728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Laser angioplasty: கடினமான அடைப்புகளுக்கு
25

Laser angioplasty: கடினமான அடைப்புகளுக்கு

கரோனரி தமனிகளில் உள்ள கால்சிஃபிகேஷன்  ஆன பிளேக்குகளை (அதிக கால்சியம் படிவதால் ஏற்படுவது) அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இந்தச் செயல்முறை, கடினமான அடைப்புகளை அகற்றவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

Laser angioplasty is an effective way to remove calcified plaques from coronary arteries

சிலருக்கு கரோனரி தமனிகளில், கடினமான  கால்சிஃபைட் பிளேக்குகள் இருப்பதை இருதயநோய் நிபுணர்கள்  கண்டறிய நேரிடுகிறது. இந்தப் பிளேக்குகளை (கால்சியம் அதிகரிப்பால் உருவாகும் படிவம்) பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்டிங் போன்ற பாரம்பரிய இதய செயல்முறைகள் மூலம் அகற்ற முடிவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது எக்சைமர் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் செயல்முறையில் லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி இந்த பிளேக்குகளை அகற்றுவது சிறந்த உபாயமாக உள்ளது.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், லேசர் கற்றையானது தமனிக்குள் உள்ள கால்சிஃபைட் பிளேக்கில் தீவிரத் துல்லியத்துடன் செலுத்தப்படுகிறது. இது பிளேக்கை ஆவியாக்குவதுடன் குறுகலான தமனிச் சுவர்களை விரிவுபடுத்துவதற்கும் சரியான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் ஒரு ஸ்டென்ட் செருகுவதற்குத் தமனியைத் தயார் செய்கிறது. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், குறுகிய இதயத் தமனிகள் மார்பு வலி முதல் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு வரையிலான நிலைமைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் சில சமயங்களில் உறைவு ஏற்படுவதன் காரணமாக மாரடைப்பு கூட ஏற்படலாம்.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன?

பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் செய்வதற்கு முன், மிகவும் தடிமனான பிளேக்குகள் உள்ள சந்தர்ப்பங்களில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி பரிந்துரைக்கப்படுகிறது என்று ஃபோர்டிஸ் மருத்துவமனை, பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், இன்டர்வென்ஷனல் கார்டியலஜிஸ்ட் மற்றும் இதய வால்வு மாற்று நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் பிரசாத் கூறுகிறார்.

பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, பலூனுடன் கூடிய வடிகுழாயை (கேத்தட்டர்) பயன்படுத்தி அடைப்பு உள்ள தமனிகளைத் திறப்பதற்கான மிகவும் பொதுவான செயல்முறையாகும். வடிகுழாயானது இடுப்பு அல்லது மணிக்கட்டில் இருந்து குறுகலான தமனிக்குள் செருகப்பட்டு, குறுகிய பிளேக் படிந்துள்ள பகுதி வரை உள்ளே விடப்படுகிறது. தமனியில் அதனால ஏற்பட்ட அடைப்பை விரிவுபடுத்தவும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இந்தச் செயல்முறை பின்பற்றப்படுகிறது. அடைப்பு அகற்றப்பட்ட பிறகு, தமனிச் சுவர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையிலும் அவற்றைத் திறந்து வைப்பதற்கும், மீண்டும் தமனி குறுகுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்கும் ஒரு ஸ்டென்ட் வைக்கப்படும்.

“தமனி சுவரில் கொலஸ்ட்ரால் படிவதால் இந்த அடைப்புகள் ஏற்படுகின்றன. இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் தமனியான லுமேன் குறுகுவதற்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான கால்சியம் படிவதன் காரணமாக பிளேக்குகள் கால்சிஃபிஃகேஷன் ஆகின்றன.

 கால்சிஃபிஃகேஷன் ஆவதால் அவை தடிமனாகவும், அகற்ற கடினமாகவும் இருக்கும்,என்று  டாக்டர் பிரசாத் கூறுகிறார்.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி எப்படி வேலை செய்கிறது?

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியில் லேசர் ஃபைபர் பொருத்தப்பட்ட வடிகுழாயைப் பயன்படுத்தப்படும், இது ஒரு செறிவூட்டப்பட்ட உயர் ஆற்றல் லேசர் கற்றை (எக்ஸைமர் லேசர்) மூலம், அடைப்பு ஏற்பட்ட தமனிகளில் கொழுப்பு படிவுகளை மென்மையாக்குகிறது அல்லது நீக்குகிறது.

பிளேக்கை அகற்றும் பொருட்டு, பொதுவாக மணிக்கட்டு அல்லது இடுப்பில் மருத்துவர் ஒரு சிறிய கீறல் போட்டு வடிகுழாயை உள்ளே செருகுகிறார். அந்த கரோனரி பிளேக்கை நேரடியாக வடிகுழாய் தொடும் வரை அது செருகப்படுகிறது, அதன் பிறகு லேசரானது அதிகம் செறிவூட்டப்பட்ட ஆற்றல் கற்றைகளை அதன் மேல் வெளியிடுகிறது. இந்த லேசர் ஆற்றல், பிளேக்கை ஆவியாக்குகிறது என்று டாக்டர் பிரதீப் (ஹரனஹள்ளி, ஆலோசகர் – இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி, மணிப்பால் மருத்துவமனை, வைட்ஃபீல்ட், பெங்களூரு) தெரிவிக்கிறார்.

