728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

எலும்பு ஆரோக்கியத்திற்கு சப்லிமெண்ட்ஸ் எடுத்தால் என்னாகும்
3

எலும்பு ஆரோக்கியத்திற்கு சப்லிமெண்ட்ஸ் எடுத்தால் என்னாகும்

எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது குறைபாட்டை ஈடுசெய்யும். அதே வேளையில், அதிகம் எடுத்துக்கொண்டால் எதிர்மறையான உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எலும்புகள் வயதுக்கு ஏற்ப மோசமடைகின்றன. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை உயர்த்துகிறது. குறிப்பாக பெண்களில், மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் விரைவாவதால் எலும்பு வலுவிழக்கும். பாலின பேதமின்றி கால்சியம் குறைபாடு எலும்பு தாது அடர்த்தி குறைவது, மக்களில் எலும்புகள் மெலிந்து போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகும். வயது தொடர்பான எலும்பு பிரச்சினைகளைத் தடுக்க முடியாது என்றாலும், அவற்றை குறிப்பிட்ட அணுகுமுறைகள் மூலம் நிர்வகிக்கலாம், அவற்றில் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகிய இரண்டும் அடங்கும். இது ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்கத் தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்க முக்கிய சப்ளிமெண்ட்ஸை எடுத்துக் கொள்வது உள்ளடங்கும்.

அத்தியாவசிய எலும்பு சுகாதார சப்ளிமெண்ட்ஸ்

கால்சியம் மனித உடலில் மிகுதியாக உள்ள கனிமமாகும், அதைத் தொடர்ந்து மெக்னீசியம்; இதில் பெரும்பாலானவை எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படுகின்றன.

“வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு உருவாவதற்கு இன்றியமையாதவை” என்று பெங்களூரு ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் எலும்பியல் நிபுணர் டாக்டர் மோகன் கரிசங்கப்பா புட்டசாமி கூறுகிறார். “கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் கே ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தைச் சீராக்க இன்றியமையாத கூடுதல் மருந்துகள்.”

எலும்பு சுகாதார சப்ளிமெண்ட்ஸ் இரண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூருவின் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகரும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பவன் செப்பி கூறுகையில், “சிலர் தங்கள் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கக் கூடுதல் மருந்துகளைப் பயன்படுத்தும்போது, மற்றவர்கள் எலும்பு அடர்த்தி குறையும் ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளில் சிகிச்சை நோக்கத்திற்காக இதைப் பயன்படுத்துகின்றனர்.”

எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது ஏன் முக்கியம்?

ஒரு சராசரி வயதுடையவருக்கு ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது. நபரின் வயது, உடல்நலம் மற்றும் அவர்கள் பாலூட்டுகிறார்களா அல்லது கர்ப்பமாக இருக்கிறார்களா போன்ற காரணிகளின் அடிப்படையில் இது மாறுபடலாம்.

“ஒரு இந்திய உணவில் சராசரியாக 600-700 மி.கி கால்சியம் கிடைக்கிறது, இது குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. ராகி [விரல் தினை] மற்றும் ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக இருந்தாலும், கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டை ஈடு செய்ய முடியும்” என்று டாக்டர் புட்டசாமி கூறுகிறார்.

“ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோபீனியா, பிந்தைய எலும்பியல் அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று, தசைநார் புனரமைப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் வயதானவர்கள் மற்றும் பலவீனமான எலும்புகள் உள்ளவர்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க எலும்பு தொடர்பான நிலைமைகளுக்குச் சிகிச்சையளிப்பதில் எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் தவிர்க்க முடியாதவை” என்று டாக்டர் செப்பி கூறுகிறார்.

கால்சியம் + வைட்டமின் டி 3 சேர்க்கை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்

சிறந்த கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் டி 3 உடன் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

“தனியாக எடுத்துக் கொண்ட கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எலும்பு ஆரோக்கியத்தியத்திற்கு  பயனுள்ளதாக இருக்காது. 200 சர்வதேச யூனிட் வைட்டமின் டி உடன் குறைந்தது 500 மி.கி எலிமெண்டல் கால்சியம் இருக்க வேண்டும்” என்று டாக்டர் புட்டராஜு கூறுகிறார்.

குடல் அதிக கால்சியத்தை உறிஞ்சாததால், மேம்பட்ட கால்சியம் உறிஞ்சுதலுக்கு பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைச் சேர்ப்பது தேவைப்படுகிறது.

“மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின் டி 3 போன்ற வைட்டமின்கள் கால்சியத்தை குடல் முழுவதும் மற்றும் இரத்த ஓட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும், அங்கு அது பின்னர் வளர்சிதை மாற்றமடைந்து எலும்பு அடர்த்தியை அதிகரிக்க எலும்பில் சேர்க்கப்படுகிறது” என்று டாக்டர் செப்பி கூறுகிறார்.

மெக்னீசியம் குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க உதவும் மெக்னீசியத்துடன் பல கால்சியம் சேர்க்கைகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. மெக்னீசியம் மற்றும் போரான் போன்ற பிற நுண்ணூட்டச்சத்துகளைக் கொண்ட மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மற்றொரு தேர்வு.

வயது மற்றும் எலும்பு ஆரோக்கியத் துணைத் தேவைகள்

ஆண்டுகள் முன்னேறி, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மோசமடையத் தொடங்கும் போது, வயதானவர்களுக்கு எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் மிகவும் முக்கியமானதாகிறது.

“பெண்களில், கர்ப்பம், பாலூட்டுதல் அல்லது மாதவிடாய் நின்ற காலங்களில் தேவை அதிகரிக்கும் போது எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் எடுக்கலாம்” என்று டாக்டர் செப்பி கூறுகிறார்.

“ஆண்களில், ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் அடர்த்தியையும் பராமரிக்க 45 வயதுக்கு மேல் எடுக்கப்படுகிறது. இருப்பினும், ஆரம்பத்தில், எலும்பு முறிவுகள், ஊட்டச்சத்துக் கோளாறுகள், நோய்த்தொற்றுகள், புற்றுநோய்கள், பிறவி நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் போன்ற உடலின் எலும்பு கட்டமைப்பை பாதிக்கும் நிலைமைகளுக்கும் இது பரிந்துரைக்கப்படலாம், “என்று அவர் மேலும் கூறுகிறார்.

சில நபர்களில், குறிப்பிட்ட வளர்சிதை மாற்ற நிலைமைகள் உள்ளன, அவை எலும்பில் கால்சியம் மற்றும் தாதுக்களின் அடர்த்தியை அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ் தவிர்க்கப்பட வேண்டும்.

அதிகப்படியான சப்ளிமெண்ட் உட்கொள்ளும் ஆபத்து

கால்சியம் அதிகமாக உட்கொள்ளும்போது அது நன்றாக உறிஞ்சப்படாது. அதிக அளவு சப்ளிமெண்ட்ஸ் எதிர்மறையான தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடும்.

“கால்சியம் சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான பயன்பாடு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக கற்கள், எலும்பு வலி மற்றும் நீரிழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்” என்று டாக்டர் செப்பி கூறுகிறார்.

“ஆரோக்கியமான நபர்கள் அதிகப்படியான கால்சியம் உட்கொள்வது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 5-10 சதவீதம் அதிகரிக்கிறது. இது மலச்சிக்கலையும் ஏற்படுத்தக்கூடும். வைட்டமின் டி அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு நச்சுத்தன்மையை அடையும்போது, அது தலைவலி, வாந்தி அல்லது குமட்டலை ஏற்படுத்துகிறது” என்று டாக்டர் புட்டசாமி கூறுகிறார்.

எனவே, சப்ளிமெண்ட்ஸின் அளவைக் கண்காணிப்பது முக்கியமானது.

“சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கான காரணம், காலம், அது எடுக்கப்பட்ட நிலை மற்றும் ஒருவர் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கத் தொடங்கிய வயது போன்ற காரணிகள் வருடத்திற்கு இரண்டு முறையாவது நிபுணரால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். அதனால் தற்போதைய தேவையின் அடிப்படையில் சப்ளிமெண்ட்ஸ் நிறுத்தப்படலாம் அல்லது ஒழுங்குபடுத்தப்படலாம்” என்று டாக்டர் செப்பி கூறுகிறார்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

  • கால்சியம், வைட்டமின் டி, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு ஆஸ்டியோபீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் தேவைப்படுகிறது.
  • இந்தத் தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுக்கு இயற்கை ஆதாரங்கள் இருப்பதால், குறைபாட்டை நிவர்த்தி செய்ய மட்டுமே கூடுதலாக எடுக்கப்பட வேண்டும்.
  • எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸை அதிகமாக உட்கொள்வது எதிர்மறையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது, மேலும் வைட்டமின் டி நச்சுத்தன்மை தலைவலி, வாந்தி அல்லது குமட்டலை ஏற்படுத்துகிறது.
  • எலும்பு ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸின் அளவை தவறாமல் கண்காணிப்பது அவசியம்.

 

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.