728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

நீரிழிவால் முதுமை வேகமெடுக்கும்
27

நீரிழிவால் முதுமை வேகமெடுக்கும்

அதிக சர்க்கரை அளவு செல்களின் செயல்பாட்டை பாதிப்பதுடன் முதிர்ச்சி அடையும் வேகத்தைத் துரிதப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

நீரிழிவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோய் படிப்படியாக செல்கள் மற்றும் திசுக்களைச் சீர்குலைத்து, உடல் முதிர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய நீரிழிவு நோய் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் பி கே ஜப்பார் “கோட்பாட்டளவில், நீரிழிவு நோயால் முன்கூட்டிய வயதாவது என்பது நிகழ்கிறது. ஏனெனில் இந்த நிலை அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்துகிறது. திசுக்கள் நிறைய ஆக்ஸிஜன் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு வெளிப்படும்” என்கிறார்.

இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தாவிட்டால், நீரிழிவு உடலின் ஒவ்வொரு உறுப்பு அமைப்பையும் பாதிக்கிறது. புது தில்லியில் உள்ள AIIMS இன் உட்சுரப்பியல் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் கட்காவத், உடலில் உள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அல்லது ஆற்றல் உற்பத்திக்கு குளுக்கோஸைப் பயன்படுத்துகின்றன என்று கூறுகிறார். எனவே, இன்சுலின் இல்லாத அல்லது அதன் பயனற்ற தன்மை காரணமாக செல்களால் குளுக்கோஸைப் பயன்படுத்த முடியாமல் போவதால் அந்த குளுக்கோஸ் இரத்தத்தில் சுற்றுகிறது. அது முன்கூட்டிய வயதாவதற்கு வழிவகுக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

 

நீரிழிவு மற்றும் முதுமை

2019 இல் Diabetologia இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், வயதாவது மற்றும் நீரிழிவு ஒரே மாதிரியான உறுப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது செல்லுலார் முதுமை (வயதுக்கு ஏற்ப மோசமடைதல்) போன்ற இணையான மூலக்கூறு வழிமுறைகளால் இயக்கப்படுகிறது. வயது, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பல்வேறு திசுக்களில் செனெசென்ட் செல்கள் ஏராளமாக அதிகரிக்கிறது.

கட்டுப்படுத்தப்பட்ட சர்க்கரை நிச்சயமாக பிரச்சினையின் அளவைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டாக்டர் கட்காவத் கூறுகையில், கட்டுப்பாடு உகந்ததாக இல்லாவிட்டால், ஒருவருக்கு சிக்கல்களை உருவாகலாம். இது நீரிழிவு நோய் மட்டுமல்ல இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் பிற நிலைமைகளும் கட்டுப்பாட்டில் இருக்க வைக்கும். இது வயதாகும் செயல்முறையை முடக்கும் அல்லது முன்கூட்டிய வயதானதைத் தடுக்க உதவும். “மோசமான குளுக்கோஸ் காரணமாக, அறிகுறி தென்பட்டால் பாலியூரியா, பாலிடிப்சியா மற்றும் பாலிஃபேஜியா ஆகியவை வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.

உயர் இரத்த சர்க்கரை உங்களை வயதானவராகக் காட்டுகிறதா?

இது ஒருவரை உடல் ரீதியாக முதுமையாக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். “நீரிழிவு நோயால் சருமம் வயதாகிவிடும் – ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தோல் உட்பட அனைத்து திசுக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தும்” என்கிறார் டாக்டர் ஜப்பார். “நீரிழிவு நோய் நரம்பியல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது இறுதியில் ஆயுட்காலத்தையும் பாதிக்கும்.”

இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வந்தால் இந்த நிலையுடன் நீண்ட காலம் போராட வேண்டியிருக்கும். “துரதிர்ஷ்டவசமாக, நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், சிலர் பிற உடல்நல சிக்கல்களை எதிர்கொள்ளலாம். இது அவர்களின் ஆயுட்காலம் மட்டுமல்ல, உற்பத்தித்திறனையும் குறைக்கும்,” என்று அவர் கூறுகிறார்.

நீரிழிவு நோயால் முன்கூட்டிய வயதானதை எவ்வாறு தடுப்பது?

முன்கூட்டிய முதுமை நீரிழிவு நோயுடன் மட்டுமல்ல, உடல் உறுப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடு மோசமடைவதோடு தொடர்புடையது என்கிறார் டாக்டர் கட்காவத். “ஒருவர் ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்து, இரத்த அழுத்தம் போன்ற மற்ற எல்லா காரணிகளையும் கட்டுக்குள் வைத்திருந்தால், முன்கூட்டிய வயதானதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.”

நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே உள்ளன, அவை முன்கூட்டிய வயதாவது உட்பட நீரிழிவு சிக்கல்களைத் தடுக்கவும் நிர்வகிக்கவும் உதவும்.

  • நல்ல ஊட்டச்சத்தைப் பின்பற்றுங்கள்
  • நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
  • நல்ல உளவியல் சமூக சூழலை உறுதி செய்யுங்கள்
  • மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்
  • தவறாமல் பயிற்சிகள் செய்யுங்கள்
  • யோகா பயிற்சிகள் நீரிழிவு சிக்கல்களைக் குறைக்க உதவும்

தெரிந்துகொள்ள வேண்டியவை

  • நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும்.
  • நீரிழிவு காரணமாக ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் சீரழிவைத் துரிதப்படுத்தும்.
  • நீரிழிவு இதய பிரச்சினைகள் மற்றும் நரம்பியல் போன்ற பல உடல்நல சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். இது ஒரு நபரின் ஆயுட்காலத்தை பாதிக்கலாம்.
  • முன்கூட்டிய முதுமை உட்பட நீரிழிவு சிக்கல்களைத் தடுக்க, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிற அளவுருக்களையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
  • வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது நீரிழிவு சிக்கல்களை நிர்வகிக்க உதவும்.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.