வடிகுழாயை அடைப்பின் துல்லியமான இடத்திற்கு கொண்டு செல்ல, ஃப்ளோரோஸ்கோபி (நிகழ்நேர எக்ஸ்ரே) பயன்படுத்தப்படுகிறது என்று டாக்டர் ஹரனஹள்ளி விளக்குகிறார். “வடிகுழாய் செருகப்பட்ட பிறகு, கால்சியத்தை மென்மையாக்க மற்றும் அதை அழிக்க லேசர் ஆற்றலை குவியமாகப் பயன்படுத்துகிறோம்,” என்று டாக்டர் ஹரனஹள்ளி மேலும் கூறுகிறார்.

பிளேக் அகற்றப்பட்டவுடன், தமனி மெதுவாக விரிவடைகிறது, மேலும் லுமேன் தமனி (இரத்தம் பாயும் ஒரு வெற்று பாதை) விரிவடைகிறது மற்றும் சாதாரண இரத்த ஓட்டம் மீட்டமைக்கப்படுகிறது.

“தடை நீக்கப்பட்ட பிறகு, ஸ்டென்ட் செயல்முறை அவசியமா என்பதைச் சரிபார்க்க நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்கிறோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

எக்ஸைமர் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியின் நன்மைகள்

சுழற்றுதல் (rotablation) ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற பாரம்பரிய முறைகள், சுழலும் டிரில்லைப் பயன்படுத்தி, அதிக அளவு கால்ஸிஃபை ஆன பிளேக்குகளைச் சிறிய துண்டுகளாக உடைக்கின்றன. ஆனால், லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியில், ஒளிக் கற்றையானது கொலஸ்ட்ரால் நிறைந்த பிளேக்கை ஆவியாக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்திற்கான தமனியில் உள்ள அடைப்பை நீக்குகிறது.

ஷாக்வேவ் இன்ட்ராவாஸ்குலர் லித்தோட்ரிப்சி (IVL லித்தோட்ரிப்சி) மற்றும் ஆர்பிட்டல் அதிரெக்டோமி ஆகியவை கடினமான கால்சிஃபைட் பிளேக்குகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் மற்ற பாரம்பரிய முறைகள் என்றும் டாக்டர் பிரசாத் சுட்டிக்காட்டுகிறார்.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி பாதுகாப்பானதா?

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி மிகவும் துல்லியமாக இருப்பதால் நன்மை பயக்கும் என்று டாக்டர் பிரசாத் கூறுகிறார் – இது சுற்றியுள்ள திசுக்களை பாதிக்காமல் கடினமான கால்சிஃபைடு டெபாசிட்களை அகற்றுவதை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும், சிக்கலைத் தடுக்க அதிகத் துல்லியமான லேசர் வெளியீடானதுஒழுங்கமைக்கப்பட்டுள்ளது

டாக்டர் பிரசாத்தின் கூற்றுப்படி, பொதுவாக, லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. “இருந்தாலும், கால்சிஃபிகேஷனை அகற்ற முயற்சிக்கும்போது, இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் இதுபோன்ற சிக்கல்கள் அரிதாகவே நிகழும், ”என்று அவர் கூறுகிறார்.

எப்போது லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியைச் செய்ய வேண்டும்?

கால்சிஃபிகேஷன் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கும்போது லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுத்தப்படுகிறது என்று டாக்டர் பிரசாத் கூறுகிறார். இருப்பினும், ஒரு எளிய புண் அல்லது கொலஸ்ட்ரால் அடைப்புக்கு, இது தேவையில்லை. எந்த வகையான தமனி அடைப்புக்கும் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி எப்போதும் முதல் தேர்வாக இருக்காது என்று டாக்டர் ஹரனஹள்ளி தெரிவிக்கிறார். பெரும்பாலும், பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற பாரம்பரிய ஆஞ்சியோபிளாஸ்டி முறைகள் பயன் தராத சிக்கலான அடைப்புகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

லேசர் ஆஞ்சியோபிளாஸ்டியின் வெற்றி விகிதம் 90 சதவிகிதம் என்பதோடு அதில் சிக்கல்கள் மிகவும் அரிதாகவே எழுவதாக அவர் கூறுகிறார். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய, பாரம்பரிய முறைகளை விட 2 முதல் 3 லட்சம் வரை செலவாகும்.

தெரிந்துகொள்ள வேண்டியவை:

எக்ஸைமர் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது,மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்கு தமனிகளின் அடைப்புகள் அல்லது குறுகலை அகற்றப் பயன்படும் ஒரு மருத்துவ சிகிச்சையாகும். பாரம்பரிய ஆஞ்சியோபிளாஸ்டி முறைகள், அடிப்படை சிக்கலை முழுமையாக தீர்க்க முடியாத சிக்கலான அடைப்புகளை அகற்ற (தடிமனான அல்லது கடினப்படுத்தப்பட்ட பிளேக்) இது பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.