728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Fatty liver & pregnancy: அதன் அபாயம்
1

Fatty liver & pregnancy: அதன் அபாயம்

பொதுவாக கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாதப் பருவத்தில் கல்லீரல் செல்களுக்குள் திடீரென்று கொழுப்பு படிவதால் தீவிரக் கொழுப்பு கல்லீரல் ஏற்படக்கூடும், இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படலாம்.

Acute fatty liver of pregnancy is a rare but serious complication during the third trimester of pregnancy

கர்ப்பத்தின் போது ஏற்படும் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) என்பது பொதுவாகக் கர்ப்பத்தின் மூன்றாவது மும்மாதப் பருவத்தில் ஏற்படும் ஒரு கடுமையான சிக்கலாகும். இது மிகவும் அரிதானது என்றாலும், நிபுணர்கள் இந்த நிலையைக் கர்ப்பம் தொடர்பான சுகாதார அவசரநிலைகளில் ஒன்றாக பட்டியலிடுகின்றனர்.

ஈரல் நோய் வல்லுநரும் (hepatologist) மற்றும் திட்ட இயக்குனர், வயது வந்தோருக்கான ஈரல் இயல் (Hepatology) மற்றும் கல்லீரல், கணையம் மற்றும் குடல் மாற்று சிகிச்சைக்கான மாற்று மருந்து மையம், மும்பையில் இருக்கும் நானாவதி குறைந்து மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவருமான டாக்டர் சேத்தன் ரமேஷ் கலால், DM, கர்ப்பத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) என்பது கல்லீரல் செல்களுக்குள் திடீரென கொழுப்பு படிவதால், கல்லீரலின் செயல்திறன் இறுதியில் கல்லீரல் முற்றிலும் செயலிழந்து போவதற்கு வழிவகுக்கும் என்று விளக்குகிறார். இந்த நிலை, கல்லீரலின் கடுமையான மஞ்சள் அட்ராபி (yellow atrophy) என்றும் அழைக்கப்படுகிறது, இது தாய் மற்றும் கரு இருவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். 

கர்ப்பத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) சிக்கல் ஏற்பட என்ன காரணம்?

 சென்னை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த, இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் நீலமேகம் தோப்பா கபாலி, கர்ப்ப காலத்தில் கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களால் இந்த நிலை ஏற்படுகிறது, மேலும் இதைக் கணிப்பது கடினம். கர்ப்பத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், சில சமீபத்திய ஆராய்ச்சிகள் கொழுப்பு அமிலங்கள் உடையும் போது ஏற்படும் மைட்டோகாண்ட்ரியல் செயலிழப்பு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கொழுப்பு அமிலம் உடைவதற்கு முக்கியமான நொதிகளில் ஒன்று காணாமல் போய், அதிகப்படியான கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் கலால் குறிப்பிடுகிறார். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சமநிலையும் இந்த நிலையை வெளிப்படுத்துவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

“ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் கணிசமான ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுகின்றன, இது கொழுப்பு வளர்சிதை மாற்றம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றச் செயல்முறைகளைப் பாதிக்கலாம். அவை கொழுப்பு படிவு மற்றும் கல்லீரல் செயல்பாடு திடீரென மோசமடைவதற்கு வழிவகுக்கும்” என்று டாக்டர் கலால் மேலும் கூறுகிறார்.

கல்லீரலில் சாதாரணமாகக் கொழுப்பு உள்ளடக்கம் ஐந்து சதவிகிதம் இருக்க வேண்டும். இருப்பினும், கர்ப்பத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) உள்ள பெண்களில், இது 13 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இந்த அதிகப்படியான கொழுப்பு வைப்பு, ஹெபடோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் அம்மோனியா (கொழுப்பை உடைக்கும் செயலில் ஈடுபடும் கல்லீரல் செல்கள்) ஆகியவை கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளாகும்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 கர்ப்பம் தரிக்கும் போது ஒரு பெண்ணின் உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று டாக்டர் கபாலி கூறுகிறார். ஆகவே, மது அருந்துவதைத் தவிர்ப்பது , எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் ஆரோக்கியமான உணவுடன் சிறந்த சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது இன்றியமையாததாகும். ஒரு பெண் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பாகவும் கவனமுடனும் இருக்க வேண்டும்,  கடுமையான கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கக் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

