728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

பக்கவாதம் தொடர்பான முன்னெச்சரிக்கை
7

பக்கவாதம் தொடர்பான முன்னெச்சரிக்கை

பக்கவாதம் எந்த வயதினரையும் பாதிக்கலாம். இருப்பினும், சில ஆபத்துக் காரணிகள் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

Stroke risk factors

மூளை தொடர்ந்து உடலுடன் தொடர்பில் இருக்கிறது. நமது சுற்றுப்புறங்களுக்கு தகுந்த எண்ணங்கள், செயல்கள், இயக்கங்களை வழங்க அது தொடர்ந்து இயக்குகிறது. உடலின் இந்தக் கட்டுப்பாட்டு மையமானது அதன் செயல்பாட்டிற்கு இரத்த ஓட்டத்தில் இருந்து பெறும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் சீரான பகிர்வை நம்பியுள்ளது. இந்தப் பகிர்வில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது மூளையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் அதையொட்டி உடலின் செயல்பாடுகள் பாதிப்படையும்.

மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது பக்கவாதம் அல்லது ‘மூளைத் தாக்குதலுக்கு’ வழிவகுக்கிறது. தடுக்கப்பட்ட அல்லது சிதைந்த இரத்த நாளங்கள் மூளை செல்களை மூளைக்குள் விரைவாக இறக்கச் செய்கின்றன. பக்கவாதத்தால் பாதிக்கப்படும் மூளைப் பகுதிகள் அதன் செயல்பாட்டை இழப்பதால், உடல் ரீதியில் பக்கவாதம் அல்லது பேச்சு இழப்பாக வெளிப்படுகிறது.

எந்த வயதிலும் பக்கவாதம் வரலாம் என்று பெங்களூருவின் பிரைன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர், தலைவர் மற்றும் இயக்குநர் டாக்டர் என்.கே.வெங்கட்ரமண விளக்குகிறார். இருப்பினும், சில ஆபத்து காரணிகள் செயல்படும் போது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. “இந்த ஆபத்து காரணிகள் கட்டுப்படுத்தக்கூடியவை, கட்டுப்படுத்த முடியாதவை, நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என வகைப்படுத்தலாம்,” என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆபத்து காரணிகளை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வது பக்கவாதத்தைத் தடுக்க உதவும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

  1. பக்கவாதம் ஏற்படக் காரணமான உடல்நலப் பிரச்சினைகள்

உயர் இரத்த அழுத்தம்

பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இல்லாமல் மெதுவாக அதிகரிக்கும், உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான மற்றும் மாற்றக்கூடிய ஆபத்து காரணியாக உள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, இரத்த அழுத்த அளவீடுகள் 140/90 மிமீ எச்ஜி அல்லது அதற்கு மேல் அடையும் போது, அது தமனிகளில் அதிக அழுத்தத்தை செலுத்துகிறது. இது இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு முன்முயற்சி நடவடிக்கையாக, டாக்டர் வெங்கடரமணா இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணிக்கப் பரிந்துரைக்கிறார். “பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலமும், உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ள இதய ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பதன் மூலமும், வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமும், மன அழுத்தத்தை நிர்வகிப்பதன் மூலமும் உயர் இரத்த அழுத்தத்தை எளிதாக நிர்வகிக்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் ஒழுங்குபடுத்தப்படாத இன்சுலின் அளவுகள் பல்வேறு கோளாறுகளின் ஆபத்தை அதிகரிக்கும். இதற்கு பக்கவாதமும் விதிவிலக்கல்ல. நீரிழிவு நோயில், சர்க்கரை இரத்தத்தில் குவிந்து, மூளை உட்பட பல்வேறு உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்தை கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவானது சிறுநீரகம் மற்றும் கண்களுக்கு (நீரிழிவு விழித்திரை) செல்லும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கலாம். தடுக்கப்பட்ட இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்பட்டு, இதன் விளைவாக பக்கவாதம் ஏற்படுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க உதவும்.

அதிகக் கொழுப்புச் சத்து

இரத்தம் கொலஸ்ட்ராலை இரண்டு மூலங்களிலிருந்து பெறுகிறது – கல்லீரல் மற்றும் நாம் உண்ணும் உணவு. உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்கிறது; எனவே, அதிகப்படியான கொலஸ்ட்ரால் நமது உணவில் இருந்து வருகிறது. மூளையில் உள்ளவை உட்பட இரத்த நாளங்களில் கூடுதல் கொலஸ்ட்ரால் குவிந்து, இரத்த நாளங்களைச் சுருக்கி, இறுதியில் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

இதய நிலைமைகள்

இதயத்தின் சில நிலைகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, கரோனரி தமனி நோய் தமனிகளில் பிளேக் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது, இது மூளைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதய வால்வு குறைபாடுகள், ஒழுங்கற்ற இதய தாளங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட இதய அறைகள் போன்ற பிற இதய நிலைகளும் இரத்த உறைவு உருவாவதைத் தூண்டி, பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

சிக்கில் செல் (sickle cell) இரத்த சோகை

சிக்கில் செல் இரத்த சோகை என்பது ஹீமோகுளோபினை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அரிவாள் வடிவிலான அல்லது ‘சி’ வடிவிலான சிவப்பணுக்களை உற்பத்தி ஆகும். இந்த அரிவாள் வடிவ செல்கள் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல முடியாது மற்றும் இரத்த நாளங்களில் தங்கி, இது மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடுப்பதுடன் பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும்.

