728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

புதிய கோவிட் பற்றி பயப்பட வேண்டாம்
11

புதிய கோவிட் பற்றி பயப்பட வேண்டாம்

வைரஸ்கள் உருமாற்றம் பெறுவது என்பது இயற்கையான ஒன்றுதான் என்பதால் அதுகுறித்து பதட்டம் அடைய வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Dr Jayadevan said that Japanese researchers have also found that this COVID variant is going to outgrow all other variants.

சமீபத்தில் கேரளாவில் SARS-CoV2 தொற்று உள்ள ஒருவருக்கு கோவிட் JN.1 உடைய சமீபத்திய துணை வேரியன்ட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் துணை வேரியன்ட் அமெரிக்காவில் பொதுச் சுகாதாரச் சிக்கலாக மாறியதால் அதுகுறித்து சற்று கவலை நிலவுகிறது. மேற்கு நாடுகளில் கவனித்ததன் அடிப்படையில் கோவிட் வைரசின் இந்தத் துணை வேரியன்ட் மிதமான அளவில் நோய் அறிகுறிகளைக் காட்டினாலும் வேகமாகப் பரவக்கூடியதாகும்.

இருந்தாலும், நிபுணர்களின் கூற்றுப்படி வைரஸ்கள் உருமாற்றம் அடைவது என்பது இயற்கையான ஒன்றுதான். பூனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியின் ஜீனோம் சர்வைலன்ஸில் இந்தப் புதிய வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது.

ஹேப்பியஸ்ட் ஹெல்த்திடம் பேசிய INSACOG-இன் (இந்தியன்  SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கன்சோர்டியம்) இணைத் தலைவரான  டாக்டர் N K அரோரா, இதுகுறித்து பதட்டம் அடையத் தேவையில்லை என்று தெரிவித்தார்.  “புதிய துணை வேரின்ட்டானது BA.2.86 என்ற வேரியன்ட்டின் (பிரோலா) உறவுக்கார வேரியன்ட் என்று சொல்லலாம். மேற்கத்திய பத்திரிகைகளில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த வேரியன்ட் குறித்து கவலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாம் பதட்டம் அடையத் தேவை இல்லை.

“இந்த மூன்றரை ஆண்டுகளை நாம் கவனித்தால் கோவிட் வைரஸ்கள் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேறு விதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்பதை அறியலாம். அதிக வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் ஒமிக்கிரான் வேரியன்ட்கள் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 2022-இல் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையும் அதிகரிக்கவில்லை” என்று டாக்டர் அரோரா தெரிவித்தார்.

JN.1 துணை வேரியன்ட் எப்படி உருவானது?

கொச்சியில் உள்ள தேசிய இந்திய மருத்துவச் சங்கம் (IMA) கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவரும், இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில் SARS-CoV‑2 வைரஸ் பல ஆண்டுகளாக பல மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது என்றும் இந்த வைரஸ் பலவாறாக உருமாறியதன் விளைவாக 2021 நவம்பரில் ஒமிக்கிரான் வேரியன்ட் கண்டறியப்பட்டதுதான் அது தொடர்பாக நடந்த பெரிய அளவிலான மாற்றம் என்றும் அவர் கூறினார்.

“பிற வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது ஒமிக்கிரான் வேரியன்ட் வித்தியாசமானது. அத்துடன் அது கண்டறியப்பட்டதில் இருந்து பல உருமாற்றங்களைக் கண்டுள்ளது” என்று டாக்டர் ஜெய தேவன் கூறுகிறார்.

நவம்பர் 2021-இல் கண்டறியப்பட்டதில் இருந்து ஒமிக்கிரானே பல தொடர் மாற்றங்களை அடைந்துள்ளது எனலாம். அதில் முக்கியமாக இரண்டு வெவ்வேறு ஒமிக்கிரான் துணை லீனியேஜ்கள் ஒரே நபரில் ஒரே செல்லை பாதித்து அவற்றின் மரபணுவை ஒன்றுக்கொன்று இடமாற்றி வேறொரு வேரியன்ட்டாக மாறியது. அதை ஒமிக்கிரானில் நிகழ்ந்த முக்கிய உருமாற்றம் என்று சொல்லலாம். இப்படி நிகழ்வது மிகவும் அரிதானது. “இது நடந்ததால் XBB வேரியன்ட் உருவானது,” 

2023 அக்டோபர் மாதம் வரை XBBதான் பிரதான வேரியன்ட்டாக இருந்தது.

“செப்டம்பரிலோ அக்டோபரிலோதான் BA 2.86 என்ற புதிய வேரியன்ட் கண்டறியப்பட்டது. டேட்டாபேஸ்களை அணுக முடிந்ததால் இந்த வேரியண்ட்டைக் கண்டறிய முடிந்தது. கடந்த மாதத்தில் மற்ற அனைத்து வேரியன்ட்களில் இருந்தும் வேறுபட்ட இந்த துணை வேரியன்ட் கண்டறியப்பட்டது. இது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

டாக்டர் ஜெயதேவனின் கருத்துப்படி BA.2.86 வேரியன்ட் உருமாறியதன் காரணமாக இப்போது புதிதாக வந்துள்ள JN.1 வேரியன்ட் உருவாகியுள்ளது.

