728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Healthy lungs food: நுரையீரலுக்கு ஏற்ற உணவு
4

Healthy lungs food: நுரையீரலுக்கு ஏற்ற உணவு

உண்ணும் உணவு எந்தத் தடையுமில்லாமல் எளிதாகச் சுவாசிக்க உதவ வேண்டும். ஆரோக்கியமான உணவின் மூலம் சுவாச பிரச்சனைகள் & அழற்சி அபாயம் குறையும்.

Lung-friendly foods to add to your diet

ஆரோக்கியமான உணவு முறை மூலம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நன்றாகச் சுவாசிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தட்டில் இருக்கும் உணவுப் பொருட்களானது, உங்களுடைய நுரையீரல் திசுக்களின் செயல்பாடு முதல் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் விதம் வரை, உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 புது தில்லியில் உள்ள இந்தியன் ஸ்பைனல் இன்ஜுரிஸ் சென்டரின் (ISIC) இரைப்பைக் குடலியல் (gastroenterology) துறையின் மூத்த ஆலோசகர் டாக்டர் அங்கூர் ஜெயின் கூறுகையில், “நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்கவும், சுவாசப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சரிவிகித உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது.” என்கிறார்.

 உங்கள் நுரையீரலுக்கும் உங்கள் உணவுக்கும் இடையில் இருக்கும் இணைப்பு என்ன?

 ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease (COPD)) மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நுரையீரல் நோய்களை எதிர்கொள்வதில் ஒரு நபரின் உணவு முக்கியமானது, ஹைதராபாத், தெலுங்கானாவில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், நுரையீரல் நிபுணரான டாக்டர் கோபி கிருஷ்ண யெட்லபதி கூறுகையில், “நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்குக் காரணமான காரணிகளில் மூன்றில் ஒரு பங்கை உங்களின் உணவு முறைக் கொண்டுள்ளது. எனவே, நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் சரிவிகித உணவு முக்கியமானது.” என்று அவர் கூறுகிறார்.

 

வைட்டமின்கள் (A, C மற்றும் E), தாதுக்கள் (மெக்னீசியம் மற்றும் செலினியம்) மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (antioxidants) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நுரையீரல் திசுக்களைப் பராமரிக்கவும் மாசுகள் மற்றும் நச்சுகளால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவும். “பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நல்ல  கொழுப்புகள் போன்ற சில உணவுகள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பல்வேறு நுரையீரல் நோய்களுடன் தொடர்புடைய நாள்பட்ட அழற்சியைக் குறைக்க முடியும்” என்று டாக்டர் ஜெயின் விளக்குகிறார்.

 நுரையீரல் தொடர்பான நோய்கள் மற்றும் காசநோய், நுரையீரல் சீழ் போன்ற நோய்த்தொற்றுகள் அல்லது நாட்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் தொற்றுகள் உள்ளவர்களுக்குக் குறைந்த கார்போஹைட்ரேட், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது என்று பெங்களூரு, சக்ரா வேர்ல்ட் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சச்சின் குமார் கூறுகிறார். “புரதச் சத்து குறைபாட்டால் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். சோயா பீன்ஸ், முளைக் கட்டிய தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்” என்று  கூறுகிறார்.

 மேலும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நம்முடைய நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். டாக்டர் யெட்லபதி கூறுகிறார், “நெல் உமி அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது பாமாயிலை பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்தச் சமையல் எண்ணெய்கள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் பண்புகளைக் கொண்டுள்ளன மேலும் அவை நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று கருதப்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.

 நுரையீரலுக்கு உகந்த உணவு: ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease (COPD)) போன்ற நுரையீரல் கோளாறுகள் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும்

 காசநோய் (TB) ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

 காசநோய் மற்றும் பூஞ்சைத் தொற்று போன்ற சுவாசப் பிரச்சனைகள் இருப்பவர்கள், மீன், கோழி மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கும் இறைச்சிகள் உட்பட அதிகப் புரதச் சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் யெடலபதி தெரிவிக்கிறார். மேலும்  அவர்கள் “முட்டைகள் புரதங்கள் மற்றும் ஒமேகா-3 போன்றவற்றில் கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.

 

ஆஸ்துமா இருக்கும் போது பின்பற்ற வேண்டிய  உணவு முறைகள்

 ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்களுக்கு சில உணவுகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது, இதுபற்றி டாக்டர் யெட்லபதி கூறுகையில், “இவர்கள் தங்களுடைய உணவில் அதிகளவில் பீட்ரூட் மற்றும் ஆப்பிளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால், முட்டை மற்றும் மீன் போன்றவற்றையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு இவர்கள் உலர் பழங்களையும் சாப்பிடலாம்.

 ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம் மற்றும் எலுமிச்சை பழம் போன்ற பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர் யெட்லபதி கூறுகிறார். “இந்த உணவுகள், குறிப்பாக வாழைப்பழங்களில், ஹிஸ்டைடின் கொண்ட சில புரதங்கள் உள்ளன. எனவே, அவை அதிகச் சளி மற்றும் கோழையை உருவாக்கும். சாக்லேட்டுகளை, குறிப்பாக பிரவுன் சாக்லேட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் விளக்குகிறார்.

 பாதாம், விதைகள், சுவிஸ் சார்ட், கடுகு கீரைகள், காலே, ப்ரோக்கோலி மற்றும் ஹேசல்நட்ஸ் போன்ற வைட்டமின் E  நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்க நுரையீரல் அறக்கட்டளை பரிந்துரைக்கிறது. இந்த பட்டியலில் டோகோபெரோலும் (tocopherol) இருக்கிறது, இது இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கப் பயன்படுகிறது.

 

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்களுக்கான (chronic obstructive pulmonary disease (COPD)) உணவுமுறைகள்

 டாக்டர் யெடலபதியின் கூற்றுப்படி, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) உள்ளவர்கள் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் புரதச் சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். “முட்டை, மீன் மற்றும் கொழுப்புக் குறைந்த இறைச்சிகள், அத்துடன் தக்காளி, பூசணிக்காய் மற்றும் பீட்ரூட், போன்றவற்றை COPD உள்ளவர்கள் அதிகளவில் தங்கள் உணவில் எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். இவர்கள் டீ அல்லது காபி அருந்தலாம், அதிலும் க்ரீன் டீ அருந்த ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று டாக்டர் யெட்லபதி மேலும் கூறுகிறார்.

 நுரையீரல் புற்றுநோய் இருக்கும் போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுமுறைகள்

 நுரையீரல் புற்றுநோய்க்கு என்று உணவில் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. “இருப்பினும், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புகையிலை, மது மற்றும் எண்ணையில் பொறித்த மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதே நேரத்தில், பேரிச்சம்பழம் போன்ற உலர்ப் பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை நோயை எதிர்த்துப் போராட உதவும், குறிப்பாக இதில்

அழற்சி எதிர்ப்பு குணங்கள் அதிகளவில் இருக்கிறது,” என்று டாக்டர் யெட்லபதி கூறுகிறார்.

மேலும், 2019 ஆம் ஆண்டு ஜமா ஆன்காலஜி (JAMA Oncology) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில்,  நார்ச்சத்து மற்றும் தயிர் அதிக அளவில் உட்கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறைகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. தயிர் அல்லது யோகார்ட் போன்றவை சளி உற்பத்தியை அதிகரிக்கும் என்று பலர் கருதுகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல” என்று டாக்டர் யெட்லபதி கூறுகிறார். “நீங்கள் உட்கொள்ளும் தயிர் குளிர்ச்சியாக இல்லை என்பதை மட்டும் உறுதி செய்ய வேண்டும். இதில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற நல்ல கனிம சத்துகள் இருக்கிறது, இவை நுரையீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும்.” என்று அவர் கூறுகிறார். 

நுரையீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, தவிர்க்க வேண்டிய உணவுகள்:

 நுரையீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில உணவு வகைகளை நாம் தவிர்க்க வேண்டும் அல்லது மிதமாக உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஜெயின் விவரிக்கிறார்:

 

பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணையில் பொறித்த  உணவுகள்: இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கெட்ட கொழுப்புகளும், சோடியமும் அதிக அளவில் இருக்கிறது. இவை அழற்சியை ஏற்படுத்தும். உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்வதால் சிறுநீர்த்தேக்கம் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும்.

 

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள்: சோடா, சில சக்தி கொடுக்கும் பானங்கள் போன்றவை சுவாசப் பிரச்சனைகளை  அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையவை. ஆகவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

 

கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள்: இத்தகைய உணவுகளால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும், அத்துடன் நுரையீரல் செயல்பாடும் குறையும் என்கிறார் டாக்டர் ஜெயின். குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு இல்லாத பால் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகள்: உணவு அலர்ஜியால் சுவாசப் பிரச்சனைகள் அதிகரித்து, நுரையீரல் பிரச்சினைகளும் அதிகமாகலாம். அதனால் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருட்கள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து அவற்றை உங்கள் உணவில் இருந்து விலக்குவது நல்லது.

தெரிந்துகொள்ள வேண்டியவை

 நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் உங்களுடைய  நுரையீரலுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் போது உங்கள் உடல், சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும், ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) போன்ற நுரையீரல் பிரச்சனைகளை நிர்வகிக்கவும் உதவுவதோடு  மட்டுமல்லாமல், நாள்பட்ட வீக்கத்தைக் குறைத்து எளிதாகச் சுவாசிக்க உதவுகிறது.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four + twenty =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.