728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Liver health: கல்லீரலை பாதிக்கும் 7 விஷயங்கள்
4

Liver health: கல்லீரலை பாதிக்கும் 7 விஷயங்கள்

ஒரு எளிய, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை நடைமுறைகள் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன

செரிமானம் மற்றும் நச்சு நீக்கம் முதல் கொலஸ்ட்ரால் மேலாண்மை வரை, உங்கள் கல்லீரல் ஒரு பல்பணி உறுப்பு ஆகும், இது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய உடலியல் செயல்பாடுகளிலும் பங்கு வகிக்கிறது. கல்லீரல் நோய்களின் மிகவும் ஆபத்தான அம்சங்களில் ஒன்று, அறிகுறிகள் ஆரம்பத்தில் வெளிப்படையாக இல்லாததால், இந்த நிலைமைகளில் பெரும்பாலானவை அவற்றின் தொடக்கத்தின் போது பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன.

கல்லீரல் திசுக்கள் சில சுய-குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டிருந்தாலும், கல்லீரல் ஆரோக்கியச் சிக்கல்கள் விரைவில் கண்டறியப்பட்டு கவனிக்கப்பட வேண்டும். இருப்பினும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க முடியும் என்பது ஆறுதல். கல்லீரல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் அவ்வப்போது கல்லீரல் பரிசோதனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் சில பொதுவான வாழ்க்கை முறை ஆபத்து காரணிகளைப் பட்டியலிட, ஹேப்பியெஸ்ட் ஹெல்த் நிபுணர்களுடன் உரையாடியது.

  1. புகைபிடித்தல்

சிகரெட்டை நீண்ட காலம் புகைப்பதால், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படும் ஆல்கஹாலிக் கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) உருவாகும் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது.

நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட புகையிலைப் புகையில் உள்ள நச்சுகள் மற்றும் புற்றுநோய்கள் கல்லீரல் செயல்பாட்டை சீர்குலைப்பதாக புனேவில் உள்ள சஹ்யாத்ரி மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் க்ஷீதிஜ் கோத்தாரி விளக்குகிறார். புகைபிடித்தல் கல்லீரல் அழற்சி மற்றும் ஃபைப்ரோஸிஸுக்கும் பங்களிக்கிறது, இது சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது.

 

 

  1. கட்டுப்பாடற்ற உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ்

உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்படுவதைக் கல்லீரல் உறுதி செய்கிறது. அதிகப்படியான நச்சுகளை உட்கொள்வது மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் கல்லீரலைச் சேதப்படுத்துகிறது. கல்லீரல் நச்சுத்தன்மைக்கான பொதுவான ஆதாரம் உணவு மற்றும் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆகும். குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி, கட்டுப்பாடில்லாமல் எடுத்துக்கொள்ளும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் பிற உடற்பயிற்சி சப்ளிமெண்ட்ஸைச் சொல்லலால். வைட்டமின் A மற்றும் D போன்ற அதிகப்படியான கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் கல்லீரல் திசுக்களில் சேமிக்கப்பட்டு கொழுப்புக் கல்லீரல் நோயை ஏற்படுத்தலாம்.

வைட்டமின் A அளவு அதிகமாக இருக்கும்போது, நச்சுகளை வளர்சிதைமாற்றம் செய்து அகற்றும் கல்லீரலின் திறன் பலவீனமடைகிறது என்று டாக்டர் கோத்தாரி விளக்குகிறார். வைட்டமின் A நீண்டநாள் அல்லது அதிகமாக உட்கொள்வது இறுதியில் வைட்டமின் A ஹெபடோடாக்சிசிட்டி மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். கல்லீரல் பாதிப்பைத் தவிர்க்க, உங்கள் அன்றாட உணவிலேயே கிடைக்கின்ற இயற்கை சப்ளிமெண்ட்ஸை சார்ந்திருக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

  1. மது அருந்துதல்

நீண்ட காலம் மருந்து அருந்தும் பழக்கம் இருந்தால் அது கல்லீரல் திசுக்களை வீக்கமடையச் செய்து அதில் புண் ஏற்பட வழிவகுக்கிறது, அத்துடன் அதன் செயல்திறனும் பாதிக்கப்படுகிறது.

அதிகப்படியான மது அருந்துவதால கல்லீரலில் அது தொடர்ந்து வளர்சிதைமாற்றத்திற்கு உட்படுவதன் காரணமாக, ஆல்கஹால் கொழுப்புக் கல்லீரல் நோய், ஆல்கஹால் ஹெபடைடிஸ் (மஞ்சள் காமாலை), மற்றும் இறுதியில், ஈரல் அழற்சி, சிரோசிஸ் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று தெற்காசிய கல்லீரல் நிறுவனத்தின் நிறுவனரும் மூத்த கல்லீரல் நிபுணரும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் டாம் செரியன் விளக்குகிறார்.