JN.1 துணை வேரியன்ட் என்பது என்ன?

“தேசிய அளவில் உள்ள தகவல்களின்படி (டேட்டாபேஸ்) இது மிகவும் பொதுவான துணை வேரியன்ட் அல்ல என்றாலும் இது வேகமாகப் பரவி வருகிறது. இது வேகமாகப் பரவி வருவதால் இயற்கையாகவே இது மிகவும் பொதுவான வேரியன்ட்டாக மாறிவிடும்.” என்கிறார் அவர்.

இந்தப் புதிய வேரியன்ட் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியால் பாதிக்கப்படாது என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. “அதாவது முந்தைய கோவிட் தொற்றுகளுக்கு உடலில் உருவான ஆண்டிபாடிகள் (நோயெதிர்ப்புச் சக்தியைத் தருபவை) இந்த வைரஸிற்கு எதிராக வேலை செய்யாது. உதாரணமாக, A XBB.1.5  பூஸ்டர் டோஸ் செலுத்தி இருந்தால் அது இந்த துணை வேரியன்ட்டிற்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம்.

பிற வேரியன்ட்களைவிட இதன் பரவல் அதிகமாகி விடும் என்று ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பதாக டாக்டர் ஜெயதேவன் கூறினார்.

பொதுச் சுகாதாரச் சிக்கல்கள்

INSACOG-இன் டேட்டாபேஸ் அடிப்படையில் பார்த்தால் கேரளாவில் இன்றைய நிவரப்படி ஒருவருக்கு இந்தப் புதிய வேரியன்ட் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. “இது தொடர்ந்து மக்களிடையே பரவும். வரும் நாட்களில் இதுகுறித்து சரியான தகவல் கிடைக்கக்கூடும்” என்கிறார் அவர்.

வரும் நாட்களில் பலருக்கும் இந்தத் தொற்று பரவி அது உறுதி செய்யப்படலாம். ஆனால் அது ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று சொல்ல முடியாது. எனவே பொது மக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறார் அவர்.

கோவிட் வைரஸானது சிலிண்டர் வடிவில் இருக்கும். எனவே இது பல, கால இடைவெளிகளில் பரவக்கூடியதாகும். எத்தனை பேருக்கு இது பரவுகிறது என்று சுகாதார அதிகார அமைப்புகள் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். இது அதிகம் பேருக்கு பரவும்பட்சத்தில் மக்கள் சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் பின்பற்றி வந்தாலே இதைச் சமாளித்து விடலாம்.

ஒருமுறை தொற்று பாதித்தவர்கள் மீண்டும் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இது உடலில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று டாக்டர் ஜெயதேவன் சொல்கிறார்.

ஜீனோமிக் சர்வைலன்ஸும் எபிஜீனோமிக் சர்வைலன்ஸும் 2020-இல் மேற்கொள்ளப்பட்ட அதே  தீவிரத்துடன் இப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்கிறார் டாக்டர் அரோரா. “நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்றும் அவர் கூறுகிறார்.

புதிய JN.1 துணை வேரியன்ட்டில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுதல்

நாம் பின்பற்ற வேண்டிய சில அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர் ஜெயதேவன் வழங்குகிறார், அவை:

  • உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்
  • சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் – யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்திடுங்கள்
  • காற்றோட்டம் இல்லாத, மக்கள் அதிகம் கூடுகின்ற இடத்தில் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக் கவசத்தை அணிந்திடுங்கள்.
  • நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூடுதல் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

சில காலம் கழித்து நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தவுடன் மக்கள் சற்றே ரிலாக்ஸ் ஆகலாம். அதுவரை சுகாதார அதிகார அமைப்புகள் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

பூனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் வைராலாஜியின் சமீபத்திய தகவலின்படி கேரளாவில் ஒருவருக்கு கோவிட்டின் சமீபத்திய துணை வேரியன்ட்டான JN.1 தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓமிக்கிரானின் துணை வேரியன்ட், வழக்கமான ஜீனோமிக் சர்வைலன்ஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வேரியன்ட்டின் பரவல் அதிகம் இருப்பதன் காரணமாக கவலை நிலவினாலும்  இந்தியாவில் கோவிட் தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால் இந்தியாவில் உள்ள நிபுணர்கள் அதுகுறித்து வருந்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
பெருந்தமனி தடிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால்தான் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுரை
முடி உதிர்தல் பொதுவாக மரபியல் சார்ந்தது, ஆனால் அது ஏற்படுவதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன
கட்டுரை
புதியவர்கள் முதல் தொழில்முறை மராத்தான் வீரர்கள் வரை, தசைப்பிடிப்பு யாரை வேண்டுமானாலும் எதிர்பாராத விதமாகத் தாக்கும். போதுமான நீரேற்றம் மற்றும் சரியான ஓய்வு போன்ற நடவடிக்கைகள் இதில் உதவும்
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.
கட்டுரை
நாள்பட்ட மூட்டு வலியானது வயது, தேய்மானம், காயங்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உட்பட பல அடிப்படைக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். மோசமான உணவு, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அதை இன்னும் மோசமாக்கும்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.