப்போடு மேற்கொள்வதற்கு நிறுவப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாகும். அவர் 2011ல் ஆஷிர்வாதம் என்ற அறக்கட்டளையைத் தோற்றுவித்தார். இந்த அறக்கட்டளை சுற்றுச்சூழல் தொடர்பான திட்டப்பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் தேவையானவர்களுக்கு உதவவும் உருவாக்கப்பட்டது.

அசோக், ரூர்கீ பல்கலைக்கழகத்தில் (இப்போது இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ரூர்கி என்று அழைக்கப்படுகிறது) கீஎலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் இளங்கலை பட்டமும், ஃபிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில், பிசினெஸ் மேனேஜ்மெண்ட்டில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

இது டிஜிட்டல் பிளாட்ஃபார்மா?

இல்லை. ஹேப்பியஸ்ட் ஹெல்த் மாதாந்திர இதழை வெளியிடுகிறது. அதற்கு இங்கே சந்தாதாரர் ஆகலாம் அதை இந்தியாவிற்குள் உங்களுக்கு அருகில் உள்ள நியூஸ்டாண்டில் கிடைக்கும். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இ-மேகசின் பதிப்பைப் பெற இங்கே சந்தாதாரர் ஆகலாம்.

டிஜிட்டல் மற்றும் பிரிண்ட் பிளாட்ஃபார்ம்களில் கிடைக்கின்ற தகவல்களையெல்லாம் தொகுத்து ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான பல்வேறு தலைப்புகள் தொடர்பான விரிவான தகவல்கள் அடங்கிய புத்தகங்களாக வெளியிடப்படும். அத்துடன், ஹேப்பியஸ்ட் ஹெல்த் இப்போது பெங்களூரில் ஹெல்த் சம்மிட்களை நடத்துகிறது. விரைவில் நல்வாழ்வுச் சேவைகளை வழங்கவுள்ளது.

உங்களை எப்படித் தொடர்புகொள்வது?

எங்கள் இணையதளம் குறித்து நற்கருத்தோ புகாரோ இருந்தால் feedback@happiesthealth.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பவும். ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு தொடர்பான உங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் mystory@happiesthealth.com என்ற முகவரிக்கு அதை எழுதி அனுப்பவும். எங்கள் குழுவில் இருந்து ஒருவர் உங்களை அழைத்து அதுகுறித்து அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெரிவிப்பார். உங்கள் அடையாளம் வெளியிடப்படக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதை நாங்கள் பாதுகாப்போம்.

ஹேப்பியஸ்ட் ஹெல்த்துடன் நீங்கள் ஏன் கூட்டு சேர வேண்டும்?

பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஹேப்பியஸ்ட் ஹெல்த், உலகளாவிய வாசகர்களுக்கான உள்ளடக்கத்தை வழங்குகிறது. செயலாற்றக்கூடிய தகவல், சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், ஒருங்கிணைந்த மருந்து (பாரம்பரிய வைத்தியம் மற்றும் நவீன சிகிச்சை) ஆகியவற்றை அதன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

பதற்றம், மன அழுத்தம் மற்றும் பிற மருத்துவச் சிக்கல்கள் பரவியுள்ள இந்த நோய்த் தொற்று காலம்தான் ஒருவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கான சிறந்த காலம். உலக அளவில் நலவாழ்வு தொடர்பான துறை வளர்ச்சி அடைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் ஹேப்பியஸ்ட் ஹெல்த் பிளாட்ஃபார்மானது பல துறைகளின் (ஹெல்த்கேர் வழங்குனர், மருத்துவமனைகள், கன்ஸ்யூமர், காப்பீடு மற்றும் ரீடெய்ல் துறை) கவனத்தையும் பெறுகிறது.

வாருங்கள், இந்தப் பணியில் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள். உங்கள் பிராண்டு தொடர்பான பிரத்தியேகத் தீர்வுக்கு எங்கள் பிசினஸ் டெவெலப்மெண்ட் மேனேஜர்களுடன் பேசவும்.

பான்-இந்தியா தீர்வுகளுக்கு: டினா மித்ரா
+91 9833376866
tina.mitra@happiesthealth.com

தென்னிந்திய மார்க்கெட்களுக்கு: தப்ரிஸ் அஹமத்
+91 9886333367
Tabriz.ahmed@happiesthealth.com

எங்கள் தலைமைக் குழுவைப் பாருங்கள் Right arrow

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.