ஓர் ஆய்வின்படி, உணவு நேரம் தாண்டியபிறகு மது அருந்துவதும், ஒரே நேரத்தில் பல்வேறு வகையான மதுபானங்களை அருந்துவதும் ஆல்கஹாலால் தூண்டப்பட்ட கல்லீரல் பாதிப்பை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

  1. சர்க்கரை மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள்

“அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள் மற்றும் பானங்களை வழக்கமாக உட்கொள்வது ஆல்கஹால் அல்லாத கொழுப்புக் கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்” என்று டாக்டர் செரியன் கூறுகிறார். சர்க்கரை குளிர்பானங்கள் மற்றும் டயட் சோடாக்கள் அதிக அளவு சர்க்கரையை ஃபிரக்டோஸ் வடிவில் கொண்டிருக்கின்றன. அவை உங்கள் கல்லீரலை ஓவர்லோட் செய்யும். சர்க்கரை பானங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும், நீரேற்றத்திற்கான தண்ணீருக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் பரிந்துரைக்கிறார்.

வழக்கமான குளிர்பானங்கள் மற்றும் பழ பானங்கள் அதிக ஃபிரக்டோஸ் கார்ன் சிரப் (HFCS) அல்லது சர்க்கரையின் முக்கிய ஆதாரங்களாகும். வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, குளிர்பானங்களை உட்கொள்வது வளர்சிதை மாற்ற நோய்க்குறியிலிருந்து சுயாதீனமாக NAFLD இன் பரவலை அதிகரிக்கும்.

  1. பயன்படுத்திய ஊசியைப் பயன்படுத்துதல்

டாக்டர் கோத்தாரி, ஸ்டெரைல் செய்யப்படாத ஊசியின் மூலம் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் அபாயங்களை எடுத்துக் காட்டுகிறார், குறிப்பாகக் கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் தொற்று ஹெபடைடிஸ் C நோயால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. அசுத்தமான கருவிகள் அல்லது கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் மூலம் பச்சை குத்திக்கொள்வதன் மூலம் ஹெபடைடிஸ் C பரவலாம்.

ஹெபடைடிஸ் B மற்றும் C ஆகியவை இரத்தத்தால் பரவும் நோய்கள், அவை அசுத்தமான ஊசிகளைப் பயன்படுத்துவதால் பரவக்கூடும் என்று டாக்டர் செரியன் கூறுகிறார். ஹெபடைடிஸ் C உள்ள ஒருவருக்கு டாட்டூ பார்லர்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் போன்ற இடங்களில் ஊசிகள் அல்லது ரேஸர் பிளேடுகள் பயன்படுத்தப்பட்டால், அவற்றைப் பயன்படுத்திய உடனேயே கிருமி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும், ஏனெனில் அவை வைரஸை அடுத்த வாடிக்கையாளருக்குக் கடத்தும்.

  1. குறைந்த நீர் உட்கொள்ளுதல்

நீரானது நச்சுகளை அகற்ற உதவுகிறது. அத்துடன் கல்லீரல் அதன் செயல்பாடுகளைத் திறம்பட செய்ய அதற்குப் போதுமான தண்ணீர் தேவைப்படும். கொல்கத்தாவின் ஃபோர்டிஸ் ஆனந்த்பூரில் உள்ள ஆலோசகர் இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் கிரிஷானு பானிக், நீரிழப்பைத் தவிர்க்க போதுமானளவு தண்ணீர் குடிப்பது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று வலியுறுத்துகிறார்.

இது கல்லீரல் வழியாக இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது, ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் போன்ற நச்சுகளைத் திறம்பட வடிகட்ட அனுமதிக்கிறது. நீரிழப்பு ஏற்பட்டால், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் கல்லீரலின் திறன் பாதிக்கப்படும்.

  1. இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுதல்

இரவில் அதிக உணவை உட்கொள்வது மற்றும் விரைவில் தூங்குவது கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் செரியன் விளக்குகிறார். உறங்குவதற்கு முன் உணவு முழுமையாக ஜீரணிக்கப்படாவிட்டால், கல்லீரலில் கொழுப்பு குவிந்து, காலப்போக்கில் அதைச் சேதப்படுத்தும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரவில் இலகுவான உணவை உண்ணவும், படுப்பதற்கு குறைந்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் முன்பே சாப்பிட்ட்டுவிடுவது நல்லது.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

17 − 8 =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.