வழக்கமான பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்பு (prenatal care) மிகவும் முக்கியமானது என்றும் டாக்டர் கலால் சுட்டிக்காட்டுகிறார். வழக்கமான பரிசோதனை மூலம் மருத்துவரால் தாய் மற்றும் கருவின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க முடியும். மேலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் (Recreational drugs) மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது முக்கியம். போதுமான ஓய்வு, மன அழுத்த மேலாண்மை, உடனடி மருத்துவ கவனிப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

கர்ப்பத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் (AFLP) கரு அல்லது குழந்தையைப் பாதிக்குமா?

“அது நிகழும் மூன்றாவது மும்மாத பருவத்தைப் பொறுத்து, AFLP குழந்தையின் மீது மாறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தும்” என்று டாக்டர் கபாலி தெரிவிக்கிறார். இது போன்ற நிகழ்வுகளால் முன்கூட்டியே பிரசவம் அதாவது, ஏழாவது மாதத்திலேயே குழந்தை பிறந்து விடும். இதன் காரணமாகப் பிறந்த குழந்தை  வளர்ச்சியின்மையால் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கூடுதலாக, கருவில் இருக்கும் குழந்தைக்கு பொதுவாக இரத்தச் சர்க்கரைக் குறைவு (குறைந்த சர்க்கரை) ஏற்படலாம் என்று டாக்டர் கலால் எடுத்துக்கூறுகிறார். “கொழுப்பு அமில வளர்சிதை மாற்றத்தில் உள்ள குறைபாடு காரணமாக, குழந்தைக்குக் குறை சர்க்கரை மற்றும் வலிப்பு ஏற்படலாம்.” என்று அவர் கூறுகிறார். எனவே, நாம் மிகவும் விழிப்பாக, அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

 கர்ப்ப காலத்தில் கடுமையான கொழுப்பு கல்லீரல் சிகிச்சை

முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் உடனடி மருத்துவத் தலையீடு ADLP இல் முக்கியமானவை. ஒரு நபர் கண்டறியப்பட்டவுடன், தாய் மற்றும் கரு இரண்டையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று டாக்டர் கலால் விளக்குகிறார்.

இது போன்ற சூழ்நிலையில் அவசரமாகப் பிரசவத்தை நடத்த வேண்டும். “பிரசவத்திற்குப் பிறகு AFLP சரியாகிவிடும், தாயின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும்” என்று டாக்டர் கபாலி விளக்குகிறார். பிரசவம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் கல்லீரல் செயலிழப்பு சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்தானது.

“பெரும்பாலான நிகழ்வுகளைப் போதுமான மருத்துவப் பராமரிப்பு, ஆரம்பக்கால நோயறிதல் மற்றும் உடனடியாகப் பிரசவிக்கச் செய்தல் மூலம் கையாள முடியும்” என்று டாக்டர் கலால் தெரிவிக்கிறார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் கர்ப்பத்தின் கடுமையான கொழுப்பு கல்லீரல் மிகவும் தாமதமாகக் கண்டறியப்பட்டு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவர் கூறுகிறார்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

  • கர்ப்பத்தின் கடுமையான கொழுப்பு கல்லீரல் ஓர் அரிதான ஆனால் கடுமையான நிலை. இது பொதுவாக மூன்றாவது மும்மாதப் பருவத்தில் ஏற்படுகிறது.
  • மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவது இந்த நிலையின் பொதுவான அறிகுறியாகும். இது கண்டறியப்பட்டவுடன், தாய் மற்றும் கரு இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
  • இது தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், உடனடியாகப் பிரசவிக்கச் செய்தல் மட்டுமே இதற்கான சிகிச்சையாகும்.

 

  • குறிப்பாகக் கர்ப்ப காலத்தில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதும், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் சிக்கல்களைத் தவிர்க்க மிகவும் முக்கியமாகும்.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

4 × two =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.