 

  1. வாழ்க்கை முறை காரணிகள்

தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் சுகாதார நிலைமைகளைத் தாண்டி பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பாதிக்கின்றன என்பதை டாக்டர் வெங்கட்ரமணா எடுத்துக்காட்டுகிறார். இருப்பினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்றுக்கொள்வது இந்த ஆபத்தை தீவிரமாக குறைக்க முடியும், அவர் வலியுறுத்துகிறார்.

உணவுக் காரணிகள்

பக்கவாதத்தைத் தடுப்பதில் நாம் உண்ணும் உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் பக்கவாதம் மற்றும் பிற இதய நோய்களுடன் தொடர்புடையவை ஆகும். மேலும், அதிகப்படியான உப்பு (சோடியம்) உட்கொள்வது இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும்.

உடல் செயல்பாடு

வழக்கமான உடல் செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய அங்கமாகும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை செயலற்ற தன்மை விளைவிக்கலாம். “உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்” என்கிறார் டாக்டர் வெங்கட்ராமன்.

மது அருந்துதல்

அதிகப்படியாக ஆல்கஹால் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இது இரத்த ஓட்டத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது, இது தமனிகளின் கடினத்தன்மைக்கு வழிவகுக்கும்.

புகையிலை பயன்பாடு

புகையிலை பயன்பாடு, குறிப்பாக சிகரெட் புகைத்தல், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். புகைபிடித்தல் இதயம் மற்றும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது, இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். புகையிலையில் உள்ள முக்கிய அங்கமான நிகோடின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், சிகரெட் புகையிலிருந்து வரும் கார்பன் மோனாக்சைடு இரத்தத்தின் ஆக்ஸிஜனை சுமக்கும் திறனைக் குறைக்கிறது. புகைப்பிடிப்பதை மறைமுகமாக வெளிப்படுத்துவது கூட – அதாவது பேசிவ் ஸ்மோகிங் – பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

  1. கூடுதல் காரணிகள்

பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குடும்பங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் தனிப்பட்ட பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

மரபியல்

உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் பிற தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் போன்ற நிலைமைகளை மரபணு காரணிகள் பாதிக்கின்றன. பக்கவாதத்தின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்கள் தங்கள் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய பொதுவான சுற்றுச்சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம். புகைபிடித்தல் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளுடன் மரபணுவிலும்  இந்த பாதிப்பு இருந்தால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மேலும் அதிகரிக்கும்.

வயது

பக்கவாதம் ஏற்படும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. CDC படி, 55 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இரட்டிப்பாகிறது. “பக்கவாதம் 65 வயதிற்குட்பட்ட நபர்களையும் பாதிக்கலாம். அதோடு, 15 முதல் 49 வயதுடைய இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு தோராயமாக ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுகிறது” என்று டாக்டர் வெங்கட்ரமணா கூறுகிறார்.

இளம் வயதினரிடையே பக்கவாதம் ஏற்படும் இந்த அதிகரிப்புக்கு உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காரணமாக கூறப்படுகிறது.

பாலின வேறுபாடுகள்

ஆண்களை விட பெண்களிடையே பக்கவாதம் அதிகமாக உள்ளது, மேலும் எல்லா வயதுப் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம். “PCOD, கர்ப்பம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு ஆபத்து காரணிகளை அதிகரிக்கலாம்” என்கிறார் டாக்டர் வெங்கட்ராமன்.

இந்த ஆபத்து காரணிகளைக் கவனித்த போதிலும், சில நேரங்களில், பக்கவாதத்தைத் தடுப்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும், பக்கவாதத்தின் போது, ஒவ்வொரு நிமிடமும் கணக்கிடப்படுகிறது. உடனடி சிகிச்சை மூலம் மூளை பாதிப்புகளை குறைக்கலாம்.

பக்கவாதத்தின் அறிகுறிகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் ஒருவர் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். விரைவாகச் செயலாற்றுவதால் இதனால் ஏற்படும் உயிர்பலியைத் தவிர்க்கலாம்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
பெருந்தமனி தடிப்பு காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவதால்தான் பெரும்பாலான பக்கவாதம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கட்டுரை
முடி உதிர்தல் பொதுவாக மரபியல் சார்ந்தது, ஆனால் அது ஏற்படுவதைத் தடுக்க, சிகிச்சையளிக்க அல்லது தாமதப்படுத்த சில வழிகள் உள்ளன
கட்டுரை
புதியவர்கள் முதல் தொழில்முறை மராத்தான் வீரர்கள் வரை, தசைப்பிடிப்பு யாரை வேண்டுமானாலும் எதிர்பாராத விதமாகத் தாக்கும். போதுமான நீரேற்றம் மற்றும் சரியான ஓய்வு போன்ற நடவடிக்கைகள் இதில் உதவும்
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.
கட்டுரை
நாள்பட்ட மூட்டு வலியானது வயது, தேய்மானம், காயங்கள் மற்றும் தன்னுடல் தாக்கக் கோளாறுகள் உட்பட பல அடிப்படைக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். மோசமான உணவு, குறிப்பாகப் பதப்படுத்தப்பட்ட உணவு அதை இன்னும் மோசமாக்கும்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.